சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jan 2015

போலீஸ் ஸ்டேஷனில் நடந்த வக்கிரம்

''ய்... மூணு பேரும் நில்லுங்கடா... நீங்க செல்போன் திருடுறவனுங்கதான? ஸ்டேஷனுக்கு வாங்கடா... என்கொயரி பண்ணணும்!'' வழிமறித்தது போலீஸ்.

 ''சார், நாங்க திருடறவங்க இல்ல. நைட் ஷோ சினிமாவுக்குப் போயிட்டு இருக்கோம்!'' பதற்றத்துடன் அந்த மூன்று இளைஞர்கள் சொன்னதை போலீஸ் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ''விட்டேன் செவுள் பிஞ்சுரும்... நடங்கடா நாய்களா...'' என்று அந்த மூவரையும் மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக்கொண்டு போனார்கள்.

சென்னை தி.நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், பசுபதி, கார்த்திக் என்ற மூவரும் நெருங்கிய நண்பர்கள். நைட் ஷோ சினிமாவுக்கு கிளம்பிய சமயத்தில்தான் போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார்கள். அதன் பிறகு, மாம்பலம் காவல் நிலையத்தில் நடந்த அத்தனையும் 'உவ்வே...’ சொல்லவைக்கும் அதிர்ச்சி ரகம்!
''ஸ்டேஷனுக்குள் போனதும், 'உங்க மூணு பேருக்கும் யாருடா குளோஸ் ஃபிரெண்ட்னு கேட்டாங்க. அமைதியா இருந்தோம். அதுவரை மிரட்டிட்டு இருந்த போலீஸ்காரங்க அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அடிக்குப் பயந்து, 'யுவராஜ் சார்... அவன் இன்னைக்கு எங்களோடு வரல...’னு சொன்னோம். யுவராஜ் அட்ரஸை வாங்கிட்டுப் போய் அவனையும் தூக்கிட்டு வந்துட்டாங்க. அதுக்கப்புறம்....' சதீஷ்குமாருக்கு வார்த்தைகள் தடுமாறுகிறது.
சதீஷ்குமாரை ஆசுவாசப்படுத்திவிட்டு அவரது வழக்கறிஞர் ராமமூர்த்தி நம்மிடம் நடந்தவற்றை விவரித்தார். ''போலீஸ் ஸ்டேஷன்ல நடந்ததைக் கேட்கவே பகீர்னு இருக்குங்க. 'டேய் செல்போனத் திருடுனது நீதான்னு ஒத்துக்கிட்டு கையெழுத்துப்போடு... இல்ல எவனும் வெளியில போக முடியாது!’ என்று சதீஷ்குமாரை மிரட்டியிருக்காங்க. ஆனால் சதீஷ்குமார் சம்மதிக்கவில்லை. பொறுமை இழந்த போலீஸ்காரர்கள், நான்கு பேரையும் உடைகளைக் கழற்ற வைத்துள்ளனர். நிர்வாணமாக நின்றவர்களை,  'நாங்க சொல்ற மாதிரி பண்ணுங்கடாஎன வக்கிரமான செய்கைகளைச் செய்யச் சொல்லி உள்ளனர். அதைப் பார்த்து, எஸ்.. முரளி, கான்ஸ்டபிள்கள் சீனிவாசன், சேது என்ற 'கண்ணியம்மிக்க போலீஸ்காரர்கள் ரசித்துள்ளனர். ஒரு கட்டத்தில், சதீஷ்குமாரின் ஆண் உறுப்பில் இருந்து ரத்தம் கொட்டி அவர் மயக்கமடைந்துள்ளார். மறுநாள் சதீஷ்குமாரை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிக்சை செய்துவிட்டு, மீண்டும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துவிட்டனர். பிறகு, செயின் பறித்தது, செல்போன் திருடியது உள்பட நான்கு வழக்குகளை அவர்கள் மீது போட்டு சதீஷ்குமார் தவிர மற்ற மூன்று பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். சதீஷ்குமாருக்கு 19 வயது என்பதால், அவரை புழல் சிறையில் அடைத்துவிட்டனர். புழல் சிறைக்குள்ளும் சதீஷ்குமாருக்கு தொடர்ந்து வயிற்று வலியும் வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது. அதனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவருக்கு, நடந்த விபரீதம் புரிந்து, 'சிறைக்குள் யாராவது உன்னை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தினார்களா?’ என்று விசாரித்தபோதுதான் சதீஷ்குமார் நடந்த கொடூரங்களைச் சொல்லி கதறியிருக்கிறார். அதிர்ந்துபோன சிறை மருத்துவர் போலீஸ் கமிஷனருக்கும் டி.ஜி.பிக்கும் கடிதம் எழுதினார். எனக்கும் தகவல் சொன்னார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி, சி.பி.சி..டி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் நடந்தபோது காவல் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர்களிடம் விசாரணை நடந்திருக்கிறது. அவர்கள் தங்களது வாக்குமூலத்தில், 'அந்தப் பையன்கள் வலிக்கிறது என்று கத்தியதும் நாங்கள் விட்டுவிட்டோம்என்று சொல்லியிருக்கிறார்கள். தற்போது கான்ஸ்டபிள்கள் சீனிவாசன், சேது ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சப்இன்ஸ்பெக்டர் முரளி தற்கொலைக்கு முயன்றதாகவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொல்கிறார்கள். இந்த வக்கிரமான செயல் அத்தனைக்கும் மூலகாரணமான அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம்'' என்று சொல்லி முடித்தார்.
காவல் துறை மக்களின் நண்பனாகச் செயல்படும் காலம் எப்போது?





No comments:

Post a Comment