சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Jan 2015

15 ரூபாய் செலவில் உப்பு தண்ணீர் நன்னீராகிறது: கல்லூரி மாணவிகள் கண்டுபிடிப்பு

குறைந்த செலவில் உப்பு தண்ணீரை நன்னீராக மாற்றும் நீர்மேலாண்மை குறித்த வடிவமைப்பை காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். இந்த வடிவமைப்பு மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது.

தற்போது அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைப்பது சூரிய ஒளி மட்டுமே. சூரிய ஒளி ஆற்றலை கொண்டு, நீரை ஆவியாதல் முறையில் நன்னீராக மாற்ற முடியும் என்பதை கண்டு பிடித்துள்ளனர், காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு மாணவி கள் கீர்த்திகா, கார்த்திகா, தேவிமுத்து.


அவர்கள் கூறியதாவது:எங்களுடைய கண்டுபிடிப்புக்கு 'டிசாலினேஷன் ஆப் சாலிட் வாட்டர் டூ டிரிங்கிங் வாட்டர்' என பெயர். அதாவது உப்பு நீரை நன்னீராக மாற்றும் செயல்முறை. வீட்டில் உள்ள எளிய வகை பொருட்களை பயன்படுத்தி ரூ.15 மட்டும் செலவழித்து வடிவமைக்க முடியும். உபயோகமற்ற இரும்பு தகரம், ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை எடுத்து, அதன் மீது கறுப்பு 'பெயின்ட்' அடிக்க வேண்டும். கறுப்பு நிறம் சூரிய ஒளியை தன்னுள் இழுக்கும் திறன் வாய்ந்தது. 
அதை அட்டைபெட்டி அல்லது மரப்பெட்டியில் வைத்து இரும்பு தகட்டின் மீது, மூடிய பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். சூரிய வெப்பத்தில் இந்த நீர் ஆவியாகும். ஆவியான நீர் திவலைகளை, பாத்திரத்தில் ஒரு துளையிட்டு ஒரு 'டியூப்பை' செருகி அதை ஒரு பிளாஸ்டிக் 'பாட்டிலால்' சேகரிக்க வேண்டும். மேல்புறத்தில் ஈரத்துணியை போட்டு வைத்தால் வெயிலில் இது பாதிக்காது. 

இவ்வாறு சேகரிக்கப்படும் நீர் திவலைகளை அந்த பாட்டிலில் இருந்து 'டியூப்' மூலம் நமக்கு தேவையான பாத்திரத்தில் பிடித்து கொள்ளலாம். நீர் திவலைகள் வெளியேறும் 'டியூப்பை' 'கிளிப்' போட்டு மூடி வைக்க வேண்டும். பாட்டிலில் திவலைகள் நிரம்பிய பிறகே, இந்த 'கிளிப்பை' திறந்து தண்ணீரை வெளியே எடுத்து கொள்ள வேண்டும். எல்லா பொருளும் வீட்டில் உள்ளதே. நாங்கள் இதை ரூ.15 மட்டுமே செலவழித்து உருவாக்கினோம்.பொருள் இல்லாதவர்கள் அதிக பட்சம் ரூ.100 செலவழித்து இதை உருவாக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் நன்னீராக பெற முடியும். எவ்வாறு கடல் நீர் ஆவியாகி மேலே சென்று, மழை என்ற பெயரில் நன்னீராக உருவாகிறதோ அதை அடிப்படையாக கொண்டு இதை உருவாக்கினோம். 
இதற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்தது கல்லுாரி முதல்வர் ஹேமாமாலினி, இயற்பியல் துறை தலைவர் மெய்யப்பன். மதுரையில் கல்லுாரிகளுக்கு இடையே நடந்த நீர்மேலாண்மை குறித்த போட்டியில் 'இஸ்ரோ' விஞ்ஞானிகளால் பாராட்டப்பட்டு மாநில அளவில் முதலிடத்தையும், அதற்காக ரூ.10 ஆயிரம் பரிசும் எங்களுக்கு கிடைத்தது, என்றனர்
.

No comments:

Post a Comment