சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Dec 2015

உலக ஆணழகன் பட்டத்தை வென்ற திருதராட்டிரன்!

மீன் போன்ற கண்களும், மெல்லிய இடையும், அழகிய நடையும் கொண்ட பெண்கள் மட்டும் தான் அழகா? உழைத்துப் புடைத்த தோள்களும், கரடு முரடான கால்களும், வலிகள் தாங்கும் ஆணின் மார்பும் கூட அழகு தான்.  ஐஸ்வர்யா உலக அழகி பட்டத்தை வென்றார் என்றால், இன்னொரு இந்தியர் உலக ஆணழகன் பட்டத்தை கைப்பற்றி வந்துள்ளார் அதுவும் நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு...


இரண்டாம் இந்தியர்

அண்மையில்  தாய்லாந்தில் நடந்த உலக பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 43 நாடுகளைச் 70 பாடி பில்டர்கள் பங்குபெற்றனர். அதில் இந்தியரான தாக்கூர் அனூப் சிங் தன் கட்டுமஸ்தான உடலால் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்த  பட்டத்திற்காக இறுதி சுற்றில் போட்டியிட்ட  இரு தாய்லாந்து பாடி பில்டர்களையும் சாய்த்து இந்த சாதனையை அவர் எட்டினார்.  இந்த பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியர் அனூப் .  மனோகத் என்பவர்  உலக ஆணழகன் பட்டத்தை வென்ற மற்றொரு இந்தியர் . 

தனது சாதனை குறித்து அனூப் சிங் கூறுகையில், “இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  இந்த வெற்றியின் வழியாக நமது மக்களுக்கு உடற்பயிற்சியின் அவசியத்தை உணர வைக்க வேண்டும். இந்த போட்டிக்காக சிறப்பாக தயாரயிருந்தேன். அதனால்  நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது''  என்கிறார். 

யார் இந்த அழகன்?
மும்பையைச் சேர்ந்தவரான அனூப், அடிப்படையில் ஒரு விமானி. கடந்த  2013ல் விமான நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்த போது, இவரும் வேறு வேலை தேடும் பணிக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவரது அழகான உடல் அமைப்பு காரணமாக  ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ கதையில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.  கண் தெரியாத அஸ்தினாபுர மன்னனரான திருதராட்டிரனின் பாத்திரத்தில் அனூப் நடித்தார்.


உண்மையான அழகன்
உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் தாக்கூர் அழகன் தான். பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து தெருநாய்க்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். '' நாய்கள் நமக்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் மன ஆறுதல் தரும். நான் அதிக நேரம் வீட்டில் இருப்பதில்லை. எனவே நான் வீட்டிற்குப் போனதும் எனது செல்ல நாய் ஓடி வந்து என் மீதி ஏறி வருடும். அப்போது எனக்குள் இருக்கும் எவ்வித அழுத்தமும் குறைந்து விடும்” எனக்கூறும் தக்கூர் கிரேட்டேன் ரக நாய் ஒன்றை  ஆசையுடன் வளர்க்கிறார். அதற்கு இவர் வைத்துள்ள பெயர் ஆஸ்கர்.
இப்போது  தாக்கூருக்கு பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலிருந்து பக்கங்களில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.  வாழ்த்துக்கள் அழகா!
 
வாழ்த்துக்கள் அழகா…!

No comments:

Post a Comment