சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Jan 2015

ரெனோ டஸ்ட்டர்... ஆல் வீல் அனுபவம்!


டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் (AWD) மாடலில், ஆஃப் ரோடிங் செல்ல அழைத்தது, சென்னை கிவ்ராஜ் ரெனோ டீலர் டீம். சாதாரண டஸ்ட்டரிலேயே  ஓரளவுக்கு ஆஃப் ரோடிங் செய்ய முடியும். ஆல் வீல் டிரைவ் மாடல் நிச்சயம் அதைவிடச் சிறப்பாக இருக்கும். டஸ்ட்டர் என்ற பெயருக்கான அசல் அனுபவத்தைப் பார்க்கலாம் என கிழக்குக் கடற்கரைச் சாலைக்குச் சென்றோம். மணல் வெளி, மேடு பள்ளங்கள், சேறு என ரெனோ டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் காருக்கு செம டெஸ்ட் காத்திருந்தததுகிவ்ராஜ் ரெனோவின் டஸ்ட்டர் வாடிக்கையாளர்கள் பலரும் அங்கே தங்களுடைய டூ-வீல் டிரைவ் டஸ்ட்டர்களோடு ஆஜராகியிருந்தனர். தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக இருக்கும்ராஜாராம், டஸ்ட்டர் 2-வீல் டிரைவ் மாடல் வைத்திருக்கிறார். அங்கே இருந்த சேறு நிறைந்த பள்ளத்தில் தன்னுடைய டஸ்ட்டரை இறக்கினார். எதிர்பார்த்ததபடியே அது சிக்கிக்கொள்ள... ஜீப் மூலம் காரை வெளியே எடுத்தார்கள். அவரிடம் ஆல் வீல் டிரைவ் மாடலை அதே பகுதியில் ஓட்டிப் பார்க்கச் சொன்னார்கள். காரை அதே சேற்றில் சாதாரணமாக இறக்கி ஏற்றினார். ஆனால், கொஞ்சமும் திணறாமல் ஆல் வீல் டிரைவ் மாடல் சகதியைக் கடந்து வந்தது கண்டு ஆச்சரியமானார். சாதாரண டஸ்ட்டரும், ஆல் வீல் டிரைவ் டஸ்ட்டரும் பார்க்க ஓரே மாதிரி இருக்க, ஒரே இன்ஜினைக் கொண்டிருக்க எப்படி ஆஃப் ரோடிங் பெர்ஃபாமென்ஸில் இவ்வளவு வித்தியாசம் என ஆச்சரியப்பட்டார் ராஜாராம்.   

அடுத்தடுத்த சாகசங்களில் நாமும் காரை டெஸ்ட் செய்தோம். Hill-hold வசதி, மேடுகளில் ஏறிய பின்பு கார் கட்டுப்பாட்டை இழக்கவிடாமல் தடுக்கிறது. Auto, 2WD, 4WD Lock என மூன்று மோடுகளை மாற்றும்போது எந்த சத்தமும் இல்லாமல், சைலண்ட்டாக வயலன்ட் பெர்ஃபாமென்ஸைக் கொடுக்கிறது டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ். அதற்காக ஒரு புரொஃபஷனல் ஆஃப் ரோடிங் வாகனத்திடம் எதிர்பார்க்கும் வித்தைகளை டஸ்ட்டரில் எதிர்பார்க்க முடியாது

டெர்ரா டைகர்ஸ் கிளப்பின் அர்காப்ரவ தத்தா டஸ்ட்டர் ஆல்வீல் டிரைவ் மாடலின் டெக்னிக்கல் ப்ளஸ் பாயின்ட்டுகளை விளக்கினார். 'சில ஸ்டண்ட்டுகளில் ஆஃப் ரோடிங் கில்லியான ஜீப்பைவிட பாதுகாப்பான காராக டஸ்ட்டர் இருக்கிறது. உதாரணத்துக்கு ஜீப்பின் சென்டர் ஆஃப் கிராவிட்டி உயரமாக இருக்கும். இதனால், மேடுகளில் ஜீப்பின் ஸ்டெபிளிட்டியின் மீது மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், டஸ்ட்டரில் சென்டர் ஆஃப் கிராவிட்டி தாழ்வாகவே இருப்பதால், காருக்கு இயற்கையாகவே நல்ல ஸ்டெபிளிட்டி இருக்கிறது. இதனுடன் இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன், நெருக்கமான கியரிங், சிக்கலில்லாத ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் என ஒரு அருமையான ஆஃப் ரோடிங் காராக இருக்கிறது டஸ்ட்டர் ஆல்வீல் டிரைவ் மாடல்.' என்று விளக்கினார் அர்கா


ஆன் ரோட்டில் மிகச் சிறந்த ஓட்டுதல் தரத்தையும், கையாளுமையையும் கொண்டிருக்கும் டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ், ஆஃப் ரோடிங்கில் நம்மை பயமுறுத்தாமல் சாகசங்களைச் செய்கிறது. 'எங்கே காரின் பாகம் ஏதாவது உடைந்துவிடுமோ' என்ற அச்சம் எழவில்லை. டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடலில் ஆஃப் ரோடிங் செய்வது மிக எளிதான காரியமாக இருப்பதுதான் இந்த காரின் மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட்.

'பேசாமல் 2-வீல் டிரைவ் மாடலை, ஆல் வீல் டிரைவ் மாடலுக்கு எக்ஸ்சேஞ்ச் செய்யலாம் என இருக்கிறேன்' என வாடிக்கையாளர் ஒருவர் கிவ்ராஜ் ரெனோ டீலர் டீமை ஒரு லுக்விட, 'நாங்க ரெடி' என டீலர் டீம் உற்சாகம் ஆனது. இதுதான் டஸ்ட்டர் ஆல் வீல் டிரைவ் மாடலின் செல்லிங் பாயின்ட் 

No comments:

Post a Comment