சென்னை தீவுத்திடலில் 41வவது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சி கடந்த சனிக்கிழமை தொடங்கி உள்ள நிலையில், அரங்குகளில் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் படம் ஏதும் இடம்பெறாமல், ஜெயலலிதா படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது விமர்சனங்களை கிளப்பி உள்ளது
அமைச்சர்கள் வந்த உடனேயே தீவுத்திடலின் வரவேற்பு வாயிலாக அமைக்கப்பட்டிருந்த முல்லை பெரியாறு அணையின் மாதிரி வடிவமைப்பும், ஜான்பென்னிகுயிக் மாதிரி சிலையும் வேகவேகமாக வடிவமைக்கப்பட்டு முலாம்கள் பூசப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன. மின்சார வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை என்று அரசுத்துறைகள் சம்பந்தமான அரங்குகள் வேக வேகமாக வடிவமைக்கப்பட்டு, அந்தந்த அமைச்சர்களின் புகைப்படங்கள், நலத்திட்டம் வழங்குதல் புகைப்படங்கள் அதிவேகமாக ஒட்டப்பட்டன. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்களே ஒட்டப்படவில்லை. ஜெயலலிதாவின் புகைப்படங்களே அதிகமாக ஒட்டப்பட்டிருந்தன. திடலில் அமர்நாத் குகைகோவில் பனிலிங்கம் மாதிரி அமைப்புகள் மற்றும் வனங்களில் விலங்குகளின் அணிவகுப்பு மாதிரிகள் தத்ரூபமாக இருந்தன. இது தவிர குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகளும் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் பெரும்பாலான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழாவின் இறுதியில் அரங்கேறிய தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரை போன்ற தமிழர் கலைகளும், ராஜஸ்தான் பாவை கலை நிகழ்ச்சிகளும் மக்களை வெகுவாக கவர்ந்தன.
பெரியவர்கள், சிறியவர்கள் என்று நுழைவுக்கட்டணமாக ரூ.20, ரூ.10 என வசூலிக்கப்பட்டு தொடர்ச்சியாக 70 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியின் ஒவ்வொரு நாளும் விதவிதமான கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
40வது பொருட்காட்சியில் 11 லட்சத்து 68 ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்ததாகவும், இந்த ஆண்டு கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 15 லட்சமாக இருக்கும் எனவும் அரசு தரப்பில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
9 Jan 2015
சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் ஜெ.படம்: முதல்வர் படத்தை காணவில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment