சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Jan 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பிரசாரம் செய்தால் பிரியாணி, 300 ரூபாய் கூலி!

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் நடத்தப்படும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும், வாக்குசேகரிப்பிலும் பங்கேற்கும் நபர்களுக்கு பிரியாணி மற்றும் தலா  300 ரூபாய்   பணமும் வழங்கப் படுவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.


அதிமுக சார்பில்  இடைத் தேர்தல் பணிக்குழுவில் உள்ள 30 அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 50 பேரும் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளைக்  கவனிக்கும் அமைச்சர்கள் மட்டும் ஹோட்டல்களில் தங்கியபடியும் , மற்றவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியிலேயே தங்கியும் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள முக்கிய  பகுதிகள்  அல்லது அருகில் உள்ள பகுதிகளில் காலியாக உள்ள வீடுகள் அமைச்சர்களுக்காக `புக்` செய்யப்பட்டுள்ளன. 20 நாட்கள் மட்டுமே விஐபிகள் தங்கக்கூடிய இந்த வீடுகள், ஏரியாவுக்கு தகுந்தாற்போல் ரூ. 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாடகைக்கு பெறப்பட்டுள்ளன. 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் பிரசாரத்துக்காக, அமைச்சர்கள் அவர்களின் ஆதரவாளர்கள்  என தெருவுக்கு ஒரு அலுவலகம், அதைச் சுற்றி 4 ஸ்கார்பியோ மற்றும் 4 இன்னோவா  கார்கள் என அதிமுகவினர் நிரம்பி வழிகின்றனர்.

அதிமுக வேட்பாளர் வளர்மதி நேற்று ஸ்ரீரங்கம் நகரில் உத்தரவீதி, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். ஜீப்பில் சென்ற அவருடன் நிர்வாகிகளும், முன்புறம் தொண்டர்களும் ஊர்வலமாகச்  சென்றனர்.


மதிய உணவுக்கு வேட்பாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் காரில் ஏறி சென்று விட, தொண்டர்கள் மற்றும் பிரசாரத்துக்காக வந்தவர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டது. பெரியவர்கள் அனைவருக்கும் பிரியாணி பொட்டலத்துடன் தலா ரூ.300, சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு தலா ரூ.100ம் வழங்கப்பட்டது.

நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு பிரசாரத்திற்கு வரும் அனைவரும் மூலத்தோப்பு மற்றும் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதற்கென தனி ஏஜெண்டுகள் உள்ளனர் என்றார்.
ஸ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களில் ஒருவருக்கு சோமரசம்பேட்டை பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருக்கும் அமைச்சர் நேற்று முன்தினம் இரவுதான் அந்த பகுதிக்கு வந்தார். முதற்கட்டமாக காரிலேயே அந்தப் பகுதியை சுற்றிப் பார்த்த அவர்அனைவருக்கும் ஒரு கிப்ட் என வீட்டுக்கு ஒரு வேஷ்டி, ஒரு சேலை கொடுத்து அசத்தியிருப்பதாக அந்த ஏரியாவாசிகள் கூறுகின்றனர்.



No comments:

Post a Comment