சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Jan 2015

லண்டனில் டவுசர் கிழிஞ்சிச்சு!

இங்கிலாந்து அரசப் பரம்பரை இதுவரை சந்திக்காத குற்றச்சாட்டை தற்போது எதிர்கொண்டுள்ளது. இளவரசர் சார்லஸின் தம்பியும் மற்றொரு இளவரசருமான ஆண்ட்ரூ மேல் ஓர் அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 54 வயதாகும் ஆண்ட்ரூ தனது மனைவியான சாராவை 1996-ல் விவாகரத்து செய்துவிட்டார். ஆண்ட்ரூ பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததே விவாகரத்துக்கான காரணம் என்று இங்கிலாந்து பத்திரிகைகள் கிசுகிசுத்தன.


 தற்போது ஆண்ட்ரூவின் மீது குற்றம் சாட்டியுள்ள பெண்ணுக்கு அவரின் மகள்களைக் காட்டிலும் குறைந்த வயது என்பது இங்கிலாந்து பத்திரிகைகளுக்கு இன்னொரு செய்தி. அதற்கு முன்னால் ஒரு முன்கதை சுருக்கம்.

அமெரிக்க ஃபைனான்சியரான ஜெப்ரி எப்ஸ்டின் ஒரு சர்ச்சைக்குரிய நபர். மருந்து கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு நிதியுதவி செய்யும் தொழிலில் உள்ள இவர் மீது இதுவரை 17 பாலியல் புகார் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்துமே 18 வயதுக்கும் குறைவான பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்தியதான குற்றச்சாட்டு. ஆச்சர்யப்படும் வகையில் இந்த வழக்குகளைத் தொடுத்த அனைத்துப் பெண்களும் பாதியில் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டனர். ஜெப்ரியின் பணம்தான் இதற்குக் காரணம் என்று மனித உரிமை அமைப்பினர் முகம் சிவந்தனர்.

அப்படி வழக்கு தொடுத்த ஒரு பெண்ணான வர்ஜீனியா ராபர்ட்ஸ் என்பவரின் வாக்குமூலத்தில் ஜெப்ரியும் இளவரசர் ஆண்ட்ரூவும் தன்னை வற்புறுத்தி பலாத்காரம் செய்ததாகச் சொல்லியிருக்கிறார். அந்த வாக்குமூலம்தான் இப்போது பத்திரிகைகளில் கசிந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் தந்தை, இங்கிலாந்து ராணி இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்றும் ஆண்ட்ரூவைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க, ‘ஆண்ட்ரூவுக்கு எந்தத் தொடர்பும் இல்லைஎன இங்கிலாந்து அரண்மனை மறுத்துள்ளது.

ஆண்ட்ரூவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் தாய்லாந்து டூரில் இருக்கிறார்!




No comments:

Post a Comment