சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jan 2015

தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறாமல் இருந்திருந்தால்

1965 களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறாமல் இருந்திருந்தால் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அகற்றப்பட்டு இந்தி மட்டும் இருந்திருக்கும். இவ்வாறு மாறியிருந்தால் தமிழகத்தில் இந்தி எந்த அளவில் புகுந்து என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை குறித்து ஓர் அலசல்.
1. இந்திய ஆட்சிப்பணி, காவல்துறை பணிகளில் (IAS, IPS) தேர்வுகளில் இந்தியில் மட்டுமே கேள்விதாள்கள் கொடுக்கப்படும். தமிழகத்திலிருந்து ஒருவர் கூட IAS, IPS ஆகியிருக்க முடியாது.
2. நெடுஞ்சாலைதுறையால் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகைகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழ் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக்கும்.
3. பாஸ்போர்ட், தொடர்வண்டி சீட்டு, விமான சீட்டு என அனைத்து மத்திய அரசு தொடர்பான ஆவணங்களிலும், இடங்களிலும் இந்தி மட்டுமே இருந்திருக்கும்.
4. ஐஐடி போன்ற மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவு தேர்வு கேள்விகள் ஆங்கிலம் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக்கும். தமிழகத்திலிருந்து ஒருவர் கூட படித்திருக்கமாட்டார்கள்.
5. அனைத்து பள்ளிகளிலும் அனைத்து பாடங்களும் இந்தி வழிக் கல்வியின் (இந்தி மீடியம்) முலமாக படித்திருப்போம்.
6. தமிழகத்தில் உள்ள மத்திய மாநில வேலைவாய்ப்புகள் அனைத்திலும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களால் நிரம்பியிருப்பார்கள்.
7. அரசியல் கட்சிகள் வைக்கும் பெரிய பேனர்கள் அனைத்தும் இந்தியில் இருந்திருக்கும்.
8. வடநாட்டில் இருப்பது போல பேருந்துகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் பெயர்பலகை இந்தியில் தான் இருந்திருக்கும்.
9. தமிழகம் .டி துறையில் இவ்வளவு முன்னேறியிருக்காது. ஆங்கிலம் தெரியாத காரணத்தால் வெளிநாடுகளுக்கு அதிகமான நபர்கள் சென்றிருக்க முடியாது. இந்தி பேசும் மாநிலங்கள் போல தமிழகம் மிகவும் பின்தங்கி இருந்திருக்கும்.
10. சென்னையில் அமெரிக்க தூதரகம் இருந்திருக்காது
11. தமிழில் இவ்வளவு திரைப்படங்கள் மற்றும் இவ்வளவு தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள், இணையதளங்கள் வந்திருக்காது.
12. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என அனைத்திலும் இந்தி மட்டுமே இருந்திருக்கும் . தமிழ் கட்டாயம் இருந்திருக்காது.
13. பிறப்பு இறப்பு சான்றிதல் கூட இந்தியில் தான் இருந்திருக்கும்.
14. தமிழக சட்டமன்றத்தில் பல இந்திக்காரர்கள் உள்ளே புகுந்திருப்பர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்ட மன்றங்களிலும் இந்தி தான் சட்டமன்ற மொழியாக இருந்திருக்கும்.
15. இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் மொழிகளும் இந்நேரம் வழக்கத்தில் இருந்து அழிந்திருக்கும்.
16. வீட்டில் உள்ள குழந்தைகளும் பெற்றோர்களிடம் இந்தியில் தான் பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். இந்தி தெரியாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
17. தமிழகத்தில் தமிழில் வணிகம் செய்ய முடியாத நிலை உருவாகி இருக்கும். இந்தி தெரிந்தவர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழர்கள் செய்த மொழிப் போராட்டத்தின் விளைவாக அனைத்து மாநில மொழிகளும் காப்பாற்றப்பட்டது என்பதில் நமக்கு பெருமையே ! இருப்பினும் இந்திய அரசின் இந்தித் திணிப்பு இன்னும் ஓயவில்லை. தமிழர்களின் மொழிப் போராட்டமும் முடியவில்லை.


No comments:

Post a Comment