தி.மு.க.வின் மகளிர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் கனிமொழி எம்.பி.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவர் பதவிக்கு கருணாநிதி மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அவரது மனுவை 603 பேர் முன்மொழிந்தும், வழி மொழிந்தும் உள்ளதாகவும், கருணாநிதியை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் போட்டி இல்லாமல் கருணாநிதி தி.மு.க. தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்றும் சற்குண பாண்டியன் அறிவித்தார்.

இதையடுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து, பொதுச்செயலாளர் பதவிக்கு அன்பழகன் பெயரில் மட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை 603 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் உள்ளனர். போட்டி ஏதேனும் இல்லாததால் அன்பழகன் ஒருமனதாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதாக சற்குண பாண்டியன் அறிவித்தார்.
அடுத்ததாக பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதை 603 பேர் முன் மொழிந்தும், வழிமொழிந்தும் உள்ளதாகவும், பொருளாளர் பதவிக்கு போட்டி ஏதும் இல்லாததால் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் 3 சட்ட திருத்த தீர்மானத்தைக் கொண்டு வந்து பொதுக்குழு ஒப்புதலை பெற்றார். அதன் பின்னர், தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவித்தார்.
அதன்படி, முதன்மைச் செயலாளர்-துரைமுருகன்.
துணை பொதுச் செயலாளர்கள்-சற்குண பாண்டியன், வி.பி.துரைசாமி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன்.
கொள்கை பரப்புச் செயலாளர்கள்-திருச்சி சிவா, ஆ.ராசா.
மகளிர் அணி செயலாளர்-கனிமொழி எம்.பி.
மாணவர் அணி செயலாளர்-இள.புகழேந்தி.
தொழிலாளர் அணி செயலாளர்-சிங்கார ரத்தின சபாபதி.
இதுதவிர பல்வேறு அணிகளின் செயலாளர்கள், இணை செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன என்று கருணாநிதி கூறினார்.
No comments:
Post a Comment