சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jan 2015

மனித கழிவை சுத்திகரித்து குடிநீர்; பில்கேட்ஸ் ஆதரிக்கும் புதுமை திட்டம்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை உலகமகா கோடீஸ்வரராக நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை உலகமகா கொடையாளியாகவும் நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும். கேட்ஸ் பணம் கொட்டும் எந்திரமான மைக்ரோசாப்ட்டின் தினசரி செயல்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சேவை அமைப்புகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக வறுமைவாட்டும் மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயலும் திட்டங்களுக்கு உதவி வருகிறார். இப்போதெல்லாம் அவர் மைரோசாப்ட்டை பற்றி யோசிப்பதை விட நன்கொடை அமைப்பான மெலுண்டா அண்ட் கேட்ஸ் பவுண்டேஷன் பற்றி தான் அதிகம் யோசித்து கொண்டிருக்கிறார்.

அது மட்டும் அல்ல உலகை மாற்றக்கூடிய திட்டம் என தான் நினைக்கும் முயற்சிகளுக்காக எதையும் செய்யத்தயாராக இருக்கிறார். இதற்கான சமீபத்திய உதாரணம், பில் மனித கழிவில் இருந்து தயாரான குடிநீரை தயக்கம் இல்லாமல் குடித்துப்பார்த்து, இந்த சுத்திகரிப்பு திட்டம் பற்றி விரிவாக விளக்கியும் எழுதியிருக்கிறார்.

எப்போதும் மினரல் வாட்டரும் கையுமாக வலம்வரும் மேற்கத்திய மனநிலைக்கு மாறாக பில் சுத்திகரிப்பு நிலையத்தில் தயாரான குடிநீரை குடித்துப்பார்த்திருக்கிறார். அதிலும் மனித கழிவை சுத்திகரிக்கும் மையத்தில் தயாரான குடிநீரை! பெரிய விஷயம் தான் இல்லையா?

எல்லாம் சரி. கழிவை ஏன் குடிநீராக மாற்ற வேண்டும்?

பில் கேட்சும் இந்த கேள்வியை தான் கேட்டு இதற்கான பதிலையும் அளித்துள்ளார்.
ஏனெனில் அதிர்ச்சி அளிக்ககூடிய வகையில் குறைந்த பட்சம் 2 பில்லியன் மக்கள் சரியான கழிவு வசதி இல்லாத கழிவறைகளை பயன்படுத்துவதை பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மற்றவர்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கின்றனர் என்று கூறுபவர் இந்த கழிவுகள் குடிக்கும் நீரில் கலந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடுகிறார். இதனால் ஏற்படும் நோய்கள் ஆண்டுதோறும் 7,00,000 குழந்தைகள் உயிரை பறிப்பதாகவும்,மனித கழிவுகளை அகற்ற பாதுகாப்பான செலவு குறைந்த வழியை உருவாக்க முடிந்தால் இந்த உயிரிழப்புகளை தடுக்கலாம் என்கிறார்.

இந்த வழி நிச்சயம் மேற்கத்திய பாணி கழிவறைகள் அல்ல என்கிறார். ஏனெனில் இவற்றுக்கான கழிவு வசதிகளுக்கு பெரிய அளவில் உள்கட்டமைப்பு தேவை என்பதோடு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நிதி வசதி ஏழை நாடுகளில் இல்லை என்கிறார் அவர்.

இந்த இடத்தில் பில் கேட்சுக்கு இந்த பிரச்சனையில் உள்ள ஆர்வமும் அக்கறையும் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். சேவை அமைப்புகளில் ஆர்வம் கொண்ட பிறகு கேட்ஸ் ஏழை நாடுகளின் கழிவறை பிரச்சனைக்கு சரியான தீர்வு காண்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார். கழிவறையில் புதுமை தேவை என்று அவர் வலியுறுத்தி வருகிறார். இது பற்றி அவர் விரிவாக சிந்தித்தும் எழுதியும் வருகிறார். கழிவறைக்கு தீர்வு காண்பதற்கான புதிய யோசனைகளை அவர் கோரியும் வருகிறார்.

