சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jan 2015

ராமஜெயம் கொலை வழக்கு... திகில் ஃப்ளாஸ்பேக்! (மினி தொடர் -2)

நேரு போட்ட சபதம்...

ராமஜெயம் கொலை நடந்த பொழுது முன்னாள்  அமைச்சரும் ராமஜெயத்தின் அண்ணனுமான நேரு சென்னையில் இருந்தார்கொலை செய்தவர்கள் நேருவின் தொலைபேசி எண்ணை கேட்டு  போன் செய்ததாகவும்  அப்போது சொல்லப்பட்டது.
இந்நிலையில் நேரு தனது தம்பி கொலைக்குக்  காரணமானவர்களைக்  கண்டுபிடித்து ஆகவேண்டும் என பலமுறை காவல்துறை அதிகாரிகளை நேரிலும்    போனிலும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் கடந்த மூன்றாண்டுகளில், காவல்துறையின் கவனம் நேருவையும் அவரது உறவினர்களையும் வட்டமடிப்பதைத்  தவிர வேறு எங்கும் போகவில்லை. காரணம் ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, ராமஜெயம் உடன் இருந்த யாரையும் நேரு உடன் வைத்துக்கொள்வதோ அல்லது நெருங்க விடுவதோ இல்லை. ஆனால் தற்போது  ராமஜெயத்தின் கூட்டாளிகளைத்  தன்னோடு சேர்த்துக் கொண்டு  அவர்களுக்கு பொறுப்புகளும்  வழங்கியுள்ளார். இது போலீஸாரிடையே  சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
இப்படியிருக்கும் நிலையில், நேருவை சிபிசிஐடி போலீசார் நேரில் அழைத்து மணிக்கணக்கில் விசாரித்த சம்ப வங்கள் எல்லாம் நடந்துள்ளன.ஆனால்  இன்றுவரை கொலைக்கான காரணம் என்ன என்பதை மட்டும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான்  கொடுமை. இதோ கண்டுபிடிச்சிட்டோம்... அதோ கண்டுபிடிச்சிட்டோம் என காலம் கடத்துகிறார்களோ ஒழிய, குற்றவாளிகளைக்  கண்டுபிடித்தபாடில்லை என புலம்பி நிற்கிறது அவரின் குடும்பம்.

நிம்மதியிழந்த குடும்பம்

இப்போதும் கூட ராமஜெயத்தின் பெயரைக்கேட்டாலோ, அல்லது அவரைப்பற்றி பேசினாலோ நேருஉள்ளிட்ட அவரது குடும்பத்தினர்  அடுத்த சில நிமிடங்கள் வாயடைத்து  பேசாமல் நிற்பார்கள். அந்தளவுக்கு ராமஜெயம் கொலை நேருவின் குடும்பத்தை சீர்குலைய வைத்துள்ளது. இப்படியிருக்கும் போதுதான் நேரு, தனது தம்பி சாவுக்கு இவர்தான் காரணம் என  தங்களுக்கு தெரிந்த அடுத்த நிமிடம் `நான் உள்ளே இருப்பேன்` என சபதம்கூட போட்டுள்ளாராம். இப்போதும் ராமஜெயம் குடும்பம், நேரு குடும்பம், அவரது தம்பி குடும்பங்கள் என கூட்டு குடும்பமாகவே உள்ளார்கள். ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்த ராமஜெயம் இப்போது இல்லை.

