இத்தனை நாட்களாக வாட்ஸ் அப் அப்ளிகேஷனை PC-ல் (பர்சனல் கம்ப்யூட்டர்) இருந்து பயன்படுத்த வேண்டும் என்றால், BlueStacks என்ற ஆண்ட்ராய்டு எமுலேட்டர் சாஃப்ட்வேரைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த சுற்றுவழி பலருக்கு பிடிக்கவில்லை.
லட்சக்கணக்கான பயனீட்டாளர்கள் வாட்ஸ் அப்பிடம் கம்ப்யூட்டருக்கான சாஃப்ட்வேரை வெளியிடும்படி கோரிக்கை வைத்தார்கள். அதற்கு செவிசாய்த்து இப்போது இன்னும் எளிதாக கம்ப்யூட்டரில் இருந்து வாட்ஸ் அப் இயக்குவதற்கு வெப்-அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இதனால், எந்த சாஃப்ட்வேரையும் நாம் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. க்ரோம் பிரவுஸர் இருந்தால் மட்டும்போதும்!
1. ஆப்பிள் iOS ஃபோன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் வாட்ஸ் அப் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் இருந்து இப்போதைக்கு இயக்க முடியாது என்று முதலிலேயே கைவிரித்துவிட்டது வாட்ஸ் அப் டீம். ஆண்ட்ராய்டு, விண்டோஸ், பிளாக்பெர்ரி ஃபோன்களுக்கு மட்டுமே இந்த வசதி!

2. முதலில், ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இருந்து, லேட்டஸ்ட் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இன்ஸ்டால்/அப்டேட் செய்துகொள்ள வேண்டும். விண்டோஸ், பிளாக்பெர்ரி ஃபோன் பயன்படுத்துபவர்கள், அதற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் அப்டேட் செய்து கொள்ளலாம்.
3. கம்ப்யூட்டரில் க்ரோம் பிரவுசர் திறந்து அதில் https://web.whatsapp.com/ என்ற வலைதளத்துக்கு சென்றால், QR கோடு காண்பிக்கப்படும்.
4. உங்கள் ஃபோனில் வாட்ஸ் அப் அப்ளிகேஷன் திறந்து, அதில் Whatsapp Web ஆப்ஷனை(இந்த ஆப்ஷன் எங்கே இருக்கும் என்பதை, https://web.whatsapp.com/ தளத்தின் ஹோம்பேஜிலேயே பார்க்கலாம்) செலெக்ட் செய்தால், QR கோடு ஸ்கேனர் திறக்கும்.
5. இந்த ஸ்கேனர் மூலம், க்ரோம் பிரவுஸரில் காட்டப்பட்டிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்யுங்கள். அவ்வளவுதான்!

6. அடுத்த சில நொடிகளில் உங்கள் க்ரோம் பிரவுஸரிலேயே, உங்கள் ஃபோனில் இருந்ததுபோல வாட்ஸ் அப் பிரதிபலிக்கும். ஃபோனில் இருக்கும் அனைத்து ஆப்ஷன்கள், வசதிகளும் இந்த வெப் அப்ளிகேஷனில் உள்ளன.
7. வெப் அப்ளிகேஷன் சீராக இயங்குவதற்கு உங்கள் ஃபோன் தொடர்ந்து இன்டர்நெட் இணைப்பில் இருக்கவேண்டும்.
8. டெஸ்க்டாப் நோட்டிஃபிகேஷன் வசதியும் உள்ளது.
9. ஃபோனில் இருப்பதுபோல கான்டாக்ட்ஸ், ஆடியோ, லொகேஷன் போன்றவற்றை ஷேர் செய்யும் ஆப்ஷன்கள் இல்லை. இமேஜ், வெப் கேமரா ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கின்றன.
10. வாட்ஸ் அப் வெப் அப்ளிகேஷனின் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால், நாம் இணையத்தில் பார்க்கும்போது ஷேர் செய்யத்தோன்றும் விஷயங்கள் இத்தனை நாட்கள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்வது மகா சிரமமாக இருந்தது. இனிமேல், இணையத்தில் பார்ப்பதை எல்லாம் மிக மிக எளிதாக வாட்ஸ் அப்பில் பகிரலாம்.
No comments:
Post a Comment