பிப்ரவரி
13ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டிக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணி பற்றி பிரபல வீரர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள அணியை பார்த்துவிடுங்கள். உலகக்கோப்பைக்கான இந்திய அணி : தோனி (கேப்டன்) விராட் கோலி ஷிகர் தவான் ரோஹித் ஷர்மா ரஹானே ரெய்னா அம்பத்தி ராயுடு ரவீந்திர ஜடேஜா அஸ்வின் அக்க்ஷர் பட்டேல் இஷாந்த் ஷர்மா முகமது ஷமி உமேஷ் யாதவ் புவனேஸ்வர் குமார் ஸ்டுவர்ட் பின்னி முத்தரப்பு போட்டிக்கான இந்திய அணியில் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளவர்களின் பட்டியலில் இல்லாத மோஹித் ஷர்மா, தவால் குல்கர்னி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பெரிய ஆச்சர்யங்கள் இல்லையென்றாலும் யுவராஜ் மிஸ்ஸிங் , பிட் இல்லாத ஜடேஜா ஏன்? எதை வெச்சு ஸ்டுவர்ட் பின்னிய எடுத்தீங்க என்று பல கமெண்ட்ஸ். எதை வைத்து அணியை எடுத்தனர் என்பதை பார்ப்போம்... தோள்பட்டை காயத்தால் உலகக்கோப்பை அணியிலேயே சந்தேகமாக இருந்த ரவிந்திர ஜடேஜா முத்தரப்பு போட்டிக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். அவரின் காயம் குறித்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில்தான் இரு தொடர்களுக்கும் அவர் தேர்வு செய்யப்பட்டதாக தேர்வுகுழு வட்டாரங்கள் செல்கின்றன. ஆனாலும் அவர் உலகக்கோப்பையை கருத்தில்கொண்டு முத்தரப்புப்போட்டியில் விளையாடவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். முட்டிக்காயத்தால் அவதிப்பட்டு வரும் இஷாந்த் ஷர்மாவும் அதே - குணமடைந்து விடுவார் என்ற அடிப்படையில் அணியில் தேர்வுசெய்யப்பட்டுள்ளாராம். வழக்கமாக அறிவிக்கப்படும் மாற்றுக்கீப்பர் யார் என்று இந்த முறை அறிவிக்கப்படவில்லை. இதனால் தோனி காயமுறும் பட்சத்தில் அம்பத்தி ராயடு கீப்பராக செயல்படுவார். வழக்கமாக அதிகாரப்பூர்வமான உலகக்கோப்பை அணி அறிவிப்பதற்கு முன் பல முன்னாள் வீரர்கள் தாங்கள் விரும்பும் அணியை வெளியிட்டு சில டிப்ஸுகளையும் தருவார்கள். அதே போல் இந்த முறையும் அவரவர் விரும்பிய அணி என்ன ? பார்ப்போம். ராகுல் டிராவிட்: அவர் முன்னர் வெளியிட்ட அதே அணிதான் அதிகாரப்பூர்வமான அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பரிந்துரையின் பெயரிலேயே இப்பொழுது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு கர்நாடக வீரர் கே.எல்.ராகுல் தேர்வுசெய்யப்பட்டுள்ளாராம். டிராவிட் கை காட்டும் வீரர் பலமுறை மேச் வின்னர் ஆவதால் இவரின் கருத்து எப்போதும் கவனிக்கப்படும். சுனில் கவாஸ்கர்: இவர் வெளியிட்ட அணியில் இருந்து இப்போதைய அணியில் ஒரே மாற்றம். இவர் இஷாந்த் ஷர்மாவுக்கு பதில் மோஹித் ஷர்மாவை சேர்த்திருந்தார். கையை மறைத்து அவர் வீசும் ஸ்லோ பால்கள் ஆஸ்திரேலியாவின் பெரிய மைதானங்களில் ப்ளஸ்ஸாக இருக்கும் என்கிறார். கவாஸ்கர் விரும்பினாலும் கூட அணியில் சேர்க்கப்பட மாட்டார் என எண்ணப்பட்ட மோஹித் ஷர்மா முத்தரப்பு போட்டியில் இடம்பிடித்துள்ளார். ஒப்பனிங் தவான்- ரோஹித் ஷர்மாவின் (இடது-வலது) கூடடணி