சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jan 2015

சூடுபிடிக்கும் மேல் முறையீட்டு மனு விசாரணை

''நீங்கள் யார்? உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்? நீதிமன்றத்துக்குள் ஒழுங்கீனமாக, கும்பல் கும்பலாக நிற்கக் கூடாது. இருக்கைகளில் அமர வேண்டும். நீதிமன்றத்துக்குள் அரசியல் வரக் கூடாது. ஒரு மணி நேரம்கூட வாய்தா கொடுக்க முடியாது'' என்று ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடந்த 5-ம் தேதி முதல் நாள் விசாரணையிலேயே அதிர்ச்சி கூட்டினார்.

ஜெ. தரப்புக்கு எதிராக வாதிட கறுப்புப் பூனை படையோடு சுப்பிரமணியன் சுவாமி கோர்ட்டுக்கு வந்ததால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெ. தரப்பில் நவநீதகிருஷ்ணன், குமார், மணிசங்கர் செந்தில், பன்னீர்செல்வம், அன்புக்கரசு, செல்வகுமார், கருப்பையா ஆகியோரும் தி.மு. சார்பாக குமரேசன், தாமரைச்செல்வன், சரவணன், பாலாஜி, நடேசன், ராமசாமி ஆகியோரும் அரசு தரப்பில் பவானிசிங், மராடி ஆகியோரும் வந்திருந்தனர். இவர்களுடன் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் குணசீலன், சம்பந்தம் ஆகியோர் வந்திருந்தனர்.
''வழக்கின் காட் ஃபாதர்!'
நீதிபதி சரியாக 11:00 மணிக்கு தன் இருக்கையில் அமர்ந்தார். சுப்பிரமணியன் சுவாமி எழுந்தார்...
சு.சுவாமி: இந்த வழக்கில் என்னையும் சேர்த்து வாதிட அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: நீங்கள் யார்? உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு?

சு.சுவாமிஇந்த வழக்கின் முதல் புகார்தாரர். இந்த வழக்கின் காட் ஃபாதர். என்னுடைய புகார் மனுவை ஏற்றுதான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையை விசாரிக்கச் செய்து எஃப்..ஆர்., பதிவு செய்தது. இந்த வழக்கில் நான் வாதிட உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.    
நீதிபதி: அந்த ஆவணங்களையும் கோர்ட்டில் சமர்ப்பியுங்கள். பிறகு பரிசீலித்து உங்களை வாதிட அனுமதிக்கலாம்.
இதை அடுத்து சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தைவிட்டு கிளம்பினார்!
 ''அரசியலை உள்ளே கொண்டுவராதீர்கள்...!'
தி.மு. பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசன் எழுந்தார்...
குமரேசன்: இந்த வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக, சிறப்பு நீதிமன்றம் அனுமதித்ததைப் போல இந்த வழக்கில் எங்களை 3-ம் தர வாதியாக சேர்த்துக்கொண்டு எங்களுடைய எழுத்து பூர்வமான வாதத்தைப் பதிவுசெய்ய வேண்டும்.
நீதிபதி: இந்த வழக்குக்்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
குமரேசன்: 2004-ல் சென்னையில் இருந்து இந்த வழக்கு பெங்ளூருக்கு மாற்ற என் மனுதாரர் அன்பழகன்தான் காரணம்.
நீதிபதி: யார் அந்த அன்பழகன்?
குமரேசன்: தி.மு. பொதுச் செயலாளர். உச்ச நீதிமன்றம் எங்களையும் 3-ம் தர வாதியாக சேர்த்துக்கொள்ள அனுமதித்திருக்கிறது.
நீதிபதி: நீதிமன்றத்துக்குள் அரசியலைக் கொண்டு வராதீர்கள். சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதித்து இருக்கலாம். மேல்முறையீட்டு மனுவில் ஏற்கெனவே வாதி, பிரதிவாதி இருக்கிறார். உங்களைப் போல பலரும் வருவார்கள். மேல்முறையீடு என்பது கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் குற்றச்சாட்டுகள் தவறானது என்பதை வாதிடுவதும் அதை மறுப்பதும்தான். 3-ம் தரப்புக்கு இங்கு வேலை இல்லை.  
குமரேசன்இதுபற்றி விரிவாகப் பேச எங்கள் சீனியர் வழக்கறிஞர் ராகேஷ் நாளை வருவார்.
நீதிபதி: அவர் வருவதற்காகக் காத்திருக்க முடியாது. அவர் உள்ளூரைச் சேர்ந்தவர்தானே உடனே வரவழைக்க முடியாதா?'' என்றவர் பவானிசிங்கைப் பார்த்து, ''என்ன இது? பலரும் உங்களுக்குப் பதிலாக வாதிட கேட்கிறார்கள். ஆட்சேபணை தெரிவிக்கவில்லையா?'' என்றார். பவானி சிங், ''அனுமதிக்கக் கூடாது என்று எழுத்து பூர்வமாக மனு கொடுத்திருக்கிறேன்'' என்றார்.
பின்னர், அன்பழகன் தரப்பு மனுவை வாங்கி, அரசுத் தரப்பையும், ஜெ. தரப்பையும் ஆட்சேபணை மனுத் தாக்கல் செய்யச் சொன்னார்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நீதிமன்றத்துக்குள் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து கடுப்பான நீதிபதி குமாரசாமி, ''இப்படி ஒழுங்கீனமாக கும்பல் கும்பலாக நிற்கக் கூடாது. இருக்கைகள் இருக்கின்றன. அதில் அமர்ந்து அமைதி காக்க வேண்டும்'' என்றார்.
முதல் வார்த்தையே வாய்தா...!
சிறப்பு நீதிமன்ற விவாதத்தின் போது  ஜெயலலிதா தரப்பு மீது வைக்கப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டு நீதிமன்றத்தை நடத்தவிடாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்தார்கள் என்பதுதான். மேல்முறையீட்டு விசாரணையில் ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், மணிசங்கர் ஆகியோரின் முதல் வார்த்தையே வாய்தா வேண்டும் என்று தொடங்கியது.
ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்கறிஞர் குமார் எழுந்து...
குமார்: 12-ம் தேதி வரை எங்களுக்கு வாய்தா வேண்டும்.
நீதிபதிஎதற்கு வாய்தா?
குமார்: டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதிட வர இருப்பதால் 12ம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும்.
நீதிபதிஇந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் 3 மாதங்களில் முடிக்கச் சொல்லியிருக்கிறது. அதனால் ஒரு மணி நேரம்கூட தர முடியாது. நீங்களே மூத்த வழக்கறிஞர்தானே நீங்களே வாதிடலாம்.
குமார்: 3 மாதங்களுக்குள் முடித்து விடலாம்.
நீதிபதிசொல்வதற்கு நன்றாக இருக்கும். முடிப்பது கஷ்டம். அதனால் உங்கள் வாதத்தை ஆரம்பியுங்கள்.
குமார் தனது வாதங்களை எடுத்து வைத்தார்.
''எங்கள் தரப்பு நியாயத்தை குன்ஹா எடுத்துக்கொள்ளவில்லை!'
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பதிவு செய்த குற்றப்பத்திரிகையை வாசித்தார்.
குமார்ஜெயலலிதா பிறந்தநாளில் ஆதரவற்ற அநாதைக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அர்ச்சனா, அடையார் ஆனந்தபவன் போன்ற பல ஸ்வீட் ஸ்டால்களில் ஸ்வீட் வாங்க ரூ.8 லட்சம் செலவு ஆனது. அந்தத் தொகையை செலவுப் பட்டியலில் எடுத்துக் கொள்ளவில்லை.
நீதிபதி: (பவானி சிங்கைப் பார்த்து) ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?
பவானி சிங்: பில் இருந்தால்தானே ஏற்றுக்கொள்ள முடியும்?
என் மனுதாரருக்குச் சொந்தமான கட்டடத்தின் மதிப்பை மிகைப்படுத்திக் காட்டி இருக்கிறார்கள். தகுதி வாய்ந்த வல்லுனர்களைக் கொண்டு அளவீடு செய்யவில்லை. சுதாகரனின் திருமணம் 1995-ல் நடைபெற்றது. ஆனால், திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல், மின்விளக்கு, வாழைத்தோரணம் அனைத்தையும் 1997-ல் கணக்கீடு செய்திருக்கிறார்கள். குத்து மதிப்பாக ரூ.5 கோடி செலவு செய்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். உண்மையில் திருமணத்துக்கு ஆன அனைத்துச் செலவுகளையும் சிவாஜியின் குடும்பத்தார்தான் செய்தார்கள். இப்படி எங்கள் தரப்பு நியாயங்கள் எதையும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எடுத்துக்கொள்ளவே இல்லை!

