சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Jan 2015

தமிழ் மொழியை காக்க சும்மா பேசிக்கொண்டிருந்தால் போதுமா?


'க்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான, யுனெஸ்கோ அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் இன்னும் சில நூற்றாண்டுகளில் 12 மொழிகள்தான் உலகில் பேசப்படும். இதில் தமிழ் என்றொரு மொழி இல்லாமல் போக வாய்ப்புள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள்.
இப்போதே 27 மொழிகளின் கலவையாகத்தான் தமிழ் மொழி பேசப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், யுனெஸ்கோவின் கூற்று உண்மையாகிவிடும்என்கிறார் தேனி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்த இளங்குமரன்.
இப்படி பேசிக் கொண்டிருக்காமல், மொழியைக்  காக்கும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார் அவர். இளங்குமரன்.. .திருக்குறள் மன்றத்தின் பொறுப்பாளர். 

எங்கள் கிராமத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ்ப் பெயர்களைத்தான் வைக்கிறோம். இவர் களுக்காகவே இலக்கியங்களை தேடிப் படித்து பெயர்களைத் தேர்ந்தெடுத்து கூறுவேன். இப்போது எங்கள் கிராமத்தில் 60 சதவிகித குழந்தைகள் கலப்படமில்லாத தமிழ்ப் பெயர்களோடு வலம் வருகின்றனர்என்று சந்தோஷம் பொங்கச் சொல்கிறார் இளங்குமரன் 

"
இளம்வயதில் இருந்தே இலக்கியங்களின் மீது ஆர்வம். எங்கள் கிராமத்துப் பெரியவர் ஒருவர் ராமாயணத் தை வாசிக்க, அதைக் கேட்டுக்கொண்டிருப்பதில் ஆரம்பமானது என்னுடைய இலக்கிய ஆர்வம். அப்பாவோடு வயல்காட்டுக்குச் செல்லும்போது அவரிடம் புராணக் கதைகளை சொல்ல கேட்டுக் கொண்டேயிருப்பேன். வளரும் பருவத்தில் தமிழ்வாணன், சாண்டில்யன் போன்றோரின் நாவல்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அதற்குப் பிறகு பாரதியார், பாரதிதாசன், ஆகியோரின் கவிதைகள் என்னை ஈர்த்தன 

இந்தக் காலகட்டத்தில்தான் எங்கள் ஊரைச் சேர்ந்த சிவசங்கரன் , 1984 ம் திருக்குறள் மன்றம் எனும் அமைப் பை இங்கே நிறுவினார். பள்ளிக்குச் செல்லாமல் தானே முயன்று சங்க இலக்கியங்களிலும், இலக்கணங்க ளிலும் கற்றுத் தேர்ந்த அவர், தான் உணர்ந்த தமிழ் மொழியின் பெருமைகளை திருக்குறள் வாயிலாக பரப்பு வதற்காகவே இந்த மன்றத்தை நிறுவினார். 

இளைஞர்களாக இருந்த எங்களிடம் திருக்குறளைப் பற்றி சுவரஸ்யமாக கேலியும் கிண்டலுமாக விளை யாட்டாய்க் கூறி, அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத் தினார்ஒரு கட்டத்தில் அந்த மன்றத்தை அவரால் தொடர முடியாத நிலை ஏற்பட்டபோது, 1997ம் ஆண்டில் நாங்கள் அதை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்தோம்.

இன்னும் ஆழமாக மக்களிடையே திருக்குறளின் கருத்துக்களை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்று யோசித்தபோது புலவர். இரா.இளங்குமரனார் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. குறள் வழித் திருமணங் களின் முன்னோடியான அவர், திருக்குறளுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர். இவரின் பாதையில் பயணித்துதான், எங்கள் கிராமத்தில் பல விஷயங்களை முன்னெடுத்து செய்கிறோம்.

ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகிய செயல்பாடுகளின் மூலமாக திருக்குறளை யும், அதன் மேன்மைகளையும் மாணவர்களிடம் தொடர்ந்து கொண்டு சேர்த்து வந்த நிலையில், பெரியோர் களிடமும் இதையெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று குறள் வழித் திருமணத்தை அறிமுகப்படுத் தினேன். திருமண பத்திரிக்கைகள் தொடங்கி திருமணம் என்ற பெயரில் நடக்கும் சடங்குகள் அனைத்தை யும் மாற்றியிருக்கிறோம். இந்த தமிழ் வழித் திருமணத்தை அனைவரும் விரும்பி ஏற்கின்றனர். புதுமனை புகுவிழாவையும் தமிழ்வழியில் நடத்துகிறோம்என்றார்.

தொடர்ந்து பேசிய இளங்குமரன், “ இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வருவோரிடம், உலகின் முதல் மொழி என்ற பெருமைக்குரியது நம் தாய்மொழி தமிழ். இதைக் காக்க வேண்டியது நமது கடமை. ஒரு மொழி அழிந்தால், இனமே அழிந்துவிடும். அதனால் எல்லோரும் தமிழ் மொழியிலேயே பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி வருவதோடு, அச்சிட்டுக் கொடுப்போம் என்று சொல்லும் இளங்குமரன் திருக்குறள் மன்றத்தில் இன்னும் சில கடுமையான கட்டுப்பாடுகளையும் செயல்படுத்துவதாக குறிப்பிடுகிறார்.

திருக்குறள் மன்றத்தில் பெரும்பாலும் இளைஞர்களே உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் எவரும் மது அருந்தும் பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ கிடையாது. இதை ஒரு பண்பாட்டுத் தளமாகவே போற்றி வருவதாகக் குறிப்பிடுகிறார் கம்பீரமாக...

தமிழின் மேன்மைக்கு அணிலாய் தன் பங்களிப்பை செய்யும் திருககுறள் மன்றத்தினையும், இளங்குமரனை யும் நிச்சயம் பாராட்டலாம்.!


No comments:

Post a Comment