சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jan 2015

உயர் நீதிமன்ற தீர்ப்பால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூடும் நிலை ஏற்படும்: ராமதாஸ்

அரசுப் பணியாளர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால் தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் மூடும் நிலை ஏற்படும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


இதுகுறித்து பா... நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசுப் பணியாளர்கள் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மற்றும் சார்புப் பணி விதி 10 () பிரிவு செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பால் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பறிக்கப்படும் ஆபத்துள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு வழிகாட்டுவதே தமிழ்நாடு அரசு மற்றும் சார்புப் பணி விதி 10 () பிரிவு தான். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்கான ஊழியர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அப்பாற்பட்டு ஊழியர்களை தேர்வு செய்யும்போது, வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து தகுதியுள்ளவர்களின் பட்டியலைப் பெற்று அவர்களில் ஒருவரைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் சார்புப் பணி விதி 10 () பிரிவு கூறுகிறது. ஒருவேளை சிறப்பு பணிகளுக்கான விண்ணப்பதாரர்கள் எவரும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு பட்டியலில் இல்லை என்றால், அதற்கான சான்றிதழை வேலைவாய்ப்புத் துறை அதிகாரியிடமிருந்து பெற்று, அதன் அடிப்படையில் தான் நாளிதழ்களில் விளம்பரம் செய்து  தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற வேண்டும் என்றும் இந்த விதி கூறுகிறது.

இந்த விதியின் அடிப்படையில் தான் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒருவகையில் பார்த்தால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வேலை பெற்றவர்களைவிட தமிழ்நாடு அரசு மற்றும் சார்புப் பணி விதி 10 () பிரிவின்படி வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக வேலை பெற்றவர்கள் தான் அதிகம். அவ்வாறு இருக்கும்போது அங்கீகாரம் பெறாத தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்ததால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பை இழந்த சிலர் தொடர்ந்த வழக்கில் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த விதியே செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது முறையற்றது. வழக்குத் தொடர்ந்தோருக்கு உதவ வேண்டும் என்று நீதிமன்றம் நினைத்திருந்தால் அவர்களுக்கு வேறு வகையில் நிவாரணம் வழங்கியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அரசு மற்றும் சார்புப் பணி விதியை செல்லாது என்று அறிவித்துவிட்டு, இனி அரசுப் பணிக்கு வேலைவாய்ப்பகம் மூலமாகவும், விளம்பரம் மூலமாகவும் ஆட்களைத் தேர்வு செய்யலாம் என்று தீர்ப்பளித்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.


வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்யும்போது அதில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. மாறாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப் பட்டியலில் இருந்து ஒருபுறம் தகுதியானவர்களின் விவரங்களைப் பெற்று, இன்னொருபுறம் விளம்பரம் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று ஆட்களைத் தேர்வு செய்யும்போது வேலைவாய்ப்பக பதிவுமூப்பு, தகுதி, திறமை ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டு பணமும், செல்வாக்கும் உள்ளோருக்கு மட்டும் தான் வேலை என்ற நிலை ஏற்பட்டுவிடும். மொத்தத்தில் சமூக நீதி குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு தான் இந்தத் தீர்ப்பு வழிவகுக்கும். அத்தகைய நிலை ஏற்பட்டால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் சுமார் 94 லட்சம் பேருக்கு அரசு வேலை என்பது எட்டாக்கனியாகிவிடும்; அவர்களின் எதிர்காலம் சிதைந்துவிடும். ஒரே ஒரு ஆண்டாவது ஆசிரியர் பணி செய்துவிட்டு அதன்பின்னர் ஓய்வு பெறலாம் என்ற எண்ணத்தில் வேலைவாய்ப்பக பதிவை 57 வயது வரை புதுப்பித்து வருபவர்களின் கனவுகள் கருகிவிடும். தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனைத்தையும் மூடும் நிலை ஏற்படும். இந்த உண்மைகளையெல்லாம் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி இப்படி ஒரு தீர்ப்பு வருவதை தமிழக அரசு தவிர்த்திருக்க வேண்டும். அதை அரசு செய்யத் தவறியதன் மூலம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு துரோகம் செய்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆட்சியாளர்கள் மேல்முறையீடு செய்து சாதகமான தீர்ப்பை பெற வேண்டும். ஒருவேளை இது சாத்தியமாகவில்லை என்றால், வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்திருப்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்; வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு ஏற்றவகையில் கூடுதல் தகுதி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
No comments:

Post a Comment