சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jan 2015

ஓரம் போ... ஓரம் போ... வேர்ல்டு கப்பு வண்டி வருது!


தோ வேர்ல்ட் கப் கிரிக்கெட் ஜூரம் தொடங்கிடுச்சு. வேர்ல்ட் கப் தொடங்கிவிட்டால் நம் நாட்டில் என்னென்ன வளர்சிதை மாற்றமெல்லாம் நடக்கும்னு நாமளும் ஒரு முன்னோட்டம் விட்டுடலாம்! 

பெரிய ஆபரேஷனோ, பிரசவ ஆபரேஷனோ, எல்லா ஆஸ்பத்திரியிலும் டி.வி இருக்கணும். கிரிக்கெட்டும் ஒளிபரப்பணும். கிரிக்கெட் ஒளிபரப்பாத வார்டில் குடியிருக்க வேண்டாம்னு புதுமொழி உருவாக்கிடலாம்! 


கிரிக்கெட் ஓடிட்டு இருக்கிறப்போ விருந்தினரே வந்தாலும்கூட உட்கார்ந்து கை தட்டலாமே ஒழிய, விருந்து உபசரிப்புக்கு வெயிட்டிங்லதான் இருந்தாகணும். திருட வந்த திருடனே வேடிக்கை பார்த்துட்டு வெயிட்டிங்ல இருக்கிறப்போ இவங்களுக்கு என்ன கொள்ளை போகுதாம்? 

வீட்டுல இன்னும் ஒரு மாசத்துக்கு மத்தியான சீரியல் எதையுமே பார்க்க முடியாதே என்ற வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வதால், அவ்வப்போது இந்திய வீரர்கள் பரிதாபமாக அவுட் ஆகக்கூடிய சூழல் ஏற்படும். 'இதுல இந்தியா ஜெயிச்சா உங்களுக்குத்தான் கப் கொடுக்கப் போறாங்களாக்கும்?' என்ற கேள்வி பல வீடுகளில் கேட்டால் நமக்கென்ன? 

ஜோஸியக்காரர்களுக்குக் கொண்டாட்டமான காலம். போட்டிருக்கிற டிரெஸ் கலர், ஹேர் கலர், கூலிங் கிளாஸ் மாட்டுற ஸ்டைல்னு இதெல்லாம் வைத்து ஜோஸியம் சொல்றது இப்போ ஃபேஷன். அதுமட்டுமா? ஆக்டோபஸ் ஜோஸியம், யானை ஜோஸியம் மாதிரி, ஓணான் ஜோஸியம், வெட்டுக்கிளி ஜோசியம்னு புதுசு புதுசாக் கிளம்புவாங்க! 

ங்கே பார்த்தாலும் பெட்டிங், பெட்டிங், பெட்டிங்தான். டோனி எத்தனை தடவை கழுத்தை வெட்டுவார்ல தொடங்கி, சுரேஷ் ரெய்னா இந்த மேட்சுல எத்தனை பேரைக் கட்டிப் பிடிப்பாருங்கிற வரைக்கும் அத்தனைக்கும் பெட்டிங்! 

டைல பாசிப் பருப்பு வாங்க அனுப்பினால், உளுந்தம் பருப்பை வாங்கிட்டு வருவாங்க. கத்திரிக்காய் வாங்கிட்டு வரச் சொன்னால் தக்காளியோட வந்து நிப்பாங்ககிரிக்கெட் சீசன் முடிகிற வரைக்கும், கணவன்மார்களின் ஞாபகசக்திக் குறைபாடை மன்னிச்சிக்கோங்க இல்லத்தரசிகளே! 

டிராஃபிக் போலீஸ்கூட வண்டியை ஓரங்கட்டச் சொல்லி கிரிக்கெட் ஸ்கோர் விசாரிக்கிற அதிசயமெல்லாம் நடக்கும் பாஸ். அலர்ட்டா இருங்க, ஸ்கோர் சொன்னால் தப்பிச்சீங்க, இல்லைனா ஹெல்மெட் மாட்டாததுக்கு ஸ்பாட் ஃபைன் தான்! 




No comments:

Post a Comment