''கன்னடம் தெரியுமா..?'
குமார்: ஆரம்பத்தில் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்த குற்றச்சாட்டுகளும், அதற்கான பதில்களையும் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ததில் பிழைகள் இருக்கிறது. மீண்டும் தெளிவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.
நீதிபதி(பவானி சிங்கிடம்) மொழிபெயர்ப்பு எங்கு செய்யப்பட்டது?
பவானி சிங்: தமிழ்நாட்டிலேயே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வந்தது.
குமார்இல்லை. கர்நாடகத்தில்தான் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
நீதிபதி: (குமாரிடம்) உங்களுக்கு கன்னடம் தெரியுமா?
குமார்: எனக்குத் தெரியாது. என் அம்மாவுக்கும், சகோதரிக்கும் கன்னடம் தெரியும். எனக்கு ஒரு விஷயம் தெரியக் கூடாது என்றால் என் முன்னாலேயே கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள்.
இதனால் நீதிமன்றம் சிரிப்பலையில் மூழ்கியது.
அதையடுத்து மாலை இந்த ஆவணங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்த்து வரும் 13-ம் தேதி கொடுக்க கர்நாடக மொழியாக்கல் துறைக்கு ஆணையிட்டார்.
''தீர்ப்பை படித்தீர்களா?'
நீதிபதி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு சதவிகிதம் எவ்வளவு?
பவானி சிங்: தெரியவில்லை. (மராடியிடம் கேட்டு 714% என்றார்.)
நீதிபதி: 714% எப்படி வந்தது?
பவானி சிங்: தெரியவில்லை.
(அன்பழகன் வழக்கறிஞர் சரவணன் இதற்கு கணக்கு கூறினார். இதுதொடர்பான விரிவான விளக்கம் தனியாக தரப்பட்டுள்ளது.)
நீதிபதி: எத்தனை எதிர் தரப்பு சாட்சிகளை விசாரித்தீர்கள்?
பவானி சிங்: தயக்கம் (மராடியை கேட்டு 99 பேர் என்றார்.)
நீதிபதி: அவர்களின் சாட்சியங்களை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?
பவானி சிங்: (மௌனம்)
குமார்: சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிறு வரியில் சொல்லியிருக்கிறார். அந்த சாட்சியங்கள் குற்றவாளிகளுக்கு வேண்டப்பட்டவர்களாம். ஆனால், எப்படி வேண்டப்பட்டவர்கள் என்று சொல்லவில்லை. இந்த சாட்சியங்கள் அனைத்தையும் வருமானவரித் துறை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
நீதிபதி(பவானி சிங்கைப் பார்த்து) சிறப்பு நீதிமன்ற தீர்ப்பைப் படித்துவிட்டீர்களா?
பவானி சிங்படித்து விட்டேன்.
நீதிபதி: பிறகு ஏன்? பதில் சொல்லத் தயங்குகிறீர்கள்?
பவானி சிங்(மெளனம்)
 ''அன்பழகனை ஆஜராகச் சொல்லுங்கள்!'
தி.மு. பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணன் நீதிபதியிடம் நடைபெற்ற வாதத்திலிருந்து...
சரவணன்: உச்ச நீதிமன்ற ஆணைப்படி அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசும், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் கலந்து ஆலோசித்து நியமிக்கப்பட வேண்டும். என்று சொல்லியிருக்கிறது. ஆனால், கர்நாடக அரசு இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கவில்லை. அதனால் பவானி சிங் ஆஜராவது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
நீதிபதி: அந்த உச்ச நீதிமன்ற உத்தரவைக் காண்பியுங்கள்.
சரவணன் உச்ச நீதிமன்ற உத்தரவைக் காண்பித்தார்.  
நீதிபதி: நீங்கள் கர்நாடக அரசுக்கு கோரிக்கை வையுங்கள் அல்லது வழக்குப் போடுங்கள். என்னிடம் ஏன் வந்திருக்கிறீர்கள்.  என்னை உச்ச நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரித்து வழக்கை முடிக்கச் சொல்லியிருக்கிறது. நீதிமன்ற நேரத்தை வீணாக்காதீர்கள். (பவானி சிங்கைப் பார்த்து) உங்களை நியமித்தது யார்?
பவானி சிங்தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை நியமித்திருக்கிறது.
நீதிபதி: (சரவணனிடம்) நீங்கள் அரசு வழக்கறிஞரை நியமிக்கப் போகிறீர்களா? ஏன் அரசியலைப் புகுத்துகிறீர்கள்? உங்கள் மனுதாரர் யார்?
சரவணன்அன்பழகன்
நீதிபதிஅவர் எங்கே? அவரை ஆஜராகச் சொல்லுங்கள்.
சரவணன்: அவர் 92 வயதுடைய முதியவர். அவர் கோர்ட்டுக்கு வர முடியாது. கோர்ட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறது. அவரின் சார்பாக நான் ஆஜராகி இருக்கிறேன். பவானி சிங்கை நீக்க வேண்டும். அதற்கான மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  
நீதிபதி(கோபத்துடன்) தேவையில்லாமல் மனு அளிக்க இது அரசியல் மேடை கிடையாது. என்னுடைய பணிக்கு இடையூறு செய்ததாக சி.ஆர்.பி.சி-345 பிரிவை பயன்படுத்த நேரிடும். நீங்கள் ரிட் மனுத்தாக்கல் செய்யுங்கள்.
சரவணன்: ஏற்கெனவே ரிட் மனுத் தாக்கல் செய்திருக்கிறோம். நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.


இதையடுத்து காரசாரமான இந்த விவாதம் நிறைவு பெற்றது. இப்படி வழக்கை எடுத்த நாள் முதல் விறுவிறுப்புடன் தனது விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகிறார் நீதிபதி குமாரசாமி!

அதிகமாக சேர்த்த சொத்துக்களின் சதவீதம் என்ன?
லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 714 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. அவர்கள் கணக்கு, ஜெயலலிதாவின் 1991-96 காலகட்டத்தில் அவருக்கு வந்த நியாயமான வருமானம் மற்றும் அவருடைய பூர்வீக சொத்துகள்படி ஜெயலலிதாவிடம் நியாயமாக இருந்திருக்க வேண்டிய கையிருப்பு மொத்தம் 8 கோடியே 89 லட்சத்து 57 ஆயிரத்து 289 ரூபாய்.ஆனால், ஜெயலலிதாவிடம் 63 கோடியே 51 லட்சத்து 55 ஆயிரத்து 48 ரூபாய் இருந்தன. வருமானத்துக்கு அதிகமான இந்த சொத்து மதிப்பை சதவிகிதத்தில் கணக்கிடும்போது,

635155048/88957289X100  = 714%


ஆனால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதாவின் நியாயமான சொத்து மதிப்பாக கணக்கிட்டு எடுத்துக்கொண்டது 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாய். அந்தத் தொகையை லஞ்ச ஒழிப்புத் துறை குறிப்பிட்ட ரூ.63 கோடியில் இருந்து கழித்துவிட்டால், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த தொகையாக வருவது, 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாய். இதை சதவிகிதத்தில் கணக்கிடும்போது,

536049954/99105094X100 = 540%





No comments:

Post a Comment