சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jan 2015

ஆண்டின் சிறந்த செயலிகள்!

2014 ம் ஆண்டின் சிறந்த செயலிகள் ( ஆப்ஸ் ) பட்டியலை கூகிள் வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்ததுபோல ஆண்ட்ராய்டு பயனாளிகளின் விருப்பத்தேர்வுகள் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

கூகிள் பிளே ஸ்டாரில் , 2014 ல் முன்னணி செயலிகள் எனும் தலைப்பின் கீழ் இந்த பட்டியல் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 64 செயலிகள் பட்டியலில் உள்ளன. இசைப்பிரியர்களுக்கான ஷாசம் , டியூனின் ரேடியோ, இணைய டாக்சி சேவையான யுபேர், மற்றும் ரகசிய செய்தி சேவையான சீக்ரெட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஸ்விப்ட்கீ கீபோர்ட், லாக்கெட் ,டைம்ஹாப்,பஸ்ஃப்பீட், ஒன்ஃபுட்பால் ஆகிய செயலிகளும் இருக்கின்றன.


பட்டியலில் உள்ளவை பெரும்பாலும் இலவச செயலிகள் என்பதை சொல்லவே வேண்டாம்.எனினும் கட்டணி செயலிகளில் சிலவும் உள்ளன. கடந்த ஆண்டும் கூகிள் இதே போல பட்டியலை வெளியிட்டது.

உங்கள் அபிமான செயலிகள் இந்த பட்டியலில் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். அல்லது பட்டியலில் இருந்து உங்களுக்கான செயலியையும் தேர்வு செய்து கொள்ளலாம்:

கூகிளின் பட்டியல்: https://play.google.com/store/apps/collection/promotion_3000f13_best_of_2014

சோனியின் ஸ்மார்ட் வாட்ச்!

வியரபில் எனப்படும் அணி கணிணிகள் தான் தொழில்நுட்ப உலகில் அடுத்த பெரிய விஷயம் எனும் கருத்து இருக்கிறது. ஸ்மார்ட் வாட்ச் இந்த பிரிவில்தான் வருகிறது. முன்னணி நிறுவனங்கள் பல ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன. இல்லை என்றால் கைவசம் அதற்கான திட்டம் வைத்துள்ளன.

இந்நிலையில் சோனியும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. சோனியின் ஸ்மார்ட் வாட்ச் பற்றிய தகவல் வெளியான விதமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
சோனியின் ஸ்மார்ட் வாட்ச் -பேப்பர் எனப்படும் மின் காகித நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்ட மாதிரியில் , விருப்பம் போல 24 விதங்களை தேர்வு செய்யும் வகையில் வடிவமைப்பு அமைந்துள்ளது.

சத்தம் இல்லாமல் இந்த வாட்சை வெள்ளோட்டம் விட்டுள்ளது சோனி. நிறுவனம் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் ஃபேஷன் எண்டர்டெயின்மண்ட்ஸ் எனும் திட்டத்தின் கீழ்  இந்த வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது இணைய நிதி திரட்டும் தளம் ஒன்றில் திட்டமாக முன்வைக்கப்பட்டது.

இந்த வாட்சுக்கான வரவேற்பை அறிந்து கொள்வதற்காக சோனியின் பெயர் குறிப்பிடாமல் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அப்படியிருந்தும் கேட்ட நிதிக்கு மேல் இந்த திட்டத்திற்கு கிடைத்துள்ளதாகவும் சோனி நிறுவன அதிகாரி ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த வாட்சின் சந்தை பிரேவசம் பற்றி சோனி எதுவும் கூறவில்லை. ஆனால் நிதி திரட்டும் தளத்தில் ஆதரவு தெரிவித்தவர்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதத்தில் வாட்ச் கிடைக்கும்.

அணி கணி பிரிவில் சோனிக்கு பெரிய அளவில் ஆர்வம் இருப்பதாகவும், பேஷன் துறை சார்ந்து இத்தகைய தயாரிப்புகளை உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் புதிது !

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ZTE தனது புதிய ஸ்மார்ட்போன்  கிராண்ட் எஸ் II ( Grand S II ) - இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மின்வணிக தளமான அமேசான்.இன் மூலம் இதனை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 5.5 இன்ச் எச்.டி ஸ்கீரின் கொண்டது. குவால்காம் ஸ்னேப்டிராகன் குவாட் கோர் 800 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டது. 16 ஜிபி ஸ்டோரேஜ். 32 ஜிபியாக நீட்டித்துக்கொள்ளலாம்.


13
 பிக்சல் மற்றும் 5 பிக்சல் முன்பக்க கேமிரா கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் அடிப்படையிலானது. 2500 mAh  பேட்டரி கொண்டது. விலை ரூ.13,999,   என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்ஜெட் செய்திகள்

*
 சாம்சங்கின் டைசன் ஓஎஸ் ஸ்மார்ட்போன் பற்றி தொடர்து பேசப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய போன் இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. 100 டாலருக்கு கீழ் அதாவது 6,000 ரூபாய்க்கு குறைந்த விலை பிரிவில் இது அறிமுகமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த போன் இசட் 1 என்று அழைக்கப்பட இருப்பதாகவும் தென்கொரிய நாளித்ழ் ஒன்று தெரிவிக்கிறது.

 ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான எச்டிசி தனது புதிய ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு பார்சிலோனா தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிரபலமான எச்டிசி ஒன் எம் 8 போனின் அடுத்த வடிவமாக இது இருக்கும் என்றும் மைடிரைவர்ஸ் இணையதளம் தெரிவிக்கிறது.

*
 சீன மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனமான மெய்சு ( Meizu- உபுண்டு லினஸ்க் பின்னே உள்ள நிறுவனம்) புதிய கூட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் படி இதன் புதிய பிலேம் ஓஎஸ் அடிப்படையிலான ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சீன மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகமாகலாம் என்று சொல்லப்படுகிறது. உபுண்டு டச் அடிப்படையிலானது என்பதால் செயலிகள் டெஸ்க்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் இரண்டிலும் செயல்படக்கூடியதாக இருக்கும்..

இந்தியாவில் தொடரும் வளர்ச்சி

ஸ்மார்ட்போன் சந்தையை பொருத்தவரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவில் தான் வேகமான வளர்ச்சி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அனைத்து விலை பிரிவிலும் அறிமுகமாகி கொண்டிருக்கும் நிலையில் இது எதிர்பார்க்க கூடியது தான்.

கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்பிடும் போது இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 82 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐடீசி நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

4
ஜி வசதி பிரபலமாகும் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று சொல்லப்படுகிற்து.
இந்தியர்கள் ஸ்மார்ட்போன் வாங்குவதில் ஆர்வம் காட்டுவது போலவே பேப்லெட் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஸ்மார்ட்போன் கழுத்துவலி இருக்கிறதா?

குனிந்த தலை நிமிராமல் ஸ்மார்ட்போனையே பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இதன் பாதிப்பு பற்றி யோசித்து பார்த்தாக வேண்டும் போலிருக்கிறது. அமெரிக்க மருத்துவர் ஒருவர் இப்படி தான் எச்சரிக்கிறார்.
ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி ஆய்வு நடத்தியுள்ள டாக்டர் கென்னத் ஹான்ஸ்ராஜ் எனும் அந்த மருத்துவர் , ஸ்மார்ட்போன்களால் கழுத்து வலி உண்டாகும் அபாயம் இருப்பதாக சொல்கிறார். ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது நாம் கழுத்தை வைத்திருக்கும் விதம், அதன் மீதான சுமையை அதிகரிக்க செய்வதாக அவர் கூறுகிறார்.
ஸ்மார்ட்போன் பயனாளிகள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 மணி நேரம் ஸ்மார்ட்போனில் செலவிடுவதால் கழுத்து வலி பாதிப்பு ஏற்படலாம் என அவர் எச்சரிக்கிறார். இதற்கு டெக்ஸ்ட் நெக் என பெயர் வைத்துள்ளார். ஏற்கனவே பிளாக்பெரி தம்ப் , ஐபேட் தம்ப் ஆகிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்த புதிய வலி சேர்ந்திருக்கிறது. மருத்துவர்கள் சிலரும் டெக்ஸ்ட் நெக் பாதிப்பு கொண்டவர்கள் அதிக அளவில் தங்களிடம் வருதாக கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment