சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை வேலம், கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி மாலை வேலை முடித்து ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த 2 பேரில் ஒருவன், ஆசிரியை வேலத்தை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 14 பவுன் சங்கிலி, செல்போன் போன்றவற்றை பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தன் சகாவுடன் தப்பிச் சென்றான்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் ஒருவரால் வீடியோ படமாக எடுக்கப்பட்டு வலைதளம் மூலமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சென்னை போலீஸுக்கு அவமானத்தை ஏற்படுத்தவே... தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி, கொள்ளையில் ஈடுபட்ட நீராவி முருகன் என்பவனை நேற்று துப்பாக்கி முனையில் கைது செய்து (?) சென்னைக்கு கொண்டு வந்தனர். நேற்று மாலை துரைப்பாக்கம் எம்.சி.என். நகரில், அந்தப் பள்ளி ஆசிரியையிடம் ’வழிப்பறி செய்தது எப்படி?’ என்று போலீஸார் முன்னிலையில் நடித்துக் காட்டினான் நீராவி முருகன். அப்போது ஆசிரியை வேலமும் அருகில் இருந்தார். அவருடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான் நீராவி முருகன். இந்தக் காட்சிகளை அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடி நின்று பார்த்தனர். இச்செய்தி, செய்தித்தாள்கள் மற்றும் சேனல்களில் படங்கள் மற்றும் வீடியோவுடன் வெளியாகியிருக்கிறது.
இப்படி நீராவி முருகனை வீதிக்கு அழைத்து வந்து, பாதிக்கப்பட்ட பெண்ணையும் நேருக்கு நேராக சந்திக்க வைத்த விஷயம், பலரையும் பலமாதிரியாக பேச வைத்திருக்கிறது.
சீதா, தனியார் பள்ளி ஆசிரியை
இந்தச் செய்தியை படித்தவுடன் பயங்கர கோபம் வந்தது. இதுபோன்ற டெமோ அவசியமா? தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு இப்படி நடந்திருந்தால், இப்படி ஊரார் பார்க்கும்படி செய்திருப்பார்களா? போலீஸார், தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க முடியுமா?
வி.பாலு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்
இப்படி செய்துகாட்டச் சொல்லி, வீடியோவாக பதிவு செய்து முக்கிய ஆவணமாக வைப்பது இன்றைக்கு வாடிக்கையான செயலாக போலீஸார் செய்து வருகிறார்கள். இதில் தவறு கிடையாது. ஆனால், இந்தக் குற்றச் சம்பவத்தைப் பொறுத்தவரை, இந்தக் குற்றவாளியை பிடிக்க மிகமுக்கியக் காரணம் ஏற்கெனவே கொள்ளையடிக்கும்போது நேரடியாக எடுக்கப்பட்ட வீடியோதான். அதிலேயே சம்மந்தப்பட்ட பெண்ணின் முகம் வெளிவந்துவிட்டது. என்றாலும் இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் முகத்தைத் தவிர்ப்பது நல்லது.
பூமா, சமூக சேவகி
ஏற்கெனவே முன்று கொலை உள்பட பல்வேறு கொள்ளை வழக்குகளும் அவன் மீது இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஊரே பார்க்கும் வகையில் இதை நடத்தி முடித்திருப்பதால், இனி பெண்கள் தங்களுக்கு ஏற்படும் குற்றங்களை, துணிந்து எப்படி புகார் செய்ய முன்வருவார்கள். எத்தனையோ குற்றங்கள் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும்போது, கண்டுபிடித்த ஒரு குற்றவாளியை வைத்து இப்படி விளம்பரம் தேடும் போலீஸாரின் செயல் கண்டிக்கத்தக்கது.
பிரியா, தனியார் நிறுவன ஊழியர்
ஒருவேளை இது போலீஸின் கடமை என்றால், அந்தப் பெண்ணை தனியாக அழைத்துச் செய்ய வேண்டியதுதானே? எதற்கு பொதுமக்கள் முன்னிலையில் குற்றாவளியை கொண்டுவந்து செய்ய வைத்தார்கள். எல்லாவற்றையுமே ஒரே சம்பவமாக பார்க்கும் போலீஸ் மற்றும் மீடியாக்களின் செயல், என்னை மட்டுமல்ல என் தோழிகளையும் வருத்தப்பட வைத்துள்ளது.

No comments:
Post a Comment