சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jan 2015

கூகுளுக்கு தெரியாதது என்ன?

இன்றைய ஹாட் டாபிக் ட்விட்டரில் என்னவென்றால் கூகுளுக்கு தெரியாதது என்ன #WhatGoogleDoesntKnow என்ற ஹாஷ் டேக் தான். வழக்கமாக அன்றைய நாளில் அதிகம் பேசப்பட்ட நபர், சினிமா, விளையாட்டு, நடப்பு ஆகியவை தான் டிரெண்டிங்கில் இடம் பிடிக்கும். ஆனால் இன்று ஆன இந்த டிரெண்ட் அனைவருக்கும் பிடித்து போக கூகுளுக்கு என்ன தெரியாது என சுவாரசியமாக ட்விட்ட துவங்கினர்.

இந்த ட்விட் ட்ரெண்டிங்கில் கடவுளின் முகவரி என்ன?  கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையாதது ஏன்? இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? வங்கி மேனேஜர்கள் சிரிப்பார்களா? இனி கிரிக்கெட்டில் ஹெலிகாப்டர் ஷாட் பார்க்க முடியுமா? 26 ரூபாயில் ஒருநாள் ஒருவரால் இந்தியாவில் வாழ முடியுமா?
மோடி இந்தியாவில் எப்போது இருப்பார்? என்பது போன்ற சுவாரஸ்யமான ட்விட்டுகளை தட்டி விட்டனர் ட்விட்டர் இணையவாசிகள்.


இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா ''நான் சர் ஜடேஜா என அழைக்கப்படுவது ஏன் என்று எனக்கே தெரியவில்லை? கூகுளுக்கும் தெரியாது என்று ட்விட்டியுள்ளார்''iதுபோன்று பல பிரபலங்களும் தங்கள் பங்குக்கு கூகுளுக்கு தெரியாத விஷயங்களை தட்டிவிட்டனர்.


ஆனால் சிலரோ இன்னும் விவரமாக இப்படி ஒரு ட்ரெண்டிங் ஆகும் என்று கூகுளுக்கு தெரியாது என்று ட்விட்டினர். எப்படியோ இன்றைய வைரலுக்கு சிக்கியது கூகுள் தான் என்று தன் பங்குக்கு ட்விட்டியது மில்லியன் ட்விட்களை மணிக்கணக்கில் தாண்டி உலக ட்ரெண்டானது #WhatGoogleDoesntKnow என்ற ஹாஷ் டேக்.


No comments:

Post a Comment