சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jan 2015

மோடியைப் புகழும் காங்கிரஸ் தலைவர்கள்...சுதாரிக்காத சோனியா!


காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பிரதமர் மோடியை புகழ்ந்து கொண்டே, பா.ஜனதாவுக்கு தாவவும் தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், கட்சித் தலைமை அதனை மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதே என்ற குமுறல்கள் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளன. 

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்த உடனேயே மோடியை முதல் ஆளாக புகழ்ந்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர். அப்பொழுதே காங்கிரஸில் முணுமுணுப்புகள் எழுந்தன. தொடர்ந்து அவர் மோடியின் 'தூய்மை இந்தியாதிட்டத்தை வெகுவாக புகழபா.ஜனதாவினர் குஷியாகி, காங்கிரஸ் கட்சியை சீண்ட தொடங்கினர். இதனையடுத்து கட்சியின் இமேஜை காப்பாற்ற ராகுல் காந்தியே களமிறங்கினார். மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் விளம்பர நோக்கத்திலானாது, வெற்று விளம்பரத்திற்காக மோடி துடைப்பத்துடன் போஸ் கொடுக்கிறார் என்று கடுமையாக சாடினார். 

இதனையடுத்து விவகாரம் சற்று அடங்கியது. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மோடியை புகழ்ந்து தள்ள, காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பு கிளம்பியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கிருஷ்ணா திரியத், சமீபத்தில் மோடியையும், அவரது தலைமைப் பண்புகளையும் புகழ்ந்து பேசிவிட்டு, அடுத்த சில நாட்களிலேயே பா.ஜனதாவில் ஐக்கியமானார். அவருக்கு தற்பொழுது டெல்லி சட்டசபை தேர்தலில் படேல் நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது பா.ஜனதா.

இதனிடையே ஜனார்த்தன் திவிவேதி என்ற மற்றொரு காங்கிரஸ் தலைவரும் மோடியை சாமான்ய மக்களுக்கு நெருக்கமானவர் என்றும், மோடியின் வெற்றி இந்தியாவின் வெற்றி. என்றும் புகழ்ந்துள்ளதோடு, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தேர்தல் வியூகத்தையும் குறைகூறியுள்ளார்.
இது காங்கிரஸ் உயர் மட்டத்தலைவர்கள் மத்தியில் சலசலப்பை கிளப்பி உள்ள நிலையில், திவிவேதி மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் சோனியா காந்திதுணைத் தலைவர் ராகுல் காந்திக்கு புகார்கள் பறந்தன. 

வேறு சில மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே இதுபோன்று மோடியை புகழ்ந்து கொண்டிருப்பவர்களை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்காமலும், முக்கிய தலைவர்களின் கட்சித் தாவலை தடுக்காமலும் சோனியாவும், ராகுலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்ப, விஷயம் கட்சி மேலிடத்திற்கு எட்டியது. 


இதனையடுத்தே டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் அஜய் மக்கன், மோடியை புகழ்ந்த ஜனார்த்தன் திவிவேதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். 

திவிவேதி தெரிவித்த கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல என்றும், மோடி எந்தவிதத்திலும் இந்தியாவின் அடையாளமாக இருக்க முடியாது என்றும் கூறினார். திவிவேதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கட்சித்தலைமை அதுகுறித்து ஆலோசித்து வருவதாக பதிலளித்தார். 

இதனிடையே தாம் மோடியை புகழ்ந்து பேசியதாக கூறுவதை மறுத்துள்ள திவிவேதி, மோடியை புகழும் நோக்கத்தில் தாம் எதுவும் கூறவில்லை என்றும், தாம் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். 

அவர் இவ்வாறு கூறியுள்ள போதிலும், விரைவிலேயே பா.ஜனதாவில் ஐக்கியமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் கருதுகின்றனர். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் என்றபோதிலும், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரால் கடந்த  காலத்தில் செயல்பட்டதுபோன்று வேகமாக செயல்படமுடியவில்லை. இருப்பினும் அண்மையில் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, கட்சியின் செயல்பாடு மற்றும் நிர்வாகிகள் மட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த சோனியா, இது தொடர்பாக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பி, கட்சியில் இளைய வயதினருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனாலும் அதற்கான பலன் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் கட்சியின் வருங்கால தலைவர் என பார்க்கப்படும் ராகுல் காந்தியிடம் வேகமான செயல்பாடு இல்லை என்ற குமுறல்களும், இதே  நிலை நீடித்தால் கட்சியின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கவலையும் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் நிலவுகிறது.
சரிவிலிருந்து கட்சியை மீட்டெடுக்க நேரு குடும்பத்திலிருந்து இன்னொரு வாரிசுதான் வரவேண்டும்போல! அது பிரியங்காவாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை





No comments:

Post a Comment