இத்தகைய தீர்வுகளில் ஒன்றாக அவர் கருதும் சுத்திகரிப்பு நிலையத்தை தான் சமீபத்தில் நேரில் சுற்றிப்பார்த்து அங்கு தயாராகும் குடிநீரை குடித்துப்பார்த்து சான்றிதழ் கொடுத்திருக்கிறார். 
இந்த சுத்திகரிப்பு நிலையம் அமெரிக்காவின் சியாட்டில் நகரைச்சேர்ந்த ஜேனிகி பயோஎனர்ஜி நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைந்திருக்கிறது. இந்த திட்டத்தின் பெயர் ஆம்னிபிராசஸர். மனித கழிவுகளை சுத்திகரிக்கும் இந்த மையம் அந்த கழிவை எரித்து குடிநீராகவும் மின்சாரமாகவும் மாற்றுகிறது. அதுவும் எப்படி தெரியுமா? கொஞ்சம் கூட துர்நாற்றம் இல்லாமல். அதோடு அமெரிக்காவில் உள்ள தர கட்டுப்பாட்டுக்கு ஏற்ற வகையில் இதன் செயல்பாடு அமைந்திருக்கிறது.
சும்மா சொல்லக்கூடாது கேட்சை, கழ்வு சுத்திகரிப்பு நிலையங்கள் பற்றி அவர் நன்றாக் அறிந்து வைத்திருக்கிறார்.

பெரும்பாலான கழிவு சுத்திகரிப்பு மையங்கள் கழிவுகளை வேறு வடிவத்திற்கு மாற்றுகின்றன. ஒரு சில மையங்கள் கழிவுகளை திடப்பொருளாக மாற்றி பாலைவனத்தில் கொண்டு போட்டு விடுகின்றன. வேறு சில மையங்கள் கழிவுகளை எரிக்க எரிபொருளை பயன்படுத்துகின்ற்ன. இவை செலவு பிடிக்கும். எனவே ஏழை நாடுகளுக்கு ஏற்றதல்ல.

இந்த சிக்கல்களுக்கு எல்லாம் ஆம்னிபிராசஸர் தீர்வாக இருப்பதாக பில் சொல்கிறார். நீராவி முறையை புதுமையாக பயன்படுத்துவது மூலம் இந்த மையம் க்ழிவை குடிநீராக மாற்றுவதோடு மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. ஆக, இந்த மையம் இயங்க தேவையான மின்சாரம் அதிலேயே உற்பத்தியாவதோடு உபரியாகவும் இருக்கும். ஆக மனித கழிவுகளையும் அகற்றிவிடலாம். குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யலாம். உபரியாக மின்சாரமும் கிடைக்கும்.

இதனால் தான் பில் கேட்சை இந்த திட்டம் கவர்ந்திருக்கிறது. எனவே தான் இதை தனது அறக்கட்டளை மூலம் ஆதரிக்க முன் வந்திருக்கிறார்.

இந்த சுத்திகரிப்பு திட்டத்தின் பின் உள்ள அய்வாளரான பீட்டர் ஜேனிகி இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலையை நேரில் ஆய்வு செய்து இந்த தீர்வை உருவாக்கியுள்ளார். ஜேனிக்கியின் நோக்கமும் சரி அவரை ஆதரிக்கும் கேட்சின் நோக்கமும் சரி ஏழை நாடுகளில் இதை லாபகரமாக கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டமாக உருவாக்குவது தான்.


இந்த நோக்கில் திட்டத்தை முழுமையாக்கும் வகையில் முதல் கட்டமாக ஆப்பிரிக்க நாடான செனகலில் மாதிரி சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க உள்ளனர்உள்ளூர் மக்களின் உதவியுடன் இதை எப்படி செயல்படுத்துவது என்பது உடப்ட பல அம்சங்கள் பரிசிலிகக்ப்பட உள்ளன.

இந்தியா போன்ற நாடுகளுக்கு இது மிகவும் சரியாக இருக்கும் என பில்கேட்ஸ் நம்புகிறார். இந்தியாவில் கிராமப்புற மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பல முன்னோடி தொழில்முனைவோர் தயாராக இருப்பதால அவர்கள் உதவியுடன் இதை செயல்படுத்தலாம் என அவர் கருதுகிறார்.

இந்த சுத்திகரிப்பு மையம் நடைமுறையில் செயல்பாட்டுக்கு வர சிறிது காலம் ஆகலாம். ஆனால் இதன் பின்னே உள்ளே பொறியியல் நுடபம் உற்சாகம் அளிக்கிறது எனகிறார். அதை தான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்துப்பார்த்து சொல்லியிருக்கிறார். இந்த குடிநீர் பாட்டிலில் இருந்து எப்போதும் தான் பருகும் நீர் போலவே இருப்பதாகவும் உற்சாகமாக கூறியுள்ளார்.

புதுமையான சுத்திகரிப்பு திட்டம் பற்றிய பில்கேட்சின் வலைப்பதிவு: http://www.gatesnotes.com/Development/Omniprocessor-From-Poop-to-PotableNo comments:

Post a Comment