சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jan 2015

ஆசை யாரை விட்டது?

நான்காவது முறையாக மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து தொண்டர்களை முணுமுணுக்க வைத்திருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மூன்று முறைக்கு மேல் ஒருவர் ஒரு பதவியில் இருக்கக்கூடாது என்பது விதி. இதனாலேயே பலர் எம்.எல். பதவியை துறந்திருக்கிறார்கள். தற்போது இந்த விதி தளர்த்தப்பட்டிருப்பதாக புலம்புகிறார்கள் அக்கட்சியினர்.

தஞ்சாவூர் மாவட்ட செயலாளராக இருந்தவர் திருஞானம். இவர் கடந்த மூன்று முறையாக மாவட்ட செயலாளராக இருக்கிறார். இப்போது வட்ட செயலாளரை கட்சித் தலைமை மாற்றும் என தொண்டர்கள் நினைத்திருந்தார்கள். அதற்கு ஏற்றார்போல் இவருக்கு மாற்றாக ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த முத்து உத்திராபதி என்பவர் மாவட்டச் செயலாளர் பதவிக்காக காத்திருந்தார்.

கடந்த மாதம் கும்பகோணத்தில் கட்சியின் மாநாடு நடந்தது. இதற்கு மகேந்திரனும், முத்தரசும் வந்திருக்கிறார்கள். அப்போது திருஞானமே தன்னை முன்மொழிவார் என முத்து உத்திராபதி காத்திருந்திருக்கிறார். ஆனால் வந்திருந்தவர்கள் மத்தியில் நானே மீண்டும் மாவட்டச் செயலாளராக இருக்கிறேன் என திருஞானம் சொல்ல, இதை யாருமே மறுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து திருஞானமே மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இதில் கோபமான தொண்டர்கள் இவ்வளவு நாட்கள் கழித்து ஆவணத்தில் ஒரு விளம்பரத் தட்டி வைத்திருக்கிறார்கள். அதில் 'நான்காவது முறையாக மாவட்ட செயலாளராகியிருக்கும் திருஞானத்திற்கு வாழ்த்துக்கள்!' என வாசகங்கள் இருந்திருக்கிறது. இந்த தகவல் கட்சி மேலிடத்திற்கு சொல்லப்பட, விளம்பரத் தட்டி ஒரே நாளில் அகற்றப்பட்டிருக்கிறது.


இது குறித்து அக்கட்சியினர் கூறுகையில், "ஒரு காலத்தில் மூன்று முறைக்குமேல் யாரும் பதவியில் நீடிக்கக்கூடாது என தி.மு. தலைமை அறிவித்தது. அப்போது எழுந்த வீரபாண்டி ஆறுமுகம் இந்த விதி தலைவருக்கும் பொருந்துமா? என கேள்வி எழுப்பினார். உடனே அந்த பேச்சு அத்துடன் நிறைவுற்றது.
இப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் நான்காவது முறையாக மாவட்ட செயலாளர் பதவியை ஒருவருக்கே தந்திருப்பது, மாநிலச் செயலாளர் பதவியை மீண்டும் தா.பாண்டியனுக்கே கொடுக்கும் எண்ணமாக கூட இருக்கலாம்" என்கிறார்கள்.

அதுசரி பதவி ஆசைக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கல்ல போலிருக்கிறது.



No comments:

Post a Comment