சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Jan 2015

சண்டைக்கார சினிமா!

ஒரு சினிமா, இரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரின் சட்டையை இன்னொருவர் கொத்தாகப் பிடித்து அடித்துக்கொள்ளாத குறையாக மோதலை உண்டாக்கும் என்பதை நிரூபித்திருக்கிறதுதி இன்டர்வியூதிரைப்படம்.


அமெரிக்காவின் ஹாலிவுட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு, சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள காமெடி படம்தி இன்டர்வியூ’. சேத் ரோஜன், எவன் கோல்ட்பெர்க் இருவரும் இணைந்து படத்தை இயக்கியிருக்கிறார்கள். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னை பத்திரிகையாளர்கள் இருவர் பேட்டி எடுக்கச் செல்வதுபோல் சென்று, அதிபரைக் கொலை செய்ய முயல்வதுதான் படத்தின் திரைக்கதையாம். தவிர, இதில் வடகொரிய அதிபரைக் கேலியாகச் சித்தரிக்கும் சில காட்சிகளும் இடம்பெற்றிருப்பதுதான் பிரச்னைகளின் மையம். நிலைமை இப்படியிருக்க, தங்கள் நாட்டு அதிபரைக் கேலிக்கூத்தாகக் காட்டுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர் வடகொரிய மக்கள். வடகொரிய அரசும்படத்தை வெளியிடத் தடை செய்ய வேண்டும்என அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டது.
இதற்கிடையில்வடகொரிய அதிபரைக் கலாய்த்துவிட்ட கோபத்தில் சோனி நிறுவனத்தின் இணையதளத்தை வடகொரியா முடக்கிவிட்டதுஎன அமெரிக்கா குற்றம் சாட்ட, ‘அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லைஎன மறுத்தது வடகொரியா. பதிலுக்கு வடகொரியா நாட்டு இணையதளங்கள் 9 மணி நேரங்கள் முடக்கப்பட்டிருந்தன.


இப்படியான பிரச்னைகள் ஒருபுறம் தீவிரமாகிக்கொண்டிருக்க, படத்தை வெளியிடும் முயற்சியில் அமெரிக்கா பின்வாங்கவில்லை. படத்தின் ப்ரீமியர் காட்சிகள் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டன. பொங்கியெழுந்த வடகொரிய மக்கள்படத்தை வெளியிட்டால் திரையரங்குகள் தாக்கப்படும்என சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ்களைத் தட்டிவிட, படத்தின் ப்ரீமியர் காட்சிகளை ரத்து செய்தது சோனி நிறுவனம். நடந்துகொண்டிருந்த களேபரங்களைப் பார்த்துஇது போருக்கு சமமானதுஎன வர்ணித்தார் ஒபாமா. ‘நேர்மையற்ற, சட்டவிரோதமான இந்தத் திரைப்படத்தை வெளியிட ஒபாமாதான் முதல் காரணமாக இருக்கிறார். அவருடைய இந்தச் செயல் வெப்பமண்டலக் காடுகளின் குரங்குகளைப் போல இருக்கிறதுஎன வடகொரிய தேசியப் பாதுகாப்பு ஆணையம் அறிக்கைவிட்டது.
தி இன்டர்வியூபடத்தை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக அறிவித்ததோடு, கிறிஸ்துமஸுக்கு மறுநாள் யூடியூப், ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததோடு, சைடு கேப்பில் சில திரையரங்குகளிலும் திரையிட்டுவிட்டது சோனி நிறுவனம். 
2
மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். தவிர, ஆன்லைனில் அதிக வசூல் செய்த படம் (15 மில்லியனுக்கும் மேல்) என்ற சிறப்பையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது.

பத்த வெச்சுட்டியே பரட்டை!      



No comments:

Post a Comment