சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Jan 2015

'சர்தார் மாப்பிள்ளையா... நோ': அலறும் டாப்ஸி!

அக்ஷய் குமாருடன் நடித்த பேபி இந்திப் படம் ரிலீஸானதில் செம ஹேப்பியாக இருக்கிறார் வெள்ளாவிப் பொண்ணு டாப்ஸி பன்னு.
ஆனால், டெல்லியைச் சேர்ந்த சீக்கியர்கள், இப்போது டாப்ஸி மீது கொலை வெறியில் இருக்கிறார்கள். காரணம், புனேவில் ஒரு இந்திப் பத்திரிகைக்கு அம்மணி கொடுத்த ஸ்டேட்மெண்ட்!
மேலும், அவர் நான் ஒரு கோபக்காரி; பிடிவாதக்காரி; பொறுமை என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது; இந்தியாவை விட்டு வெறியேறி சுதந்திரமாக வாழ வேண்டும்!’ என்று ஏடாகூடப் பேட்டி கொடுத்ததில், ‘ரொம்பத் திமிர் பிடிச்ச பொண்ணா இருப்பா போல!’ என்று பாலிவுட்டிலும் கெட்ட பேர் வாங்கிவிட்டார் டாப்ஸி.

‘‘
நான் ஒரு நடிகையாவேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. சிறு வயதில் நான் படிப்பாளி மட்டும் இல்லை; அறிவாளியும்கூட. கணிதம்தான் எனக்குப் பிடித்த பாடம். பாக்கெட் மணிக்காக, காலேஜில் மாடலிங் பண்ணினேன். அப்படித்தான் எனக்குத் தமிழில் தனுஷுடன் ஆடுகளம் படத்துக்கு வாய்ப்பு வந்தது.
ஆடுகளம் தோல்வியடைந்திருந்தால் திரும்பவும் நான் எம்.பி.. படிக்கலாம் என்று என் அப்பாவிடம் சொல்லியிருந்தேன். ஆனால், தேசிய விருது வாங்கியதில் ரொம்ப மகிழ்ச்சி. அப்புறம் பாலிவுட்டில் ப்ரீத்தி ஜிந்தாவின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்று என்னைக் கேட்டார்கள். என் பாலிவுட் பிரவேசம் இப்படித்தான் ஆரம்பித்தது. முதலில் நீரஜ் சார், ‘பேபி படத்திற்கு டாப்ஸி சரியாகப் பொருந்தமாட்டாள். ரொம்பக் கூச்ச சுபாவம் உள்ள பொண்ணு என்று என்னைப் பற்றி யாரோ சொன்னதாகச் சொன்னார். ஆனால், படம் ரஷ் பார்த்துவிட்டு அவரே என்னைப் பாராட்டினார்!’’ என்ற டாப்ஸி, திருமணம் பற்றிய கேள்விக்குப் பதில் சொன்னதில்தான் சர்தார்கள் டர்' ஆகிவிட்டனராம்.

‘‘
நான் பள்ளியில் படிக்கும்போது முதன் முதலாக என்னை ஒருவன் புரபோஸ் செய்தான். அவனை இன்று வரை என்னால் மறக்க முடியாது. அப்புறம் காலேஜில் ஏகப்பட்ட பேர்  லவ் யூ சொன்னார்கள். நான்தான் அடமென்ட் ஆச்சே. என் கண்டிஷன்களுக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை. என் அப்பா திருமண விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று சொல்லிவிட்டார். என் அப்பா ஒரு சீக்கியர். ‘எனக்கு சர்தார் மாப்பிள்ளையை மட்டும் தயவுசெய்து பார்த்துடாதீங்க என்று கேட்டுக்கொண்டேன். நிறைய சர்தார்களுடன் டேட்டிங் போக வாய்ப்பு வந்தது. என்ன காரணம் என்றே தெரியவில்லை; சர்தார்களை எனக்குப் பிடிக்கவே இல்லை.

எனக்கு ஆசைகளும் ரொம்ப அதிகம். எப்படியாவது ஹ்ரித்திக் ரோஷனுடன் ஜோடி சேர்ந்துவிட ஆசை; மணிரத்னத்தின் படத்தில் இதயத்தை உருக்கும் காதல் கதையில் நடிக்க ஆசை; ஒரு தென்னிந்தியரைக் கல்யாணம் முடித்து இந்தியாவை விட்டு வெகுதூரம் சென்று புது வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை; அதைவிட எனக்கு தமிழர்களோடு டேட்டிங் போக ரொம்ப ஆசை’’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பொண்ணு!.

யாராவது தமிழர்கள் இருக்கீங்களா?

No comments:

Post a Comment