போலீஸ்னா எப்பவுமே நமக்கு ஒரு மதிப்பு இருக்கோ, இல்லையோ, பயம் இருக்கு. ஆனா சினிமா போலீஸ் சிரிப்பு போலீஸா இருந்துருக்கே... லெட்ஸ் வெல்கம் டு தி சினிமா போலீஸ் ஸ்டேஷன்!
80-களில் வந்த படங்களில் கண்டிப்பா செந்தாமரையோ, கே.எஸ். கோபாலகிருஷ்ணனோதான் போலீஸ் உயர் அதிகாரியா இருப்பாங்க. கண்டிப்பா அவங்களுக்கும் கள்ளக்கடத்தல் வில்லனுக்கும் கள்ளத்தனமான டீலிங் இருக்கும். இது தெரியாம நம்ம ஹீரோவோ, ஹீரோவோட தங்கச்சியோ கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க. கள்ள போலீஸ், ஸ்காட்ச் விஸ்கி சாப்பிடுகிற வில்லன்கிட்ட இதைப் பற்றிச் சொல்ல, வில்லனும் முடிச்சுருனு காஸ்ட்லி சரக்கை கிளாஸோட உடைப்பார்.
80-களில் வந்த படங்களில் கண்டிப்பா செந்தாமரையோ, கே.எஸ். கோபாலகிருஷ்ணனோதான் போலீஸ் உயர் அதிகாரியா இருப்பாங்க. கண்டிப்பா அவங்களுக்கும் கள்ளக்கடத்தல் வில்லனுக்கும் கள்ளத்தனமான டீலிங் இருக்கும். இது தெரியாம நம்ம ஹீரோவோ, ஹீரோவோட தங்கச்சியோ கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க. கள்ள போலீஸ், ஸ்காட்ச் விஸ்கி சாப்பிடுகிற வில்லன்கிட்ட இதைப் பற்றிச் சொல்ல, வில்லனும் முடிச்சுருனு காஸ்ட்லி சரக்கை கிளாஸோட உடைப்பார்.
ஊரே பார்க்க ஹீரோ போலீஸ், வில்லனோட ஆளுங்களை அரெஸ்ட் பண்ணி லாக்கப்புல போட்ட உடனே ஒரு டயலாக் வரும். ‘நீ யார் ஆள் மேல கையை வெச்சுருக்கே தெரியுமா... அய்யாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா’னு சொல்வார் அடியாள் (பெரும்பாலும் பொன்னம்பலம் அல்லது தளபதி தினேஷ் வித் கலரிங் முடி). ‘போ உங்க அய்யாகிட்ட சொல்லு. அவருக்கும் இங்க இடம் இருக்குனு’ இதுதான் நம்ம ஹீரோவோட பதிலா இருக்கும் (ஏண்டா மங்குனி ஹீரோ, அவனை லாக்கப்புல அடைச்சுட்டே... அப்புறம் எப்படிடா அவன் போய் சொல்வான்?). உடனே ‘கிரிங் கிரிங்’னு லேண்ட்லைன் அலறும். ஹீரோ டென்ஷன் ஆக அடியாள் கூலா சிரிப்பார். போன் எடுத்தா, ‘யோவ் ராஜலிங்கத்தோட ஆளுங்களை எதுக்குய்யா அரெஸ்ட் பண்ணினே? ரிலீஸ் பண்ணுய்யா’ இது கமிஷனர். ஹீரோ டம்மி போலீஸ் ஆகி ரிலீஸ் பண்ணுவார் அடியாளுங்களை.
அடுத்த மீட்டிங் கமிஷனர் ஆபீஸ்லதான். ‘ராஜா... இப்போதானே வேலைக்கு சேர்ந்திருக்கீங்க. போகப் போக எல்லாம் பழகிடும்’னு சொல்வார் கமிஷனர். பல்லைக் கடிச்சு இதைக் கேட்டுட்டே ஹீரோ அந்த இடத்தை விட்டுப் போவார்னு நெனச்சீங்களா... கண்டிப்பா இல்ல. ‘இந்த காக்கி டிரெஸ்ஸை வெறும் உடுப்பா நெனைக்கல சார். என் உயிரா நெனைக்கறேன்’ னு மொக்கை டயலாக் சொல்வார். இதுக்கு பின்னணியில் ட்ரம்பட் சவுண்டு வேற.
இதெல்லாம் சொல்லி முடிச்சுட்டு அடுத்த சீன், வில்லனை அவர் இடத்திலேயே ஹீரோ சந்திப்பார். ‘தம்பி புதுசுல்ல, அதான் நம்மளைப் பத்தித் தெரியல. இளரத்தம். அதான் சூடா இருக்கு’ இப்படி சைலன்டா வில்லன் மிரட்டுவார். எதுக்கும் அசராத நம்ம போலீஸ் ஹீரோ, ஏதோ சோழ மன்னர் வரலாறை ஒப்பிக்கிற 6-ம் வகுப்பு பையன் மாதிரி, ‘இப்போதான் உன் பேர் ராஜலிங்கம். ஆனா நிஜப் பேர் மாயாண்டி (மாயாண்டி டு ராஜலிங்கம், எப்படிப் பார்த்தாலும் பொருத்தமே இல்லையே!). அப்பா பேர் தெரியாது. அம்மா ராயபுரத்துல பிராத்தல் பண்ணிட்டு இருந்தா. அரசியல் அடியாளா இருந்த நீ இப்போ அமைச்சர். நீ பண்ண மொத்த ஊழல் 56,890 கோடியே 90 பைசா’ னு சொல்லி முடிப்பார். அதையும் கொஞ்சம்கூட ரியாக்ஷனே இல்லாம ‘பரவால்லையே’ பாவனையில் பாராட்டுவார் வில்லன் (அடப் போங்கடா).
போலீஸை ஒண்ணும் பண்ண முடியலைனா இருக்கவே இருக்கு, ஹீரோவோட நாய்க்குட்டி. பெரும்பாலும் அது ஹீரோவோட பையனுக்கோ, பொண்ணுக்கோ செல்லமா இருக்கும். அதைப் போட்டுத் தள்ளிட்டு (சும்மா தொங்கிட்டு இருந்த குண்டு பல்பை ஏண்டா ஒடச்ச?) ஏதோ புலியை சுட்ட மாதிரி போன் போட்டுக் கலாய்ப்பாங்க வில்லனோட ஆளுங்க. ‘இப்போ இந்த நாயிக்கு ஏற்பட்டதுதான் நாளைக்கு உன் குடும்பத்துக்கும்’ னு மிரட்டல். நாய் என்னடா பாவம் பண்ணுச்சு. அது பாட்டுக்கு போட்ட சோத்தைத் தின்னுட்டு தூங்கிட்டு இருந்தது.
இன்னும் இருக்கு. இடம்தான் பத்தல... அட்டென்ஷன்!
No comments:
Post a Comment