சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Jan 2015

வண்ணம் சொல்லும் வியாபார உத்திகள்!

ருவர் ஒரு பொருளை வாங்குகிறார் என்றால் அவருக்கு முதலில் அவர் மனதில் பதிவது அந்த பிராண்டின் பெயர் மற்றும் அந்த பிராண்டின் வண்ணமாகத்தான் இருக்கும், பெயர் கூடச் சில சமயங்களில் வாங்குபவர் உச்சரிக்கும் விதத்தில் இல்லை என்றாலும், வண்ணம் அவரது மனதில் நன்றாகப் பதிந்துவிடும்.


சில சமயங்களில் கடைகளில் சிலர் சிவப்பு நிறத்தில் பாக்கெட் இருக்குமே அந்த பிஸ்கெட் தாருங்கள் என்று கேட்பதைக் காணலாம். நீல நிற சோப்பு, பச்சை நிற டீத்தூள் என கேட்பதைப் பார்த்திருப்போம். ஏதோ ஒரு வண்ணத்தில் இவற்றை அளித்தால் வாங்கிவிடுவார்கள் என்று நினைத்தால் அது தவறு. இந்த வண்ணங்களுக்குப் பின்னால் மிகப் பெரிய வியாபார உத்திகள் உள்ளன. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு விதமான பொருட்களுக்குப் பொருந்தும்.
இப்படித்தான் பல உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பிராண்டிங் செய்கின்றன. இந்த கலர்களுக்கும், பிராண்டின் வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

கலர் சொல்வது என்ன?

ஒரு பிராண்டின் விளம்பரம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அந்தத் தயாரிப்பு நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையிலும், எமோஷனல் மற்றும் ஆக்ரோஷமான நிலையை வெளிப்படுத்தக்கூடிய தயாரிப்பாகவும் இருக்கும். தொடர்ந்து ஆக்டிவ்வாக இருக்கும் விஷயங்களைக் குறிக்கவும் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக யூடியூப் எனும் பிராண்ட் ஒருவர் அனைத்து நேரங்களிலும் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும் என்ற நிலையில் அவரைக் கவர சிவப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்,

இதேபோல் நீல நிறம், பயன்படுத்த எளிதான, தெளிவான விவரம் உள்ள, ஆழமான மற்றும் நிலையான தன்மையைக் குறிக்கும் தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். உதாரணமாக சாம்சங், ஃபோர்டு ஆகிய நிறுவனங்களின் லோகோக்கள் நீல நிறத்தில் காணப்படுவதைப் பார்க்கலாம்.

மஞ்சள் நிற லோகோக்கள் எனர்ஜெடிக் மற்றும் ஃபிரஷ்ஷாக வைத்திருக்க உதவும் பொருட்கள் தயாரிப்பில் அதிகம் காணப்படும். உதாரணமாக மெக்டொனால்டு உணவகத்தின் லோகோ மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த வண்ணத்தில் தயாரிக்கப்பட்டால் அதில் எனர்ஜி தொடர்பான விஷயம் இருக்கும் என்பது வாடிக்கையாளரின் மனநிலை என்று நிறுவனங்கள் கூறுகின்றன.


பச்சை நிற லோகோக்கள் இயற்கை மற்றும் ரிலாக்ஸ் மனநிலையைக் குறிக்கும் விதத்தில் அமைந்திருக்கும். இதற்குச் சிறந்த உதாரணம் ஹமாம் சோப்பு மற்றும் ஸ்டார்பக்ஸ் காபி ஷாப் ஆகியவற்றின் லோகோ பச்சை நிறத்தில்தான் இருக்கும். பெரும்பாலான மூலிகை சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் பச்சை நிறத்தில்தான் இருக்கும்.

பர்ப்பிள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள லோகோக்கள் சற்று ஆடம்பரமான தோரணையையும், கவர்ச்சிகரமான தயாரிப்புகளையும் குறிக்கும் விதமாக வடிவமைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அனைவரையும் எளிதில் கவரும் விதம் பர்ப்பிள் நிறத்தில் யாகூ இணையதளத்தின் லோகோ தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஆரஞ்சு நிறம் மகிழ்ச்சியைக் குறிக்கும் விதமான பொருட்களிலும், கறுப்பு பழமையான பொருட்களைத் தனித்துவப்படுத்துவதிலும், பிரவுன் உதவிகரமாக, நீண்ட காலம் உழைக்கும் தயாரிப்பை அடையாளப்படுத்தவும் பயன்படுகிறது. பிங்க் நிறம் பெண்களுக்கான நிறமாகவும், பெண்கள் தொடர்பான அழகு சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

வண்ணம் வியாபார உத்தியா?

வண்ணங்களை வைத்து இந்தப் பொருட்களின் விற்பனை நிர்ணயிக்கப்படுகிறது என்று கூற முடியாது. ஆனால், வண்ணங்கள் வாடிக்கையாளரைக் கவரும் விதமாக இருக்கிறன்றன. வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் மனதில் வண்ணங்கள்தான் முதலில் இடம் பிடிக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், நிறுவனங்கள் வண்ணங்களை வியாபார உத்தியாகப் பயன்படுத்துகின்றன. இன்னமும் சொன்னால் பெரிய நிறுவனங்களுக்குதான் இந்த வண்ணம் எல்லாம் உதவும் என நினைப்பவர்களுக்கு, உள்ளூர் தொழிலிலும் வண்ணத்தின் தாக்கம் இருக்கிறது என்பது தெரியாத உண்மை. கறுப்பு கலர், ஆரஞ்சு கலர் என்று குளிர் பானங்களைக் கூறுவார்கள். அந்த பிராண்டுகளின் பெயர் தெரியாமல் போனாலும் வண்ணம் விற்பனைக்கு உதவுகிறது.

அதனால், ஒருவர் சிறிய தொழில் ஆரம்பிக்கும்போதுகூட வண்ணங்களில் கவனம் செலுத்தி வாடிக்கையாளரைக் கவரும் விதத்தில் வடிவமைத்தால் உங்கள் எண்ணத்தை இந்த வண்ணம் நிறைவேற்றும்.



No comments:

Post a Comment