சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Jan 2015

வருகிறது ஆண்களுக்கான 153 சிசி ஸ்கூட்டர்!


ந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கு எப்போதுமே நிலையான மார்க்கெட் உண்டு. டிராஃபிக்கில் கியரைப் போட்டு, கிளட்ச்சைப் பிடித்து ஓட்டி கடுப்பான மக்களுக்கு வந்த வரப்பிரசாதம்தான் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்கள். அதிலும், பெண்களுக்காகவே களமிறங்கிய ஸ்கூட்டர்கள் அனைத்துமே விற்பனையில் ஹிட்! ஆனால், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஒரே ஒரு குறை - சிசி அதிகமான ஸ்கூட்டர்கள் இல்லாதது. இப்போது அந்தக் குறையும் தீரப் போகிறது. ‘ரைடிங் ஸ்டைல் .கே. ஆனா, பெர்ஃபாமென்ஸ் பத்தலைஎன்பவர்களுக்காக விரைவில் வரப் போகிறது ஹோண்டாவின் PCX 150 சிசி ஸ்கூட்டர்.


ஹோண்டாவைத் தூக்கி நிறுத்தியதில் பெரும் பங்கு ஆக்டிவாவுக்கு உண்டு. இப்போது பவர்ஃபுல்லான 150 சிசி மார்க்கெட்டில் களம் இறக்குவதற்காக, ஹோண்டா பெரிதும் நம்பிக்கையோடு PCX 150சிசி ஸ்கூட்டரை இந்தியாவில் டெஸ்ட் செய்து வருகிறது. 2014 டெல்லி மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்ட PCX ஸ்கூட்டர் - 153 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், லிக்விட் கூல்டு இன்ஜினுடன் களமிறங்க இருக்கிறது. பைக்குகளுக்கு இணையாக 13.4bhp பவரும், 1.4kgm டார்க்கும் கொண்டு மிரட்ட வருகிறது. இதன் வேரியோமேட்டிக் கியர் பாக்ஸ், பவரை பின் வீலுக்கு விரைவாகக் கொண்டு செல்வதால், பெர்ஃபாமென்ஸுக்குப் பஞ்சம் இருக்காது.

சூப்பர் ஸ்கூட்டர் போல் காணப்படும் இதில் விண்ட் டெஃப்ளெக்டர் எனப்பதும் வைஸர் இருப்பதால், சீரான ஸ்டெபிளிட்டி கிடைக்க வாய்ப்புண்டு. இதனால், காற்று முகத்தில் அறைய வாய்ப்பில்லை. ஸ்டைலான அலாய் வீல்களும், டிஸ்க்கும்கூட PCX-ல் உண்டு. அனலாக் மீட்டர்களுடன் சின்னதாக டிஜிட்டல் டிஸ்ப்ளே, முன்னால் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் கொண்ட PCXல் இருக்கும் ஒரே குறை - இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவும், முன் பக்க இட வசதியும்தான். டேங்க் கொள்ளளவு வெறும் 8 லிட்டர்தான். சீட்டுக்கு அடியில் பெட்ரோல் டேங்க் டனல் முன்புறம் நீண்டு வந்து ஸ்டோரேஜ் ஸ்பேஸைக் காலி செய்வதால், மளிகைச் சாமான்கள், லக்கேஜ்களை சிங்கிளாக எடுத்துச் செல்ல வாய்ப்பில்லை.

பொதுவாக, 100 சிசி ஸ்கூட்டர்கள், 100 கிலோவில் இருந்து 110 கிலோ வரைதான் எடை இருக்கும். ஆனால், PCX-ன் எடை 135 கிலோ என்பதால், ஆஜானுபாகுவான ஆண்கள் மட்டுமே இதை எளிதாகக் கையாள வாய்ப்பு இருக்கிறது.


இதன் ஆன்-ரோடு விலை ரூ.77,000 இருக்கலாம். இது 125 சிசி பியாஜியோ வெஸ்பாவின் விலை!


No comments:

Post a Comment