பவுலர்களின் லைன் லென்த் ஆகியவற்றை குழப்பும் என்பது இவரது கணிப்பு. ரஹானே மூன்றாவதாகவும் கோலி நான்காவதாகவும் களம் இறங்க வேண்டும் என்பது இவர் அட்வைஸ். கபில் தேவ் : இவரது அணியில் இந்திய அணியில் ரெகுலராக இடம்பெறும் அஸ்வின் இல்லை. அதற்கு பதில் கரன் ஷர்மாவை டிக்கடித்திருக்கிறார். மாற்று கீப்பராக ராபின் உத்தாப்பாவை சேர்த்திருக்கிறார். பின்னி மட்டும் மிஸ்ஸிங். மற்றபடி அவர் அறிவித்த அதே அணிதான். கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே : அடிப்படையில் கிரிக்கெட் வீரராக இல்லாவிட்டாலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராக ஆரம்பித்து தனக்கென இமேஜை உருவாக்கிகொண்டார். நுட்பமாக கிரிக்கெட்டை ஆராயும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இவரும் டிராவிட்டும் ஒரே அணியைத்தான் தேர்வு செய்துள்ளனர். இவரின் அதே அணி தேர்வானதில் மனிதர் செம ஹேப்பி. "பின்னிக்கு பதில் உத்தாப்பாதான் வேண்டும் என உள்மனசு சொல்லுது. ஆனா நியூசிலாந்தில் போட்டிகள் இருப்பதால் பின்னியே எனது சாய்ஸ் " என்கிறார். சவ்ரவ் கங்குலி: தாதா அறிவித்த அணியும் கிட்டதட்ட அதே அணிதான். ஒரே மாற்றம். மூன்றாவது ஸ்பின்னர் அக்க்ஷர் பட்டேலிற்கு பதில் ஐந்தாவது வேகபந்துவீச்சாளராக குல்கர்னியை சேர்த்திருந்தார். ஆனாலும் குல்கர்னியை முத்தரப்பு போட்டியில் தேர்வுக்குழுவினர் சேர்த்திருப்பதால் தாதாவும் டபுள் ஹேப்பி. ஸ்ரீகாந்த்: இவர்தான் சென்ற உலகக்கோப்பைக்கான வெற்றி அணியை தேர்வு செய்த குழுவின் சேர்மன். இந்தமுறை இவரது அணியில் தவான் , அக்க்ஷர் பட்டேல் மிஸ்ஸிங் . அதற்கு பதில் முரளி விஜயும் , ராபின் உத்தப்பாவும் சேர்த்திருக்கிறார். வெற்றி அணியில் எப்போதும் ஆல் ரவுண்டர்கள் அதிகம் இருப்பார்கள் என்பது இவரது எண்ணம். ஆக மேலே பிரபலங்கள் தேர்வு செய்த அணியில் டிராவிட், ஹர்ஷா போக்லே அணி அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் அணியும் கிட்டதட்ட ஓரிரு மாற்றங்கள்தான் . இவர்கள் அனைவரும் தேர்வு செய்த அணியிலும் யுவராஜ் சிங் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பழைய சாதனைகளை விட இப்போதைய பெர்பாமன்ஸ் வெச்சுதான் வீரர்கள் எடுக்கவேண்டும் என்பது இவர்களின் கோரஸான எண்ணம். எது எப்படியோ, அணித்தேர்வு ஓவர். இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் பிப்ரவரி 14ஆம் தேதி மோதுகிறது. ஆல் த பெஸ்ட் :) கொசுறு: சென்ற உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்த வீரர்களில் தோனி, கோலி, ரெய்னா, அஸ்வின் ஆகிய நால்வர் மட்டுமே இந்த உலகக்கோப்பை அணியிலும் இருக்கிறார்கள். மும்பையில் நடைபெற்ற அணித்தேர்வில்; ஆஸ்திரேலியாவில் இருந்து தோனியும் , இந்தியாவின் பயிற்சியாளர் டங்கன் ப்ளச்சரும் ஸ்கைப் மூலம் கலந்துகொண்டனர். |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
8 Jan 2015
2015 இந்திய உலகக்கோப்பை அணி - ஒரு அலசல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment