ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும்?
நீங்கள் அதிகம் பேசுபவராக இருக்கலாம் அல்லது குறைவாக பேசுபவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் பேசும் இடம் எது போன்றது என்பது மிகவும் அவசியம்.ஒரு நிறுவனத்தின் செயற்குழு கூட்டம் துவங்கி கட்சி பொதுக்கூட்டம் வரை அனைத்துக்குமே இப்படி தான் பேச வேண்டும் என்ற சில விதிகள் உள்ளன.
அதனை நீங்கள் மீறினால் உங்கள் பேச்சு தவறாகவும், சர்ச்சையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதிலும் ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும் என்பது முகவும் முக்கியம். என்ன பேச வேண்டும் என்பதை காட்டிலும், எப்படி பேச வேண்டும் என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது. ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும் என்பதை பார்ப்போம்.
1.சில வார்த்தைகளை பேசாதீர்கள்!
ம்...உங்களுக்கு தெரியும்....சரியாக சொல்லபோனால்...இப்படிபட்ட வார்த்தைகளை சிறப்பான கலந்துரையாடல்களில் தலைவர்கள் பேசுவதில்லை. கூற வேண்டிய விஷயத்தை நேரடியாகவும், தெளிவாகவும், சிறப்பான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்கள். உதாரணமாக நீங்கள் உற்று கவனித்தால் நாட்டின் அதிபர் / பிரதமர்களின் சிறப்பு தின உரைகளில் இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் பார்க்கவே முடியாது.உங்களுக்கு தெரியும் போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது அவசியம்.
2. தடுமாற்றம் கூடாது!
ஒரு பெரிய பொது நிகழ்ச்சியிலோ அல்லது நிறுவன கலந்தாய்வு கூட்டங்களிலோ பங்கேற்கும் போது உங்களது விளக்கங்கள் தெளிவானதாக இருப்பது அவசியம். ஆனால் நீங்கள் சொல்ல வந்த விஷயத்தில் ஒரு சிறிய தடுமாற்றம் இருக்கலாம். நீங்கள் தொடர்ச்சியாக பேச முடியாமல் போனால் நீங்கள் பேச வேண்டிய விஷயங்களில் உள்ள சிறப்பம்சங்கள் உங்களது தடுமாற்றத்தால் தவறான புரிதலுக்கு உள்ளாக நேரிடும்.
நீங்கள் பேசும் போது ஏதாவது ஒரு தவறான வார்த்தையை உபயோகித்துவிட்டு மன்னிப்பு கோருவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். பல மணி நேர உரை நிகழ்த்தும் கருத்தரங்கங்களிலும், பட்ஜெட் அறிவிப்புகளின் போது இந்தச் செயலை நீங்கள் கவனிக்கலாம். அவர்கள் ஒரு போதும் தடுமாற்றம் அடைய மாட்டார்கள்.
3. நான் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்!
உங்களது பேச்சுக்களின் போது நான் என்ற வார்த்தையை ஒரு தலைவனாக இருப்பவர் பயன்படுத்தவே கூடாது. நீங்கள் பயன்படுத்தினால் அது உங்கள் தலைமை பண்பை சோதிப்பதாக அமையும். பெரும்பாலான தலைவர்கள் தங்கள் உரையாடலில் நான் என்ற வார்த்தையை தவிர்த்திருப்பார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் பேச்சுகளை கேட்டிருந்தீர்கள் என்றால் அவரது பேச்சில் அணி அவரது ஆட்டத்தால் வெற்றி பெற்றால் கூட நான் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்.இதனை ஒரு தலைவராக இருப்பவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
4.சூழலை புரிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் எங்கு பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த இடத்தில் இருக்கும் மனிதர்களை குறிக்கும் விதமாகவும், அவர்களை சார்ந்த விஷயமாகவும் அது இருந்தால் உங்களது பேச்சை கவனிப்பார்கள்.நீங்கள் பேச்சை துவங்கும் போது சில மேற்கோள்களுடன் ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கலாம். அப்படி துவங்கும் போது எந்த பகுதியில் பேசுகிறீர்களோ ஒரு வார்த்தையை அந்த பகுதிக்கான பிராந்திய மொழியில் துவங்குங்கள்.
கொல்கத்தாவில் பேசும் போது பெங்கால் மொழியிலும், தமிழ்நாட்டில் பேசும் போது தமிழிலும் துவங்கினால் உங்கள் மீது ஒரு ஈர்ப்பு கவனிப்பவர்களுக்கு அதிகரிக்கும்.குறிப்பாக சமீப காலமாக நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டுக்கு சென்றாலும் ஒரு மேற்கோளுடன் பேச்சை துவங்குவதையும், அது அந்த நாட்டையும் இந்தியாவையும் இணைத்து பேசுவதாக இருப்பதையும் கவனித்திருப்பீர்கள். இது போன்ற விஷயங்களை ஒரு தலைவர் கடைப்பிடிக்க வேண்டும்.
5. தெளிவான முடிவு வேண்டும்!
உங்கள் பேச்சு ஏதோ ஒரு விஷயத்தில் ஆரம்பித்து ஏதோ ஒரு விஷயத்தில் முடிவதாய் இருக்க கூடாது. சரியான நோக்கத்தில் ஆரம்பித்து சரியான இலக்கை நோக்கி சென்று தெளிவான முடிவை கூறி முடிப்பதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் உங்கள் பேச்சு முழுமையான பேச்சாக இருக்கும். இதனை ஒரு தலைவனாக இருப்பவர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இது போன்ற நேரத்தில் உங்களது பேச்சு அனைவருக்கும் புரியும் விதமாகவும், சளிப்பை ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும்.
பெரும்பாலான தலைவர்கள் எழுதி வைத்து படிப்பதை பழக்கமாக கொண்டிருந்தாலும் அதனை வெளிக்காட்டாதவாறு இயல்பாக படிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். இதுவும் கூட ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய தகுதி தான்.குறிப்புகள் அவர்களது பேப்பரில் இருந்தாலும் அதனை பேசும் போது இயல்பாக பேசுவது தான் திறமை.
ஒரு தலைவனாக இருப்பவர் இந்த ஐந்து விஷயங்களை முக்கியமாக கவனத்தில் கொண்டால் அவரது பேச்சு சிறப்பானதாக அமையும்.
|
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
17 Mar 2015
ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment