சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jan 2015

“எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை!” - சகாயம் ஐ.ஏ.எஸ்..

 ''என் கல்யாணத்துக்குக்கூட கோட்-சூட்தான். வேட்டி கட்டி எனக்குப் பழக்கமே இல்லை. கோ-ஆப்டெக்ஸ் பொறுப்புக்கு வந்த பிறகுதான் வேட்டி கட்டவே பழகினேன். இப்போ புரியுது, ஆண்களுக்குக் கம்பீரமான உடை, வேட்டிதான்!'' - வெண்பட்டு வேட்டி-சட்டையில் அழகாக வந்து அமர்கிறார் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன எம்.டி. சகாயம் ..எஸ்..

''வேட்டி உடுத்துவதை இளைஞர்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சிக்கு நன்றி...''
''இது நம்ம பாரம்பரியம். இதுக்கு எதுக்கு நன்றி? வேட்டி, பட்டுச் சேலைனு கோ-ஆப்டெக்ஸ் பொருள்களின் விற்பனையைப் பெருக்கணும் என்ற சின்ன சுயநலமும் இதில் இருக்கு. வசதியானவங்க மட்டும்தான் பட்டு உடுத்தலாம் என்ற நிலையை மாத்தணும்னு யோசிச்சோம். அதற்காக 'எல்லோருக்கும் பட்டுனு ஒரு திட்டம் கொண்டுவந்து, 2,500 ரூபாய்க்குக் கீழே விலையுள்ள பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தினோம். பெண்களிடம் இதற்கு அமோக வரவேற்பு. ஆயிரக்கணக்கான புதிய டிசைன்களில் புடவைகளை வாராவாரம் அறிமுகப்படுத்தும் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடுவது சாதாரண விஷயம் இல்லை. அதற்காக, கோ-ஆப்டெக்ஸில் 'டிசைன் ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கினோம். கோ-ஆப் டெக்ஸ் வரலாற்றில் இது ஒரு மைல்கல்.

அதோடு கோ-ஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு சேலை, வேட்டியிலும் அதை நெய்த நெசவாளியின் பெயர், அவரது படம், அந்தத் துணியை நெய்வதற்கு எத்தனை முறை அவர் கை, கால்களை அசைத்தார்... என்பன உள்பட அத்தனை விபரங்களும் அடங்கிய ஓர் அட்டையை இணைத்திருக்கிறோம். இது அந்த நெசவாளிக்கு நாங்கள் செய்யும் மரியாதை. சமீபத்தில் கோ-ஆப்டெக்ஸ் பெற்ற மத்திய அரசின் விருது அங்கீகாரங்களை அந்த நெசவாளிகளுக்கு அர்ப்பணிக்கிறோம்!''
''உங்களால் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்ட கிரானைட் ஊழல் சம்பந்தமான வழக்குகள் சரியான பாதையில் செல்கிறதா?''
(சிரிக்கிறார்...) ''இப்போது எனக்கு அது தொடர்பான பொறுப்புகள் எதுவும் வழங்கப் படவில்லை. அந்த வழக்குத் தொடர்பான கோப்புகள் எதுவும் என்னிடம் இல்லை. அது சம்பந்தமான தகவல்களையும் நான் பின்தொடரவில்லை. உங்களைப் போலவே நானும் செய்தித்தாள்கள் மூலமாகத்தான் அந்தத் தகவல்களை அறிந்துகொள்கிறேன். தமிழக அரசு நிச்சயம் சரியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு!''
''உங்களைப் போலவே ஓர் அரசு ஊழியராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வராகி இருப்பது பற்றி..?''
''ஊழல் மிகுந்த நிர்வாக அமைப்பில் நேர்மையை லட்சியமாகக்கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் செய்திருக்கும் சாதனை நிச்சயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தேசத்தின் மீதும், நேர்மையின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் பலருக்கும் இந்த வெற்றி ஆறுதலாக இருக்கிறது!''
'' 'தமிழ்நாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் போல ஒரு மாற்றத்தை உங்களால் உண்டாக்க முடியும் என்று விவாதிக்கிறார்களே... ஒருவேளை தமிழ்நாட்டில் ஆம் ஆத்மிக்கு உங்களை தலைமை ஏற்க அழைத்தால், ஏற்றுக்கொள்வீர்களா?''  

'' 'எப்போதும் நேர்மை என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். ஊழலற்ற சூழல் அரசமைப்பில் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக நிற்கிறேன். ஒரு சமூகம் முழுக்க முழுக்க நேர்மையாக இயங்கும்போதுதான், அதன் பிரதிபலிப்பாக அரசு நிர்வாகம் முழுக்கவே நேர்மையாகச் செயல்படும். ஆனால், இன்றைக்கு சமூக அமைப்பின் பெரும்பங்கில் ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. அப்படியரு சூழலில், நான் தனியாளாக அரசியலில் நேர்மையாகச் செயல்பட்டால், அது நிச்சயம் எதிர்விளைவுகளைத்தான் உண்டாக்கும். என் நேர்மை, அரசியலைத் தாண்டிய இந்தச் சமூகத்துக்கான நேர்மை. என் இலக்கு, தேர்தலோ... பதவிகளோ இல்லை. அடுத்த தலைமுறையை நேர்மையானதாக உருவாக்க வேண்டும் என்பதான் என் ஆசை. ஆக, அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை!''


No comments:

Post a Comment