சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Dec 2015

அதிமுகவிலிருந்து நட்ராஜ் நீக்கம் ஏன்?:பரபரப்பு பின்னணித் தகவல்கள்!




சிலர் அந்த பேட்டியின் ஆடியோவையே அனுப்பி வைத்துள்ளனர். பொதுவாக இப்படியொரு பெரிய அளவிலான விவகாரம் என்றால் முதல்வர் பொறுப்பில் இருப்பவர்கள் மாநில உளவுத்துறையின் ஒப்பீனியனை தனிச் செயலாளரிடம் சொல்லி "ஹாட் - லைன்" மூலமாக நிமிட இடைவெளியிலேயே வாங்கிக் கொடுத்து விடுவார்கள். நட்ராஜ் நீக்கத்தின் போது முதல்வர்,  உளவுத்துறையின் ஒப்பீனியனை பெறவில்லை என்பதோடு,  "இப்படி நம்பிக்கை துரோகம் செய்து விட்டாரே" என்ற கோபத்தின் வேகத்தால் முதல்வர் தானே ஒரு முடிவுக்கு வந்து விட்டார். 

அதனால் தான் இதுவரையில் உளவுப்பிரிவின் அதிகாரிகள் மீது முதல்வர் "கோப நடவடிக்கை"யை கையில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. வைப் பொறுத்தவரை தலைமையின் கோபம் கொஞ்சமாக இருந்தால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட். கோப அளவு இன்னும் கொஞ்சம் கூடியதென்றால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடுத்து விடுவார்கள். எல்லையில்லா கோபம் என்றால்தான் நட்ராஜை செய்தது போல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு வரையில் காலி செய்து விடுவார்கள்.

நட்ராஜின் பதவி பறிப்பு பற்றி போலீஸ் வட்டாரத்தில் இன்னொரு தகவலும் ஓடுகிறது.  " அவருக்கு (நட்ராஜ்தான்) ஆகாதவங்க, அவரு பவர்ல இருக்கும் போது பாதிக்கப் பட்டவங்கன்னு கொஞ்ச பேரு போட்டுக் கொடுக்குற இடத்துல இருக்காங்க. அவங்க பண்ண வேலைதான் இது. அவங்க கிட்டேயிருந்து ரிப்போர்ட் வாங்காமல் இப்படி ஸ்ட்ராங் ஆக் ஷனை சி.எம். எடுத்திருக்க வாய்ப்பே இல்லை" என்கிறார்கள்.

இந்நிலையில் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் நடந்த சம்பவத்துக்கு மறுப்பும், வருத்தமும் தெரிவித்து நட்ராஜ் கையில் ஒரு கடிதத்தை கொடுத்து விட்டிருக்கிறது. அந்த கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு கார்டனின் அப்பாய்ண்ட் மெண்ட்டுக்காக காத்திருக்கிறாராம் நட்ராஜ்.     

கார்டனில் இருந்து மீண்டும் நட்ராஜூக்கு "பொறுப்பு" குறித்த ஆணை வழங்கப்படும் வேளையில் அடுத்தடுத்த பல சுவாரசியங்கள் அரங்கேறலாம் என்கிறார்கள்.


வாட்ஸ் அப் குரூப்புகளிலும்  நட்ராஜூக்கு கல்தா ?

அ.தி.மு.க. வின் அறிவிக்கப்படாத ஆனால் அதிகாரப் பூர்வமான மூன்று வாட்ஸப் குரூப்புகளை நட்ராஜ் அட்மினாக இருந்து நடத்தி வந்துள்ளார். அந்த குரூப்புகளில் இருந்த தீவிர அதிமுக செயற்பாட்டாளர்கள், அமைச்சர்கள் , மாவட்டங்கள் "நட்ராஜ் நீக்கம்" குறித்த அறிவிப்பு வந்ததுமே அந்த குரூப்களில் இருந்து அடுத்த நிமிடமே (லெப்ட் ஆகி)  வெளியேறி விட்டனராம்.

இதனால் குரூப் அட்மின் நட்ராஜ் தனித்து இருக்கிறாராம். மீண்டும் நட்ராஜ் , வாட்ஸப் அட்மின் பொறுப்புக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் அதிமுகவிலிருந்து திடீர் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு பின்னணித் தகவல்கள் பரபரக்கின்றன.
முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் முன்னாள் டி.என்.பி.எஸ்.சி. சேர்மனுமான ஆர்.நட்ராஜை அ.தி.மு.க.விலிருந்து ஜெயலலிதா நீக்க காரணமாக இருந்தது "அச்சு அலசல்" நிகழ்ச்சியின் ஆடியோ. 

டிவி யில் நட்ராஜ் "நேம் கார்டு" போட்டனர். ஆனால்  பேசிய குரலுக்குரியவர் பத்திரிகையாளர் நடராஜன்.        
"இந்த நட்ராஜூக்கு என்னாச்சு?  எவ்வளவோ பேர் சீனியாரிட்டியில் இருந்தும் அம்மா, இவருக்கு தேர்வாணைய தலைவர் பதவியை கொடுத்தாங்க.. ஆனா அதையெல்லாம் மறந்துட்டு இப்படி பண்ணிட்டாரே.." என்ற குமுறல் கேள்விகளுடன் போயஸ் கார்டனுக்கு போன்களும் பேக்ஸ் தகவல்களும் அதிமுகவினர்  மூலம் பறந்திருக்கின்றன.


No comments:

Post a Comment