மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் தலைவர்களின் படத்தை அச்சிட்டு விநியோகிக்க ஸ்டாலின் தடை விதித்துள்ள நிலையில், அதிமுகவினர் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா படம் போட்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணப் பொருட்களில் அதிமுக, திமுகவினர் தங்கள் தலைவர்களின் படங்களை அச்சிட்டு விநியோகித்து வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, திமுகவினர் வழங்கும் நிவாரணப் பொருட்களில் தலைவர்களின் படங்கள் இருக்ககூடாது என்று ஸ்டாலின் தடை விதித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கு சாட்சியாக, எழும்பூர், புதுப்பேட்டை பகுதியில் திமுக சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திமுக சார்பில்தான் நடத்தப்படுகிறதா என்று தெரியாத அளவிற்கு எங்குமே கட்சியின் கொடி, பேனர், தலைவர்கள் படங்கள் உள்ளிட்ட எதுவுமே காணப்படவில்லை. சாதாரண நிகழ்ச்சியாகவே இது நடத்தப்பட்டது.
இந்நிலையில், அதிமுக சார்பாக வெள்ள நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.சின்னச்சாமி மேற்பார்வையில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 5000 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக பாய், போர்வை, நைட்டி, டி-சார்ட், கைலி, குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் பால்பவுடர் ஆகிய ஏழு பொருட்கள் அடங்கிய ரூ.30 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பொட்டலங்களில் அனைத்திலும் முதல்வர் ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்தது.

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் , தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான போர்வை, கைலி, சேலை, நைட்டி, துண்டு, ரொட்டி, பிஸ்கட், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வேளச்சேரி, தி.நகர், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மேற்பார்வையில் நடைபெற்ற வெள்ள நிவாரணப் பொருட்களின் பொட்டலங்களிலும் ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்தது.
அமைச்சர் பா.வளர்மதி மேற்பார்வையில் ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் ரூ.50,000 மதிப்பில் 200 பேருக்கு பால் பவுடர், தட்டு, டம்ளர், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. கோடம்பாக்கம் ஜக்ரியா பகுதியில் சேலை, போர்வை, பால் பவுடர், பாய், தட்டு, டம்ளர், தண்ணீர் பாட்டில்கள் ஆகிய ஏழு பொருட்கள் 100 பேருக்கு மொத்தம் ரூ.40,000 மதிப்பில் வழங்கப்பட்டன. சூளைமேடு ரோடு, நேரு தெருவில், சேலை, பால் பவுடர், போர்வை, தட்டு, தண்ணீர், டம்ளர் 270 பேருக்கும், கோடம்பாக்கம் டிரஸ்ட்டுபுரம் பகுதியில் 200 பேருக்கும் வழங்கப்பட்டன.

இதேபோன்று விருகம்பாக்கம்-காமராஜ்புரம், அருந்ததி நகரில் 500 பேருக்கு பிஸ்கட், பால்பவுடர், குடிநீர், தட்டு போன்றவைகளையும், சூளைமேடு கில் நகரில் 2000 பேருக்கு சேலை, தட்டு, பிஸ்கட், குடிநீர், டம்ளர், ஸ்பூன் போன்றவைகளையும், நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் 200 பேருக்கு தலா ரூ.300 மதிப்பில் 5 கிலோ அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, 1 கிலோ கோதுமை மாவு, அரை கிலோ எண்ணெய் ஆகிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சென்னை கீழ் நடுவங்கரை பகுதியில் உள்ள இந்திரா நகர் மற்றும் நாதமுனி தெருவில் வசிக்கும் 500 மக்களுக்கு அமைச்சர் கோகுல இந்திரா, முதல்வர் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டிருந்த நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேற்பார்வையில் தாம்பரம், முடிச்சூர், மணிமங்கலம், பி.டி.சி. காலனி ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி 5 கிலோ, போர்வை, பாய், வேட்டி, சேலை, நைட்டி, கைலி, டவல், ஹார்லிக்ஸ் 200 கிராம், பால் படவுர், பிஸ்கட், டீ தூள், நாப்கின், குளியல் சோப்பு 2, வாஷிங் சோப்பு 2, பூஸ்ட் ஆகிய 18 பொருட்களை கொண்ட ஐம்பதாயிரம் பாக்கெட்டுகள் சுமார் 70 லாரிகள் வாயிலாக கொண்டுவரப்பட்டும் காய்கறிகள் 20 டன் லாரிகள் மூலம் எடுத்து வரப்பட்டு வழங்கப்பட்டன.
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய் - 3000, போர்வை - 1000, துண்டு, கைலி, நைட்டி, மெழுகுவர்த்தி மற்றும் 18 பொருட்களை கொண்ட பாக்கெட்டுகள் மூன்று லாரிகள் வாயிலாக ஆக மொத்தம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட அனைத்து நிவாரணப் பொருட்களிலும் முதல்வர் ஜெயலலிதா படங்கள் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment