சினிமா , அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம் . ஜி . ஆர் . அனைவருக்குமான ரோல்மாடல் . இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும் ... 25 மட்டும் இங்கே !
make money online
எம் . ஜி . ஆர் . நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம்சதிலீலா வதி (1936). கடைசிப் படம் மது ரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
பெரும்பாலும் (60 படங்கள் ) தெலுங்குப் படங்களைத்தான் ரீ - மேக் செய்வார் எம் . ஜி . ஆர் . அத்தனையும் என் . டி . ஆர் . நடித்த தாகவே இருக்கும் . ' உரிமைக் குரல் ' மட்டும் விதிவிலக்கு . அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம் !
எம் . ஜி . ஆரின் முதல் மனைவி தங்கமணி . இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார் . அவரது மறைவுக்குப் பிறகு வி . என் . ஜானகி !
எம் . ஜி . ஆர் . நடித்த 50 படங் களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன் . அவரின் ' அச்சம் என்பது மடமையடா ... அஞ்சாமை திராவிட உடைமையடா ' பாட்டு எம் . ஜி . ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !
விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம் . ஜி . ஆர் . அவருக்கு ஏ . கே . 47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !
சிகரெட் பிடிப்பது மாதிரிநடிப்பதைத் தவிர்த்தார் . ' நினைத்ததை முடிப்பவன் ' படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார் . இழுக்க மாட்டார் . மலைக்கள்ளனில் ' ஹ ¨ க்கா ' பிடித்தது மாதிரி வருவார் . இந்தக் காட்சியை வைப்பதா , வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !
முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால் , பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப் போட்டு ' மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ' படத்தை முடித்துக் கொடுத் தார் !
' கர்ணன் ' படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம் . ஜி . ஆரைத்தான் கேட்டார்கள் . ' புராணப் படம் பண்ண வேண்டாம் ' என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம் . ஜி . ஆர் !
நம்பியாரும் அசோகனும்தான் எம் . ஜி . ஆருக்குப் பிடித்த வில்லன்கள் . பி . எஸ் . வீரப்பாவும் , ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப் பார் !
எம் . ஜி . ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி . அடுத்தது ஜெயலலிதா !
எம் . ஜி . ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ' மலைக்கள்ளன் '. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா . இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார் . எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ' உரிமைக் குரல் ' காட்சி , பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !
நாடோடி மன்னன் , உலகம் சுற்றும் வாலிபன் , மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம் . ஜி . ஆர் டைரக்ஷன் செய்த படங்கள் !
make money online
சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள் . ஆனால் , எம் . ஜி . ஆர் காட்சிகளையே புகுத்தினார் . தி . மு . க . கொடி , உதயசூரியன் சின்னம் , அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !
எம் . ஜி . ஆர் . எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார் . அதில் முக்கியமான இரண்டு பேர் , அரசியலைக் கலக்கிய துரைமுருகன் . சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970- ம் ஆண்டு எம் . ஜி . ஆர் . அடித்த கமென்ட் இதுதான் ... ' அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை . 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க . அப்படி வெச்சாத்தான் படம் ஓடும் !'
' பொன்னியின் செல்வன் ' கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம் . ஜி . ஆர் . ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார் . ஆனால் , ஆசை நிறைவேறவில்லை !
அறிமுகம் இல்லாதவராக இருந்தால் , உடனே கை கொடுத்து ' நான் எம் . ஜி . ராமச்சந்திரன் - சினிமா நடிகர் ' என்று அறிமுகம் செய்துகொள்வார் !
ராமாவரம் தோட்டத்தில் ஆடு , மாடு , கோழி , நாயுடன் ஒரு கரடியும் , சிங்கமும் வளர்த்தார் எம் . ஜி . ஆர் . இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !
ரொம்பவும் நெருக்கமானவர்களை ' ஆண்டவனே !' என்றுதான் அழைப்பார் !
அடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம் . ஜி . ஆர் . குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார் . பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !
எம் . ஜி . ஆர் . பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு . ஒருவர் , நடிகர் எம் . கே . ராதா . கத்திச் சண்டை , இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம் . ஜி . ஆருக்கு இன்ஸ்பிரேஷன் . இரண்டாமவர் , ஹிந்தி டைரக்டர் சாந்தாராம் . இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம் . ஜி . ஆர் !
முழுக்கை சில்க் சட்டை , லுங்கியுடன் தொப்பி , கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம் . ஜி . ஆரின் வழக்கம் . ' யாருக்கும் என்னைத் தெரி யலை . தொப்பி , கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல ' என்பாராம் !
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !
' நான் ஏன் பிறந்தேன் ?' - ஆனந்த விகடனில் எம் . ஜி . ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர் .
அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை . அடுத்ததாகத் தொடங்கிய ' எனது வாழ்க்கை பாதையிலே ' தொடரும் முற்றுப் பெறவில்லை . இன்றும் அவர்வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் . முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !
No comments:
Post a Comment