சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jan 2015

தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம்: ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!



இலங்கையில் தமிழர்களுக்கு கூடுதல் உரிமைகள் அளிக்கும் 13 ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படும் என்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

1987
ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி  இலங்கை அதிபர் ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கைத்  தமிழர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த குறைகளைத் தீர்ப்பதற்காக ஒரு உடன்பாடு செய்துகொண்டனர்.
இதன்படி இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும்  கிழக்கு மாகாணங்களை இணைப்பது உட்பட பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு 1988 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப் பட்டது. அதன்பின்னர்  இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் பிரச்னைகள் மற்றும்  மாற்றங்களால் 13 ஆவது  சட்டத் திருத்தம் செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில்  ராஜபக்சேவின் தோல்விக்குப் பிறகு 13 ஆவது  சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுவது குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டது. இலங்கையில் 13 ஆவது  சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் மைத்ரிபால சிறிசேனா அதிபரான பிறகு நேற்று இலங்கை நாடாளுமன்றம் முதல்முறையாக கூடியது.
இதில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேசுகையில்," 13 ஆவது சட்டத் திருத்தத்தைத்  திட்டமிட்டபடி முழுமையாக நிறைவேற்றுவோம். இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் யோசனைகள், ஆட்சேபங்கள், குற்றம், குறைகளுக்கு செவிசாய்க்க புதிய அரசு தயாராகவே இருக்கிறது.
தேசிய அளவில் எழும் கேள்விக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும். இது நம் அனைவருக்குமான சவால். நமது நாடாளுமன்றத்துக்கு வெளியே எந்த பிரச்னையையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த புதிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" என்று ரணில் கூறினார்.


No comments:

Post a Comment