சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jan 2015

சிவகார்த்திகேயன் மாதிரி வந்தா நல்ல இருக்கும்!

நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆரம்பித்து, நடிகராகி இப்போது பாடகராகிவிட்டார் மா.கா.பா. ஆனந்த். பிஸியாக இருந்தவருக்கு போனைப் போட்டு, ''ஜாலியா கொஞ்சம்... சீரியஸா கொஞ்சம் பேசலாமே'' என்றேன்.

''காம்பியர், நடிகர், பாடகர்னு சிவகார்த்திகேயன் ரூட்டையே ஃபாலோ பண்றீங்களே?''
''அப்படியெல்லாம் இல்லை. எங்களுக்கெல்லாம் சீனியர் அவர். ஆனா, அவரோட பேரைச் சொல்லும்போது என்னோட பெயரும் அதுல அடிபடுறதே சந்தோஷமா இருக்கு. அதே சமயம் சிவகார்த்திகேயன் மாதிரி வந்தா நல்லாத்தான் இருக்கும்.''

'நடிகை ப்ரியா ஆனந்த் உங்க கனவுக் கன்னியாமே?''
''கனவுக் கன்னியா? சத்தமா பேசாதீங்க. என் மனைவிக்குக் கேட்டா வீட்டுல சேர்க்க மாட்டாங்க. நான் ஆர்ஜேவா இருந்தப்போ அவங்க மாடலிங் பண்ணிட்டு இருந்தாங்க. நிறைய நிகழ்ச்சிக்கு நடுவரா வருவாங்க. சில பேரைப் பார்த்தவுடனே பிடிச்சுடும்ல? அந்த மாதிரிதான் ப்ரியா ஆனந்தையும் பிடிச்சுது. அவங்க மட்டுமில்ல, நமீதாவும் மை ஃபேவரைட். அவங்க போட்டோ புத்தகத்தோட நடுப்பக்கத்துல வருதுனா, நாலைஞ்சு வாங்கி வெச்சுருப்பேன். ஏன் நாலைஞ்சுனு யோசிக்காதீங்க. பசங்க திருடிட்டுப் போயிடுறாங்க பாஸ்.''


'' 'உங்களுக்கு நீங்களே ஒரு பட்டம் கொடுத்துக்கோங்கனு சொன்னா, என்ன பட்டம் கொடுத்துப்பீங்க?''
''எனக்கு நானே எப்படிங்க? சரி, ஆசைப்பட்டுட்டீங்க. பொதுவா நான் யார்கிட்ட பேசுனாலும் மனசுல பட்டதைப் பேசிடுவேன். அதனால, 'ஓட்டை வாய்ங்கிற பட்டம் பொருத்தமா இருக்கும்.''

''ஃபேஸ்புக்ல உங்க பக்கத்தை 5 லட்சம் பேர் லைக் பண்ணியிருக்காங்க. உங்களையே நம்பியிருக்கிற அவங்களுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க?''
''நான் மூக்குல ரெட் பால் இல்லாத பஃபூன். அதனால, காமெடியா நான் எடுக்கிற போட்டோக்களையும் நான் வரைஞ்ச படங்களையும் அதில் போஸ்ட் பண்ணி  சந்தோஷப்படுத்தணும்னு ஆசைப்படுறேன். ஆனா, கம்ப்யூட்டர்ல நான் ரொம்ப வீக். எப்படி போஸ்ட் பண்றதுனு சொல்லுங்களேன்?''

''நடிச்சா ஹீரோதான்னு முடிவு பண்ணிட்டீங்களா?''
''இப்போதான் பாஸ் ரெண்டு படங்களில் ஹீரோவா நடிக்கிறேன்.  ஆக்சுவலா நான் காமெடி கேரக்டர்ல நடிக்கணும்னுதான் ஆசைப்படுறேன். இப்போ நடிக்கிற ரெண்டு படங்களும் ரசிகர்களை  ஜாலியா என்டர்டெயின்மென்ட் பண்ண வைக்கும்னு தோணுச்சு. ஓகே சொல்லிட்டேன்.''

''மனைவிகிட்ட அடிவாங்கின அனுபவம் இருக்கா?''
''என் மனைவி கன்னத்துல செல்லமா தட்டினாலே, 'ஏன் அடிச்ச?’ னு கேள்விவரும். 'சும்மா தட்டினேம்மானு சொல்வேன். திருப்பி பளார்னு ஒரு அறையை விட்டு, 'இப்போ நான் செல்லமா தட்டினேன்னு பதில் வரும். 'இன்னா செய்தாரை...’னு திருக்குறளைப் படிச்சுட்டு, தூங்க வேண்டியதுதான். முக்கியமா, 'இன்னைக்கு ஷூட்டிங்ல ரொமான்ஸ் சீன்னு கேள்விப்பட்டேன்?’னு அவங்க கேட்கும்போது, நான் ஜென் நிலைக்குப் போயிடுவேன்.''

''பிடிச்ச அரசியல் தலைவர் யார்? ஏன்?''
''அரசியல்னாலே எனக்கு அலர்ஜி.  அம்மாவும் அப்பாவும் வேற வேற கட்சிக்கு சப்போர்ட் பண்றவங்க. நான் சுயேட்சையா நிற்கிற ஆளுக்குக் குத்திட்டு வந்துடுவேன். இதுதான் எனக்குத் தெரிஞ்ச அரசியல்!''

'' உங்களுக்கு நீங்களே ஒரு கேள்வியைக் கேட்டு, பதில் சொல்லுங்கனா கேள்வி என்ன? பதில் என்ன?''
கேள்வி: ''எதுவும் பண்ணு... ஆனா, இதெல்லாம் எதுக்குப் பண்ற?''


பதில்: ''இதெல்லாம் பண்ணணும்னு தானேடா ரோடு ரோடா சான்ஸ் தேடி அலைஞ்சுக்கிட்டு இருந்தே? இப்போ அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஓடி ஒளியாம, நின்னு நிதானமா விளையாடு!''



No comments:

Post a Comment