சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jan 2015

பிறந்த நாள்: களைகட்டும் ஜெயலலிதா சுவர் ஓவியங்கள்!


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ரத்தத்தின் ரத்தங்கள் தீபாவளி, பொங்கலுக்கு மேலாக நினைத்து சந்தோஷபட்டு கொண்டாடி தீர்ப்பார்கள். இந்த வருடம் பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவுக்கு 67வது பிறந்த நாள் வருகிறது. 


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் இருப்பதால், கடந்த வருடங்களை விட இந்த வருடம் மேலும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்து, அதற்கான வேலைகளை இப்போதே போட்டிபோட்டு செய்து வருகிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவி பறிபோன நிலையில் மீண்டும் அவர் முதல்வராகஅதிமுக நிர்வாகிகள் கோவில் கோவிலாக பூஜை புனஸ்காரங்களும், காவடி எடுத்தல், அலகு குத்துவது போன்றவைகளில்  ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற ஜெயலலிதா  பிறந்த நாள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், தஞ்சாவூரில் அதற்கான ஏற்பாடுகள் இப்போதே களைகட்ட தொடங்கிவிட்டன.

உள்ளம் உருகும் அளவுக்கு "அநீதியை அழித்து நீதியை நிலை நாட்ட வந்த நீதி தேவதையே", "மகத்தில் பிறந்த மகராசியே" "மக்களின் முதல்வரே" நீதிதேவதையே என சுவர்களில் உடன் பிறப்புகள் வாய் பிளக்க வைக்கும் வகையிலான வாசகங்களை எழுதி, அதில் ஜெயலலிதாவின் இளமைக் கால மற்றும் நிகழ்கால ஒவியங்களை இடம்பெறச் செய்துள்ளனர். சுவர்களுக்கே புல்லரிக்கும் வகையில் மாவட்டம் முழுக்க பிறந்த நாள் விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன. 

அதிமுக நிர்வாகி ஒருவர், “எப்பவுமே அம்மா பிறந்த நாளுக்கு ராட்சச கேக் , பொது மக்களுக்கு இனிப்பு, தண்ணீர் பந்தல், நலத்திட்ட உதவிகள் என கொண்டாடுவோம். அம்மாவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில், முதல்வர் பதவியில் இல்லாத "மக்களின் முதல்வருக்கு' இந்த வருடம் பெரிய அளவில் விழா நடத்துகிறோம் " என்கிறார் உற்சாகமாக


முக்கிய நிர்வாகி ஒருவர், “ வழக்கமாக அமைச்சர் வைத்திலிங்கம், அம்மா பிறந்த நாளுக்கு .பன்னீர்செல்வம் தலைமையில், இன்னும் சில அமைச்சர்கள் முன்னிலையில் அம்மாவின் வயதுக்குரிய எண்ணிக்கையில் அத்தனை ஜோடிகளுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்துவைப்பார். 

இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் மக்களின் முதல்வர் பிறந்த நாள் விழாவுக்காக நடக்கும் இலவச திருமணத்துக்கு இன்றைய முதல்வர் .பி.எஸ் வருவாரா என்பதுதான் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் வழக்கம்போல இந்த திருமணங்கள் நடக்கும்என்றார். 

No comments:

Post a Comment