சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Mar 2015

ஹிந்தியில் டிப்ஸ்: பேட்ஸ்மேன்களை குழப்பும் தோனியின் புது 'டெக்னிக்'

பேட்ஸ்மேன்களின் கால் நகர்த்தல்கள் குறித்து பந்துவீச்சாளர்களுக்கு ஹிந்தியில் டிப்ஸ் கொடுப்பதால் , எதிரணி பேட்ஸ்மேன்கள் நான் என்ன கூறுகிறேன் என்று புரியாமல் தவிப்பதாக இந்திய அணியின் தோனி தெரிவித்துள்ளார்.
                             

இந்த உலகக் கோப்பை போட்டியில் 5 எதிரணிகளையும் ஆல்அவுட் ஆக்கி, இந்திய அணி சாதித்துள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டி முடிந்தவுடன் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தோனி புகழாரம் சூட்டினார். இந்திய பந்துவீச்சு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து தோனி கூறுகையில், ''ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு மட்டுமல்ல சுழற்பந்து வீச்சும் எதிரணி வீரர்களை மிரட்டும் வகையில் முன்னேறியுள்ளது. அஸ்வின் ஆட்டத்தின் போக்குக்கு ஏற்ற வகையில் பந்து வீசும் திறமை படைத்தவர். ப்ளே ஆப் ஓவர்களில் அஸ்வினின் பந்துவீச்சு அபாரமாக உள்ளது. நெருக்கடியான நேரங்களில் அணிக்கு கைகொடுக்கும் பந்துவீச்சாளராக அஸ்வின்தான் திகழ்கிறார். 

பேட்ஸ்மேன்களின் கால்நகருவதை கண்டு, ஃப்ரெண்ட் பூட்டா, பேக் பூட்டா என்று கணித்து அதுபற்றி உடனே பந்துவீச்சாளர்களுக்கு ஹிந்தி மொழியில் கூறுவேன். அப்போது நான் என்ன கூறுகிறேன் என்று எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு புரியாது. அதே வேளையில் நமது பந்துவீச்சாளர்கள் நான் கூறுவதை கவனித்து அதற்கேற்றார் போல், பந்தை கையாள்வார்கள்'' என்றார். 

ஹிந்தி மொழி தெரிந்த வங்கதேச அணி வீரர்களுக்கு எதிரான போட்டியில் தோனியின் புது டெக்னிக் கைகொடுக்குமா? 



No comments:

Post a Comment