சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Jan 2015

லெனோவாவின் புதிய 4ஜி ஸ்மார்ட் போன் -A6000

சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்- தலைமையகமாக கொண்டு இயங்கும் லெனோவா நிறுவனம் தனது புதிய 4ஜி ஸ்மார்ட் போன்- இன்று அறிமுகப்படுத்தியது.

Vibe
என்னும் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்சை இந்த மொபைலுடன் இணைக்கலாம். அதேப்போல இந்த மொபைலில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள Guevara என்னும்அப்ளிகேஷன் மூலம் 10மில்லியன் பாடல்களை கேட்டு மகிழலாம்.

சரி, இனி இந்த மொபைலை பற்றிய விளக்க விவரத்தை பார்க்கலாம்.

இயங்குதளம்:

ஆண்ட்ராய்டு கிட்கேட்  4.4 ஓஎஸ்

உருவளவை:

141x70x8.2
மிமீ மற்றும் 128கிராம் எடை.

டிஸ்ப்ளே:

5
இன்ஜ் தொடு திரையுடன் HD IPS
டிஸ்பிளேவை (1280 x 720) கொண்டுள்ளது.

பிராசசர்:

1
ஜிபி ரேம்-வுடன் கூடிய 1.2GHz Snapdragon 410 quad-core Adreno 306 GPU பிராசசரை கொண்டு இயங்குகிறது.

நினைவகம்:

8
ஜிபி உள் நினைவக போன் மெமரியை கொண்டுள்ளது. மெமரி
கார்டு- ஏற்றுக் கொள்கிறது.

கேமரா:

LED
பிளாஷ்-வுடன் கூடிய 8
மெகா பிக்சல் திறன் கொண்ட பின் பக்க கேமிராவும்,
2
மெகா பிக்சல் முன் பக்க கேமிராவும் கொண்டுள்ளது.

பேட்டரி:

இதன் பேட்டரி 2,300mAh திறன் கொண்டது. தொடர்ந்து பயன்படுத்தினால் 13மணி நேரம் வரையும்
பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 11.5 நாட்கள் வரை பேட்டரி தாங்கும். 


சிம்:

இந்த மொபைலில் இரண்டு சிம்களை இயக்கலாம். 

நிறம்:

கருப்பு நிறத்தில் இந்தப் போன் வெளி வருகிறது.

இணைப்பு:

நெட்வொர்க்
இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும்
ஜி.பி.எஸ். ஆகிய தொழில்
நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.
4
ஜி LTE இணைப்பில் 150 எம்பிபிஸ் வரை டவுன்லோட்
வசதி மற்றும் 50 எம்பிபிஸ் வரை அப்லோட் வசதி உண்டு.

தனிச் சிறப்புகள்:

* 4
ஜி LTE தொழில்நுட்பம்
*
மிக குறைந்த விலை
*
குவேரா மியூசிக் ஆப்
*
பேட்டரி ஸ்டான்ட்- பை டைம்
*
வைப் (Vibe)
*
குவேரா ஆப் (Guevara)

குறைகள்:

*
கஸ்டமர் சப்போர்ட் குறைவு.
*
ஆண்டிராய்டு ஓஎஸ் லாலிபாப் இதில் இல்லை.

போட்டியாளர்கள்:

ரெட்மீ நோட் 4ஜி மற்றும் மைக்ரோமேக்ஸ் யுரேகா ஆகியவை இதற்கு போட்டியாக அமையும்

விலை:

இந்த மொபைல் பிரத்யேகமாக பிளிப்கார்ட் ஆன்லைன்
ஸ்டோரில் மட்டுமே விற்பனைக்கு வரும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ₹ 10,680 ரூபாய் .
No comments:

Post a Comment