சிபிசிஐடி போலீசாரின்  கால அவகாசமும் சிபிஐ விசாரணையும்

மூன்று வருடங்களாக முடிவுக்கு வராத இந்த கொலைவழக்கில், உண்மை வெளியே வரவேண்டுமானால் சிபிஐக்கு வழக்கை மாற்றிக்கொடுங்கள். அப்படி மாற்றினால்தான் உண்மை வெளியே வரும் என ராமஜெயத்தின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு சி.பி.சி..டி. சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், `ராமஜெயம் கொலை வழக்கில் 177 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் தேவை  நிச்சயம் குற்றவாளிகளைக்  கண்டுபிடித்துவிடுவோம்` என கூறியுள்ளனர். பதில் மனுவை விசாரித்த நீதிபதி மார்ச்.10 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

போலீஸார் சந்தேகப்படுவதுபோல்  ராமஜெயம் கொலைக் குற்றவாளி தன்  உறவினராக  இருந்தாலும், வேறு எவராக இருந்தாலும்  உண்மை வெளியே தெரியணும் என்கிறார் ராமஜெயத்தின் மனைவி லதாஇதுவரை நடந்த போலீஸ் விசாரணை  அனைத்தும் திக்குதெரியாத காட்டில் நிற்பதாகவே தெரிகின்றதுஇந்நிலையில் கால அவகாசம் தந்துள்ளது நீதிமன்றம். 

விடைதெரியாத இந்த ராமஜெயம் கொலை வழக்கில் உண்மையைக்  கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி நிற்கும் போலீஸார்...கடந்த ஶ்ரீரங்கம் சட்டமன்ற தேர்தலில் ராமஜெயம் விட்டசவால்...அந்தச் சவால்தான்   ராமஜெயம் கொலைக்கு காரணமா...  பார்க்கலாம்.




ஜெயலலிதாவுக்கு சவால்விட்ட ராமஜெயம்!

இதோ... ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. .தி.மு.. சார்பில் அமைச்சர்கள் படை களமிறங்கியிருக்கிறது.
போட்டிக்கு பொதுவேட்பாளர் என்றெல்லாம் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து சோர்ந்துபோன கருணாநிதி, 63 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பட்டியலை அறிவித்தார்.
ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்கணும் என .தி.மு..வினரும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அச்சாரம் ஸ்ரீரங்கம் தேர்தல்தான் என நினைக்கும் தி.மு..வினரும் ஓடியாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலுக்கு திட்டம் தீட்டி வேலை செய்ய ராமஜெயம் இல்லாதது தி.மு..வினருக்கு மிகப்பெரிய மைனஸ்தான். 

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கரைவேட்டி கட்டாத கட்சிக்காரராய் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வலம் வந்தவர் ராமஜெயம். ''ஸ்ரீரங்கம் .தி.மு..வின் கோட்டை, அவர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என சொல்லவது தவறு. ஜெயலலிதா ஒன்றும் தோல்வியே அடையாதவர் இல்லை. ஜெயலலிதாவை நேரில் சந்திக்க ஆசைப்பட்டால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கூட அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டுதான் பார்க்க வேண்டும். ஆனால், தி.மு.. வேட்பாளர் அப்படிப்பட்டவர் இல்லை. நீங்கள் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வருவார். சாதாரணமானவர். உங்களுக்காக ஓடி உழைக்கக்கூடியவர்.

ஜெயலலிதாவுக்கு பயந்துகொண்டு பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்க, நாலைந்து இடத்தில் நோட்டீஸ் கொடுத்துவிட்டு கலைந்துசெல்கின்ற நிலை அங்கே இருக்கு. நாங்கள் அப்படியில்லை. கிராமம் கிராமமாக மக்களைத் தேடி செல்கின்றோம். மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் அதுதான் எங்களின் பலம். 

தி.மு.. என்கிற கட்சியே இல்லாத அளவுக்கு அந்தக் கட்சியைத் தோற்கடிப்பேன் என தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா சொல்லுறாங்க. அப்படிப்பட்ட ஜெயலலிதாவைத் தோற்கடிப்பதுதான் எனது லட்சியம். ஜெயலலிதாவை வீழ்த்த ஸ்ரீரங்கத்தில் நான் மேற்கொள்ளும் வேலை, வரலாற்று சிறப்பு மிக்க வேலை. நமது  வியூகம், 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும். எந்த வழக்கு, அடக்குமுறை வந்தாலும் நான் துணையிருக்கிறேன். ராணுவ சிப்பாய்களைப்போல வேலை செய்யுங்கள்" என தி.மு..வினருக்கு கட்டளையிட்டார் ராமஜெயம். 

இந்த சவாலில் ராமஜெயம் தோற்றுபோனாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரான ஜெயலலிதா, 41,848 ஓட்டுகள்தான் முன்னிலை பெற்றார். ஜெயலலிதாவின் வாக்குகள் வித்தியாசம் 50 ஆயிரத்தைக்கூட தாண்டாதற்கு ராமஜெயம் தடைக்கல்லாக இருந்தார். கடுமையாக உழைத்தார். சவால் விட்டார் 

''
இந்த சவால்கள்தான் ஆட்சியாளர்களுக்கு ராமஜெயத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. மக்கள் நெருக்கம் மிக்க தில்லை நகர் பகுதியில் இருந்து ராமஜெயம் கடத்தப்பட்டதும், நகரின் முக்கிய வீதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள்  இயங்காமல் இருந்தது. விசாரணை என்கிற பெயரில் காவல்துறை அதிகாரிகள் நேருவின் குடும்பத்தினரையே வட்டமிட்டனர்" என்று சொல்லும் ராமஜெயத்தின் ஆதவாளர்கள், ''இந்த கொலைக்கான எந்தத் துருப்பையும் கண்டுபிடிக்காமல் இருக்க, இந்தச் சவால் காரணமாக இருக்கலாம். இதன் பின்னணியில் சில காவல்துறை அதிகாரிகள் மூளையாக செயல்பட்டிருக்கலாம்" என்கிறார்கள்.
சி.பி.. கைகளுக்கு விசாரணை சென்றால்தான் இந்த மரணத்தின் மர்மங்கள் விலகும் என்பது அவர்களின் கருத்து. 

ராமஜெயத்தை கொன்றவர்கள் விமானத்தில் வந்தார்களா... ராமஜெயம் கொலையில் வேறு என்னென்ன மர்மங்கள் உள்ளன? என்பதை நாளைப்  பார்க்கலாம்.


ராமஜெயத்தை கொன்றவர்கள் விமானத்தில் வந்தார்களா?

ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதம் இலங்கையில் உள்ள மட்டக்களப்பு பகுதியில் நடக்கும் கொலைகள் பாணி என்றும், மலேசியா ஸ்டைல் என்றும் சொல்லப்பட்டது. காரணம், கட்டுக் கம்பிக் குவியலில் இருந்து கம்பிகளை எடுத்து ராமஜெயத்தின் கை, கால்களைக் கட்டி, வேனின் ரெக்சின் ஸீட் மீது போர்த்தப்பட்டு இருக்கும் துணியைக் கிழித்து வாயில் வைத்து அடைத்து இருந்தார்கள். தலையின் பின்பக்கம் கனமான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டு இருந்தது.

இவை எல்லாம் வெளிநாட்டு பாணி, இவ்வளவு கொடூரமாக  ராமஜெயத்தை கொலை செய்யும் அளவுக்கு யாரும் இங்கு இல்லை. காரணம் ராமஜெயம் உயிரோடு இருந்தவரை அவரை ஸ்கெட்ச் போட்ட பலரை தன்வயப்படுத்துவதில் வல்லவர் அவர் என்கிறார்கள். இதனால், திருச்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் ராமஜெயத்துடன் நல்ல லிங்க்கில் இருந்தார்களாம். எனவேதான், தனிப்படைப் போலீஸார், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட 2012 மார்ச் 29ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு சென்றவர்கள், வந்தவர்கள் என அனைவரின் பெயர் பட்டியலையும் கையோடு வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினார்கள்.

சவால் விட்ட ரவுடி குணா

திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி மண்ணச்சநல்லூர் குணா. முட்டை ரவி கோஷ்டியைச் சேர்ந்தவர் இந்த குணா. முட்டை ரவி என்கவுண்டரில் கொல்லப்பட, அந்த என்கவுண்டருக்குப் பின்புலமாக இருந்தவர் ராமஜெயம் என கருதினான் குணா. எனவே, முட்டை ரவியின் மரணத்துக்குக் காரணமான ராமஜெயத்தைப் போடுவேன் என சவால் விட்டதாக பரபர தகவல் ஒன்று அந்த சமயத்தில் உலா வந்தது. 'ராமஜெயத்தைக் கொலை செய்ய ஒரு வி..பி. என்னை அணுகினார்என்று  சொன்னதாகவும், கொலை நடந்தபோது  சொல்லப்பட்டது. ராமஜெயம் கொலை செய்யப்பட்ட போது குணா சிறையில் இருந்தான். ஆனாலும், அவனை தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள் போலீஸார்.

ராமஜெயத்தின் நிறைவேறாத ஆசை

தேர்தலில் நின்று ஜெயித்துவிட வேண்டும் என்பது ராமஜெயத்தின் ஆசையாக இருந்தது. குறிப்பாக, எம்.பி. ஆகிவிட வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நிற்க ஆசைப்பட்டு, அதற்கான வேலையும் செய்தார். ஆனால், மெலிடத்து சப்போர்ட் காரணமாக அவருடைய உறவினரான நடிகர் நெப்போலியனுக்கு ஸீட் கிடைத்தது. இதனால், சென்னை அண்ணா அறிவாலயம் வாசலில் ராமஜெயத்துக்கும் - நெப்போலியனுக்கும் நேரடி மோதல் வெடித்து, கைகலப்பு வரை சென்றது. இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட நெப்போலியன் மத்திய இணை அமைச்சரானார். பிறகு அமைதியானார். இப்போது பி.ஜே.பி.யில் சேர்ந்துவிட்டார். அது தனிக்கதை.

2014
நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் ஸீட் ராமஜெயத்துக்குதான் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில்தான் படுகொலை செய்யப்பட்டார் ராமஜெயம்!

மர்மம் விலகுமா?

ஆரம்பத்தில் நடத்தப்பட்ட திருச்சி மாநகர போலீஸாரின் விசாரணையும் சரி, சி.பி.சி..டி. போலீஸாரின் விசாரணையும் சரி, ராமஜெயத்தின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சுற்றி சுற்றியே வந்தது. இதில் கடுப்பான நேரு குடும்பத்தினர், 'திருச்சியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கொலை நடந்ததில் இருந்து இப்போது வரை இங்கேயே இருக்கிறார்கள். அதனால், இந்தக் கொலை வழக்கு நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை' என்று சொல்லி வந்தார்.

குறிப்பாக திருச்சி மாநகர காவல்துறை கமிஷனராக இருந்த சைலேஷ்குமார் யாதவ், மூன்றாண்டுகளுக்கும் மேலாக அதே பொறுப்பில் நீடித்தார். இந்த அதிகாரிகள் அதே இடத்தில் தொடர்ந்து பணி புரிவதற்கும், இந்தக் கொலை வழக்கு துப்பறியாமல் கிடப்பதற்கும் தொடர்பிருப்பதாக ராமஜெயத்தின் குடும்பத்தினர் சந்தேகப்பட்டனர். இப்போது இடைத்தேர்தலை காரணம் காட்டி சைலேஷ் குமார் யாதவை மதுரைக்கு மாற்றியுள்ளார்கள். இனி  ஏதாவது துப்பு துலங்க வாய்ப்புள்ளது என்று ராமஜெயம் தரப்பில் சொல்லப்படுகிறது.

ராமஜெயம் நல்லவரா கெட்டவரா என விவாதம் பல நடக்கலாம். ஒரு மனிதனை கொடூரமாகக் கொன்றதற்கான காரணத்தைக்கூட நம்மூர் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் வேதனை!

-
முற்றும்-



No comments:

Post a Comment