உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை துவம்சம் செய்தது. இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஜோ ரூட் சதமடிக்க அதற்கு பதிலடியா இலங்கை வீரர்கள் திரிமன்ணே, சங்கக்காரா சதமடித்து அசத்தினர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் மொயின் அலி 15 ரன்களிலும் இயார்ன் பெல் 49 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். பல்லான்ஸ் 6 ரன்களில் அவுட் ஆகி விட, அடுத்து இளம் வீரர் ஜோ ரூட் மோர்கன் ஜோடி பொறுப்பை உணர்ந்து நிதானமாக ஆடி ரன்களை உயர்த்தியது. எனினும் மோர்கன் நீண்ட நேரம் களத்தில் நீடிக்கவில்லை. 27 ரன்களில் பெரைரா பந்தில் அவர் வீழ்ந்து விட, அடுத்து வந்த ஜேம்ஸ் டெயிலர் ரூட்டுக்கு கைகொடுத்தார்.
ஜோ ரூட் அபாரமாக விளையாடி 100 பந்துகளை சந்தித்து சதமடித்தார். இதில் 10 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். ஒரு நாள் போட்டியில் ஜோ ரூட் அடிக்கும் 4வது சதமிது. மேலும் உலகக் கோப்பையில் சதமடித்த இளம் இங்கிலாந்து வீரர் என்ற புதிய சாதனையையும் ஜோ ரூட் படைத்தார்.
இறுதியில் ஜோ ரூட் 121 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். டெய்லர் தன் பங்குக்கு 25 ரன்களும் பட்லர் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 39 ரனகளையும் எடுத்தார். இதன் காரணமாக இங்கிலாந்து 310 என்ற கவுரவமான வெற்றி இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. இலங்கை தரப்பில் பந்து வீசிய அனைவருக்குமே தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
இறுதியில் ஜோ ரூட் 121 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். டெய்லர் தன் பங்குக்கு 25 ரன்களும் பட்லர் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 39 ரனகளையும் எடுத்தார். இதன் காரணமாக இங்கிலாந்து 310 என்ற கவுரவமான வெற்றி இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. இலங்கை தரப்பில் பந்து வீசிய அனைவருக்குமே தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
ஆனால், இலங்கை அணி இங்கிலாந்தின் இலக்கை பெரிய விஷயமாக கருதவில்லை. தொடக்க வீரர்கள் அலட்டிக் கொள்ளாமல் ஆடினார்கள். தில்சன் 44 ரன்கள் எடுத்து அலி பந்தில் மோர்கனிடம் பிடி கொடுத்தார். அடுத்து வந்த சங்கக்காரா திரிமன்ணேவுடன் இணைந்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். சங்கக்காரா 45 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து சங்கக்காரா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
திரிமன்ணே 117 பந்துகளில் சதமடித்தார். ஒருநாள் போட்டியில் இவர் அடிக்கும் 4வது சதமிது. உலகக் கோப்பையில் சதமடித்த இளம் இலங்கை வீரர் என்ற பெருமையும் திரிமன்ணேவுக்கு கிடைத்தது. திரிமன்ணேவைத் தொடர்ந்து சங்கக்காராவும் 100 ரன்களை அடித்தார். இதற்கு அவருக்கு 70 பந்துகள் தேவைப்பட்டது.
அதிரடியாக விளையாடிய இலங்கை அணி 47.2 ஓவர்களில் 312 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திரிமன்ணே 139 ரன்களை எடுத்தார். சங்கக்காரா அதிரடியாக விளையாடி 86 பந்துகளில் 117 ரன்கள் குவித்தார். இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகளை பெற்று கிட்டத்தட்ட காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி 3 தோல்வியுடன் 2 புள்ளிகளை ஈட்டி புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு இன்னும் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் மோத வேண்டியது உள்ளது. அந்த ஆட்டங்களில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment