சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jan 2015

ஓங்கி சொறிஞ்சா ஒன்றரை டன் வெயிட்!

சி நேரங்களில் அரிப்பு ஏற்படும்போது தமக்குத் தாமே சொறிந்து கொள்வதை, உலகின் பேரின்பமாகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். சொறிந்த பின் ஏற்படும் எரிச்சல், உலகின் பெருந்துன்பமாகிப் போவது அடுத்த விஷயம். நமக்கு மட்டுமில்லை; சில நேரங்களில் இது மிருகங்களுக்கும் பொருந்திப் போகிறது. 

தாய்லாந்து காட்டு யானை ஒன்று, உடலில் ஏற்பட்ட அரிப்பு தாங்க முடியாமல், அந்தப் பக்கமாக வந்த மெர்சிடீஸ் பென்ஸ் சில்வர் நிற செடான் காரில் தனது கறுப்பு நிறப் பின்புறத்தைத் தேய்த்து, பென்ஸ் காரைக் கூறு போட்டதுதான் இப்போது தாய்லாந்து டூரிஸ்ட்டினருக்கு மத்தியில் ஹாட் அண்ட் காமெடி சென்சேஷனல் நியூஸ்.



தாய்லாந்தில் உள்ளது காவ் யாய் நேஷனல் பார்க். எக்கோ டூரிஸமான இந்தக் காட்டுப் பகுதியின் ஸ்பெஷல், அந்த ஏரியா யானைகள். சில நேரங்களில், இவை பண்ணும் குறும்புகளால் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகின்றனராம் சுற்றுலாவாசிகள். தாய்லாந்தைச் சேர்ந்த சம்ச்சாய் தனாவத் என்பவர், மனைவியுடன் தனது பென்ஸ் காரில் காவ் யாய் நேஷனல் பார்க்கில் உலா வந்தார். அப்போது எதிரே ஹாயாக வந்து கொண்டிருந்த யானையைக் கண்டதும் அவசர அவசரமாக சம்ச்சாய்யு-டர்ன்அடிக்க முயற்சிக்க... டூ லேட்...!

1500
கிலோவுக்கும் மேல் எடை கொண்ட யானை என்ன நினைத்ததோ தெரியவில்லை;  'நான் ஓங்கி சொறிஞ்சா ஒன்றரை டன் வெயிட்ரா' என்ற ஸ்டைலில் தடாலென குனிந்து, வளைந்து, நிமிர்ந்து சம்ச்சாயின் காரில் முதுகு சொறிய ஆரம்பிக்க... பென்ஸின் பேனட், பம்ப்பர், விண்ட் ஷீல்டு எல்லாம்ஜூராசிக் பார்க்பட பாணியில் தாறுமாறாக நொறுங்கியது. சில நொடிகளுக்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

‘‘
என் மனைவி மிகவும் பயந்து அலறிவிட்டாள். கதவைத் திறந்து ஓடிவிடலாமா என்று கேட்டாள். கதவைத் திறந்தால், நாமும் காரின் நிலைமைக்கு ஆளாக வேண்டியதுதான் என்று நினைத்து, சீட்டை நன்றாகப் பின்புறம் இழுத்துப் பதுங்கிக் கொண்டோம். பின்பு அந்த யானை பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு எஸ்யூவி-க்குச் சென்று தனது பின்புறத்தைச் சொறிய ஆரம்பித்தது. அந்த இடைவெளியில் தப்பிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால், எங்கள் நேரம்எல்லா கதவுகளும் நன்றாகச் சேதமடைந்து லாக் ஆகிவிட்டன!’’ என்று திகில் குறையாமல் சொல்கிறார் சம்ச்சாய் தனாவத்.

பென்ஸுக்குப் பிறகு ஒரு எஸ்யுவி-யில் முகுது சொறிந்த யானை, வசதியாக இல்லாததால் திரும்பவும் பென்ஸ் செடானுக்கே வந்து தனது அரிப்பு தீரும் வரை பாடாய்ப்படுத்தி விட்டதாம். கிட்டத்தட்ட பதினைந்து நிமிட சொறிதலுக்குப் பிறகே, அந்த இடத்தை விட்டு அகன்றதாம் யானை. நல்லவேளையாக - சம்ச்சாய் தம்பதியினருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல்.

‘‘
யானை அநேகமாகமஸ்த்என்னும் இனப்பெருக்க சீஸனில் இருந்திருக்க வேண்டும். இம்மாதிரி நேரங்களில் அதன் தடித்த தோலில் அடிக்கடி அரிப்பு போன்ற அறிகுறி ஏற்பட்டால், யானைகள் உடலுறவுக்குத் தயாராகப் போகின்றன என்று அர்த்தம்! 

இந்த நேரத்தில்தான் சில யானைகள் வன்முறையில் இறங்கி விடுகின்றன. எனவே, யானைகளிடம் பீ கேர்ஃபுல்!’’ என்று சுற்றுலாவாசிகளை எச்சரித்தனர் வனத்துறையினர்



No comments:

Post a Comment