சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jan 2015

நின்று விட்ட இதய துடிப்பை ஒரு மணி நேரம் போராடி மீட்டு அரசு டாக்டர்கள் சாதனை!


மாரடைப்பால் நின்று விட்ட இதய துடிப்பை, ஒரு மணி நேரம் போராடி மீட்டுள்ளனர்  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள்.


50
வயதான நோயாளி ஒருவர், நெஞ்சுவலி சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய ரத்த நாளத்தில் அடைப்பு நோய் கண்டறியப்பட்டது.
அறுவை சிகிச்சை நாளில், சிகிச்சை தொடங்கும் முன்பே, நோயாளியின் இதயத்துடிப்பு நின்று விட்டது. ஆனாலும் மயக்கவியல் மருத்துவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு மணி நேரத்திற்குமேல் போராடி நோயாளியின் இதயத்துடிப்பை மீட்டனர்.

அதன்பின் பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களும், செவிலியர்களும் அளித்த தீவிர சிகிச்சையால் நோயாளி தேறி, இதய நோய் குணமாகி நலமடைந்தார்.

நோயாளியின் அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டது. இதற்கு தேவையான உபகரணங்களும் வசதிகளும், மருத்துவமனையின் முதல்வர் மற்றும் துறைத்தலைவரால் அளிக்கப்பட்டன.

இதயத்தின் முக்கிய அறையான இடது வென்ட்ரிகிளுக்கு தேவையான ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டால் திடீரென இதயத்துடிப்பு நின்று உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

ஆஞ்சியோக் ராம் சோதனையில் 5.7 சதவீதம் இந்த நோய் கண்டறியப்படும். இந்த நோய்க்கு முக்கிய சிகிச்சை பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சையால் இந்த நோய் குணமாவதுடன் திடீர் மரண அபாயமும் தவிர்க்கப்படும்.


மருத்துவர்களும், செவிலியர்களும் மற்ற பணியாளர்களும் ஒருமித்து தீவிர சிகிச்சை அளித்ததால் வெகு நேரம் இதயத்துடிப்பு இல்லாதிருந்த நோயாளி உயிருடன் மீட்கப்பட்டார். அதற்கான வசதிகள் அரசு மருத்துவமனையில் போதுமான அளவில் உள்ளன.




No comments:

Post a Comment