சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jan 2015

அரசியலுக்கு வந்தது ஏன்? பிறந்த நாளில் விளக்கம் அளித்த சரத்குமார்!


 "என்னை மக்கள் மன்றத்தில் அறிமுகப்படுத்தியது கலைத்துறைதான். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன்" என்று தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
 

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் 60வது பிறந்த நாளையொட்டி   கடந்த 2014 ஜூலை 14ம் தேதி  முதல் ஜனவரி 7ம் தேதி வரை 60 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு, அந்நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன

60வது நிகழ்ச்சி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடந்தது. நிகழ்ச்சியில் 'சீர்திருத்துவோம், மாற்றம் தருவோம்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும், 'நாட்டாண்மை பரிணாமவளர்ச்சியில் முதலிடம் வகிப்பது கலைத்துறையா, அரசியலா' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடந்தது.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வண்ணாரப்பேட்டைக்கு வந்த சரத்குமார் எம்.எல்..வை, வடசென்னை மாவட்ட செயலாளரும், சென்னை மண்டல செயலாளருமான எம்..சேவியர் சாரட் வண்டியில் சாரதியாக இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அழைத்து வந்தார்.
 

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணை தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எர்ணாவூர் .நாராயணன் பேசும் போது, 'ராணுவத்தில் பணியாற்ற வீட்டுக்கு ஒருவர் என்பதை போல வீட்டுக்கு ஒரு விவசாயி வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர் சரத்குமார். இந்த கோரிக்கை நிறைவேறினால் நாடு வளர்ச்சியடையும். அடுத்து நதிகள் இணைக்கப்பட வேண்டும்" என்றார். 

அடுத்ததாக பேசிய சரத்குமார், "நாட்டாண்மையின் பரிணாம வளர்ச்சியில் முதலிடம் வகிப்பது கலைத்துறையா, அரசியலா என்று நடத்தப்பட்ட பட்டிமன்றத்தின் நடுவர், முதலிடம் அரசியலுக்கென்று தீர்ப்பை வழங்கி விட்டார். சுப்ரீம் கோர்ட் ஒன்று இருப்பதை நடுவர் மறந்து விட்டார். இந்த தீர்ப்பு வழங்கும் போது என்னிடம் நடுவர் கருத்துக்களை கேட்டு இருக்கலாம். என்னை மக்கள் மன்றத்தில் அறிமுகப்படுத்தியது கலைத்துறை தான். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன்.
அதே நேரத்தில் பதவிக்காக சமத்துவ மக்கள் கட்சி இல்லை. மக்களுக்கு சேவை செய்யவே சமத்துவ மக்கள் கட்சி உள்ளது. என்னுடைய 60 வது பிறந்தநாளில் 60 நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி மக்களுக்கு சேவை செய்திருக்கிறார் மாவட்ட செயலாளர் சேவியர். உண்மையாக உழைத்தால் பதவிகள் உங்களைத் தேடி வரும்" என்று முடித்தார்.
 

வடசென்னை மாவட்ட செயலாளர் எம்..சேவியர் பேசுகையில், "அண்ணன் சரத்குமாரின் 60வது பிறந்தநாளையொட்டி கடந்த 2014 ஜூலை 14ம் தேதி  முதல் ஜனவரி 7ம் தேதி வரை 60 நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. வடசென்னை மக்கள் தங்களது குறைகளை தொடங்கப்பட்டுள்ள பேஸ்புக் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கலாம். மக்களுக்காக பாடுபட எந்நேரமும் கட்சி தயாராக உள்ளது" என்றார்.   


நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட முகநூல் (ஃபேஸ்புக்) பிரசார குழு என்ற வெப்சைட்டை சரத்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் செல்வராஜ், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், தென்மண்டல செயலாளர் சுந்தர், தென்சென்னை மாவட்ட செயலாளர் நாதன் மற்றும் நிர்வாகிகள் முருகேசபாண்டியன், விஜயன், ராஜசேகர், ரஞ்சன், மணி, கவிஞர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment