உட்கட்சித் தேர்தல் நடத்தி எத்தனை மாற்றங்களை கொண்டு வந்தாலும், தி.மு.கவில் இன்னும் பழைய குறுநில மன்னர்கள்தான் அந்தந்த பகுதிகளை ஆண்டுவருகின்றனர். உதாரணம் விழுப்புரம் என்கின்றனர் அங்குள்ள திமுகவினர்.
விழுப்புரம் மாவட்டத்தை மூன்றாக பிரித்தாலும், இன்றைக்கும் பொன்முடிதான் ஒருங்கிணைத்த மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது அவர்கள் கூறும் குற்றச்சாட்டு. இதற்கு விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் சாட்சியாக இருந்தது.

தி.மு.க சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றியத்திலும் மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி விவசாயி களுக்கு வழங்க வேண்டிய நிலுவைதொகையை உடனே வழங்க கோரி விழுப்புரம் மத்திய மாவட்டம் சார்பில் முண்டியம்பாக்கம் சக்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், தெற்கு மாவட்ட செயலாளர் அங்கயர்கண்ணி ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் சக்கரை ஆலைகள் உள்ளன. வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட செஞ்சி சர்க்கரை ஆலையும், தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தியாகதுருகம் சர்க்கரை ஆலையும் நிலுவைத்தொகை வழங்காத பட்டியலில் உள்ளன.

திமுக உத்தரவின்படி அந்தந்த ஆலைகளுக்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்காமல், மத்திய மாவட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத மஸ்தானையும், அங்கயர்கண்ணியையும் அழைத்து வந்து விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலை முன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள வைத்துள்ளார் பொன்முடி.
‘‘மாவட்ட செயலாளர்களின் அதிகாரத்தை குறைக்க வேண்டும், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தான் தி.மு.க தலைமை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தை முன்றாக பிரித்தனர். ஆனால், பொன்முடி இன்னும் தன்னை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் என்று நினைத்துக்கொண்டு, எத்தனை மாவட்டங்களாக விழுப்புரத்தை பிரித்தாலும் தான்தான் எல்லாருக்கும் மேலே என்பது போல புதியவர்களை செயல்படவிடாமல் தனக்கு கீழே டம்மியாக வைத்துள்ளார் என பொருமித்தள்ளினர், மற்ற வடக்கு தெற்கு மாவட்ட தொண்டர்கள். இதற்கு மாவட்டத்தை பிரிக்காமலே இருந்திருக்கலாம்’’ என்றனர் அவர்கள்.
வடக்கு, தெற்கு மாவட்டத்தில் எந்த கூட்டம் நடந்தாலும் பொன்முடி தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று பொன்முடி ஆதரவாளர்கள், மாவட்டச் செயலாளர்களிடம் கட்டளையிட்டுள்ளனர். அதற்கு ஏற்றார் போல இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பொன்முடி தலைமை யில்தான் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டம். அதனால்தான் தலைவர் அதை 3 ஆக பிரித்துள்ளார். வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்கள் புதியவர்கள் என்பதால், அவர்களுக்கு டிரெயினிங் கொடுக்கத்தான், தற் சமயம் பொன்முடி தலைமையில் எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கிறது. சிறிது காலம் கழித்து அவர்களுக்கு தனித்து இயங்க அதிகாரம் கொடுக்கப்படும்’’ என்கிறார்கள் பொன்முடி ஆதரவாளர்கள்.
கொடுக்கப்படுமா???............ சரியாப் போச்சு !!
No comments:
Post a Comment