விக்கெட் கீப்பருக்கு கையுறை எவ்வளவு முக்கியமோ...அது போல் விக்கெட்கீப்பிங் பேடும் மிக முக்கியம். நேற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது 'தல' தோனி தனது கீப்பிங் பேடை சக வீரரின் பாதுகாப்பு கருதி வழங்கி விட்டு, அவர் வெறுங்காலுடன் கீப்பிங் செய்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது
பெர்த்தில் நடந்த நேற்றைய ஆட்டத்தின்போது 14வது ஓவரை அஸ்வின் வீசிக் கொண்டிருந்தார். அப்போது, பந்து பயங்கரமாக எகிறத் தொடங்கியது. இந்த சமயத்தை சாதகமாக பயன்படுத்த நினைத்த தோனி, சில்லி பாயிண்டில் ரஹானேவை கொண்டு வந்து நிறுத்தினார். அந்த இடத்தில் வெறுங்காலுடன் பீல்டிங் செய்வது கடினமானது. கொஞ்சம் தப்பினாலும் பயங்கரமாக அடிபட்டுவிடக் கூடும்.
அதனால், நடுவரிடம் இன்னொரு விக்கெட் கீப்பிங் பேட் கொண்டு வர அனுமதி கேட்டார் தோனி. ஆனால் நடுவரோ, அடுத்த ஓவர் மாறும் போதுதான் கீப்பிங் பேட் கொண்டு வர அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, தான் கட்டியிருந்த விக்கெட்கீப்பிங் பேடை கழற்றி ரஹானேவிடம் கொடுத்து அதனை கட்டிக் கொண்டு பீல்டிங் செய்ய சொன்னார் தோனி.

தொடர்ந்து தோனி விக்கெட் கீப்பிங் பேட் இல்லாமல் விக்கெட் கீப்பிங் செய்தார். அந்த ஓவர் முடியும் வரை விக்கெட்கீப்பிங் பேட் அவர் அணியவில்லை. அடுத்த ஓவர் மாறும் போது மற்றொரு விக்கெட் கீப்பிங் பேட் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அதனை அணிந்து கொண்டார் தோனி.
சக வீரரின் பாதுகாப்புக்காக தனது விக்கெட் கீப்பிங் பேடை கொடுத்துவிட்டு அவர் வெறுங்காலுடன் பணியாற்றியதை கண்டு சக வீரர்கள், தோனி சூப்பர் 'தல'தான் என்கின்றனர்.
No comments:
Post a Comment