‘மச்சான், டிராஃபிக் பத்திக் கவலைப்படாத... ஏதாவது ஆம்புலன்ஸ் வந்தா அது கூடவே வந்துடு’ என்று புத்திசாலித்தனமாகவெல்லாம் இனிமேல் சிந்திக்காதீர்கள்! ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் மறைத்துக் கொண்டு கார்/பைக் ஓட்டுபவர்கள்,
இனிமேல் அரசுக்கு
2,000 ரூபாய் தண்டம் கட்ட வேண்டி வரும்.
டெல்லி டிராஃபிக் போலீஸ் கமிஷனர் முக்தேஷ் சந்தர், இந்த அபராதத்தை நேற்றிலிருந்து அமல்படுத்தி இருக்கிறார். சரி; ஒருவர் ஆம்புலன்ஸை அலட்சியப்படுத்தியதற்கான ஆதாரம்? அதற்கும் இந்த அறிக்கையில் வழி சொல்லியிருக்கிறார் முக்தேஷ். ‘‘சமீபத்தில், டெல்லியில் நிலவிய கடுமையான போக்குவரத்தால், ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் சிலர் இறந்து போன நிகழ்ச்சிகள் என்னை மிகவும் பாதித்தன. ஆம்புலன்ஸ்கள், பொதுவாக வலது பக்க லேனில்தான் செல்ல வேண்டும். முன்னால் வலது பக்கம் செல்பவர்கள் உடனே இடது பக்கம் ஒதுங்கி ஆம்புலன்ஸ் பயணிக்க வழி விட வேண்டும். இதை மீறுபவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இப்படி விதிமீறல் செய்பவர்களை,
அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் உடனுக்குடன் ஆதாரத்துடன் வீடியோவாகவோ,
புகைப்படமாகவோ பதிவு செய்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்!’’ என்று முக்தேஷ் சந்தர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
‘ஆதாரம் நிரூபிக்கப்பட்டு அபராதம் கட்டுவதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்று கமெண்ட் செய்யாமல், உயிர் காக்க உதவலாம் மக்களே! |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
14 Jan 2015
ஆம்புலன்ஸுக்கு வழி விடவில்லையென்றால் அபராதம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment