கிரானைட் முறைகேடு பற்றி விசாரணை நடத்தி வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க கோரி, தே.மு.தி.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இதுவரை சென்னையில்தான் நடைபெற்று வந்தன. இந்நிலையில், அக்கட்சியின் 9 ஆவது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கோவை வெள்ளக்கிணறு ஸ்ரீலட்சுமி நாராயணா மஹாலில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் தேமுதிகவின் 114 செயற்குழு உறுப்பினர்கள், 285 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட முதல்நிலை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேமுதிகவின் 114 செயற்குழு உறுப்பினர்கள், 285 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட முதல்நிலை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செயற்குழு,பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் கோவை அவினாசி சாலையில் உள்ள ஹோட்டலில் நிர்வாகிகளைச் சந்தித்தார். அதன் பின்னர் அங்கேயே தங்கியிருந்தார். இன்று காலை அங்கிருந்து கிளம்பி வெள்ளக்கிணறு ஸ்ரீலட்சுமி நாராயணா மஹாலுக்கு வந்தார்.
பின்னர் அவரின் தலைமையில் தேமு திக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. முதலில் செயற்குழு கூட்டம் நடந்தது. பின்னர் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் மத்திய, மாநில அரசியல் நிலைமைகள் குறித்தும், தேமுதிக வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் வருகிற 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட வேண்டும் என்று தேமுதிகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் இதை தற்போது பாஜக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும் பாஜக கூட்டணியில் நீடிக்கவே தேமுதிக விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி தேமுதிக நிர்வாகிகளின் கருத்து குறித்து விஜயகாந்த் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பால், மின்சாரம் மற்றும் உர விலை உயர்வைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சகாயம் குழுவின் விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், கனிம மணல் கொள்ளை மற்றும் ஆவின் பால் முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும், மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்கள், சர்க்கரை ஆலைப் பணியாளர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண நதிநீர் இணைப்பை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக புதிய நதிநீர்த் திட்டத்தை தொடங்கும் முன்பு மாநில அரசுகளிடம் ஆலோசிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
தமிழக மீனவர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment