சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Dec 2015

டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்துடன் மோதல்!

ஐ.சி.சி. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் போட்டித் தொடங்குகிறது. இந்திய அணி 'பி' பிரிவில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
இந்த போட்டியில்' ஏ ' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, தென்ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி 'பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் உள்ளன. 

தகுதி சுற்று ஆட்டத்தில் 'ஏ'  பிரிவில் வங்கதேசம், ஓமன், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளும் 'பி' பிரிவில் ஜிம்பாப்வே, ஹாங்காங், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளும் உள்ளன. இந்த இரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், சூப்பர் - 10 சுற்றுக்கு முன்னேறும். 

போட்டிகள் பெங்களுரு, சென்னை, தரம்சாலா, மொகாலி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, நாக்பூர் ஆகிய 9 நகரங்களில் நடைபெறுகின்றன.

மார்ச் 30, 31-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் ஏப்ரல் 3-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்திய அணியை பொறுத்தவரை மார்ச் 15-ம் தேதி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை நாக்பூரில் எதிர்கொள்கிறது. அடுத்து 19-ம் தேதி தரம்சாலாவில் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. தொடர்ந்து  மார்ச் 27 -ம் தேதி மொகாலியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுகிறது.


No comments:

Post a Comment