சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jan 2015

‘‘குறி அறுத்தேன்’’ -அதிர வைக்கும் கவிதை நூல்!

ருவர்... பிறந்து, வளர்ந்து, படித்து, தனக்கும் தனது சமூகத்துக்கும் பல கொள்கைகளை உருவாக்கி; அதன்படி தொடர்ந்து போராடி, எதிர்வரும் சமூக இன்னல்களையெல்லாம் கடந்து, தங்களுக்கான அங்கீகாரத்தை வலியுறுத்துவதற்காக ரத்தமும், வியர்வையும் சிந்தி, ஒரு திரைப்படத்திலும் நடித்து, இப்போது ஒரு புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்...


இதெல்லாம் ஒரு விஷயமா?’என்று சாதாரணமாகக் கேட்கத்தோன்றும். ஆனால், இதைச் சாதித்திருப்பது ஒரு திருநங்கை எனும்போது ஆச்சர்யம் எட்டிப்பார்க்கிறதுதானே! 

இந்தச் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்... பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்கி எனும் திருநங்கைதான்.
ஒரு மதியவேளையில் அவரிடம் பேசியபோது, ‘‘மூன்றாம் பாலினமான எங்களைப் போன்ற திருநங்கைகள் எதிர்கொள்ளும் சவால்களையும், அவமானங்களையும் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எத்தனை காயங்கள், எத்தனை அவமானங்கள் தினம் தினம் நாங்கள் படுகிறோம் என்பது எங்கள் சமூகத்தைப் பற்றி தெரிந்து உணர்ந்தவர்களால் மட்டுமே அறியமுடியும்

சின்ன வயது முதல் எனக்கு என் குடும்பத்தின் ஆதரவு இருந்ததால், போதிய கல்வி உள்ளிட்ட எல்லாம் எனக்குச் சரிவர கிடைத்தது. ஆனால், எங்கள் சமூகத்தை சேர்ந்த 100-ல் 99 பேருக்கு இதுபோன்று ஆதரவு கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் வீட்டைவிட்டு துரத்தப்படுவதோடு, சமூகத்தின் பல்வேறுவிதமான தாக்குதளுக்கு ஆளாகிறார்கள். ஒடிந்து, நொடிந்து விரக்தியின் கடைசி கட்டத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒரு சிலரே, எல்லாவற்றையும் கடந்து வாழ்கிறார்கள். மற்றவர்களோ, தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். இத்தகைய கொடுஞ்சூழல் தெரிந்திருந்தும்... இந்தச் சமூகம் இன்னமும் எங்களை சரிவர புரிந்துகொண்டு, சகஜீவனாக மதிக்கக்கூட மறுப்பதுதான் கொடுமையிலும் கொடுமை’’ என்று ஆதங்கப்பட்டவர்,


‘‘
பல காயங்களை தினம் தினம் அடைந்துவரும் எங்கள் சமூகத்துக்கு நான் ஏதாவது செய்யவேண்டும் என்றுதான் கடந்த சில வருடங்களுக்கு முன்புசகோதரிஎன்ற சிறுபத்திரிகையை தோழிகள் சிலருடன் சேர்ந்து ஆரம்பித்தேன். பின், அதன்மூலமாக தொடர்ந்து எங்கள் சமூகத்துக்குக் குரல் கொடுத்தோம். பின், தோழிகள் சிலர் ஒன்றினைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசாங்கத்திடம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினோம்.
இதன் பலன்தான் இப்போது இந்தியாவில் எங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்திருப்பது. இதை நாங்கள் அடைய எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். தயவுசெய்து எங்களைப்போன்ற திருநங்கைகளையும் ஒரு மனிதராக, சக ஜீவனாக கருதுங்கள். எங்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஒருபோதும் கெடுதல் செய்யாமல் இருங்கள். அது போதும்’’ என்று வருந்திக் கேட்டுக் கொள்ளும் கல்கி, இந்த ஆண்டு விகடன் பிரசுரம் மூலமாக தனது முதல் கவிதை தொகுப்பான, ‘குறி அறுத்தேன்என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே இதுவரை எந்த திருநங்கையும் செய்யாத சாதனையை இந்த புத்தகம் எழுதியதன் மூலம் இவர் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


‘‘
புத்தகம் எழுதவேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், நான் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எங்கள் சமூகம் குறித்த புரிதலையும், உணர்ச்சிகளையும்.. அழுத்தமான கவிதையாக எழுதி வந்ததை படித்த பலரும், அதை புத்தகமாக வெளியிடச் சொன்னார்கள். அதன்பேரில் விகடன் பிரசுரத்தை அனுகி விருப்பத்தை சொன்னபோது, என் படைப்பை படித்தவர்கள் உடனே அங்கீகரித்து, இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு அதை வெளியிட்டிருக்கிறார்கள். இது எனக்கும், என் சமூகத்துக்கும், என் எழுத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்’’ என்று பெருமையோடு சொன்ன கல்கி, கூடிய விரைவில் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

‘‘
எங்கள் சமூகத்துக்கு ஒரு நாட்டின் குடிமகனுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து அங்கீகாரமும், உரிமையும் கிடைக்க வேண்டும். அது கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். இப்போதைக்கு எழுத்துதான் என் மிகப்பெரிய ஆயுதம்’’ என்கிறார்... மிகுந்த நம்பிக்கையுடன்!
 வெல்லட்டும் போராட்டம்!



No comments:

Post a Comment