சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Jan 2015

சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம் இந்தியாவில் வெளியீடு!


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி ஸ்பெயின் எழுத்தாளர் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஜேவியர் மோரோ எழுதியிருக்கும் புத்தகம் 'தி ரெட் ஸேரி'. இந்த புத்தகம் 2008ஆம் ஆண்டு முதலில் ஸ்பெயின் மொழியில் 'El Sari Rojo' என்ற பெயரில் வெளியானது. ஆனால், இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பாலான தகவல்கள் உண்மையில்லாதவை என காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. இதை எழுதிய ஆசிரியர் மோரோவுக்கு 2010ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


இதையடுத்து இந்த புத்தகத்தை இந்தியாவில் வெளியிட முடியாமல் இருந்தது. இப்புத்தகத்தில், நேரு- காந்தி குடும்பம், வங்கதேச போரில் பின்னடைவு, அவசர நிலை பிரகடனம், ஆபரேஷன் புளூ ஸ்டார் பற்றி முழுமையாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் சிறுவயது வாழ்க்கை, காதல் விவகாரம் முதல் இப்போது பிரதமர் பதவியை மறுத்த ஒரே இந்திய அரசியல் தலைவர் என்பது வரை அனைத்து வாழ்க்கை நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ள புத்தகம் 'தி ரெட் ஸேரி'. 

இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய புத்தகம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளதாக பிரபல புத்தக வெளியீட்டாளர் டுவிட்டரில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோலி புக்ஸ் என்ற புத்தக வெளியீ்ட்டாளரின் எடிட்டோரியல் டைரக்டர் பிரியா கபூர் "The Red Sari has now been published in India. Get your copy!" என பதிவு செய்திருக்கிறார். மேலும், இந்திய பதிப்பில் வெளிவந்துள்ள இந்த புத்தகம் 455 பக்கங்கள் கொண்டதாகவும், அதன் விலை ரூ.395 மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார். 


மோரோ இதற்கு முன்பு எழுதிய "Pasion India" என்ற புத்தகம் சோனியா காந்தியின் பயணங்களை பற்றி அவரது நெருங்கிய நண்பர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது. அந்த புத்தகம் 17 மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment