"மேடையில் அமர்ந்திருக்கும் மக்களின் முதல்வர்களே... இந்த கூட்டத்திற்கு திரளாக வந்திருக்கும் மக்களின் முதல்வர்களே... வந்தேறிகள் எல்லாம் மக்களின் முதல்வராக இருக்கும் போது, மக்களில் மக்களாக இருக்கும் நாம் ஏன் மக்களின் முதல்வராக இருக்க கூடாது" என்று விழுப்புரத்தில் நடந்த தி.மு.க எழுச்சி கூட்டத்தில் மக்களில் முதல்வருக்கு புது அர்த்தத்தை கண்டுபிடித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.
தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் எழுச்சி கூட்டத்தை நடத்தி வரும் நிலையில் விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன்.பிரசன்னா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பேசிய பொன்முடி, "போயஸ் தோட்டத்தில் உட்கார்ந்துக்கொண்டு மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் எல்லாம் எப்படி மக்களின் முதல்வராக முடியும். தளபதி பிறந்தநாளுக்கு தி.மு.க.வினர் ரத்ததானம் செய்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு மண்சோறு திண்கிறார்கள். தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் இன்னும் முதல்வர் நாற்காலியின் ஏன் அமரவில்லை தெரியுமா? அடுத்து அந்த நாற்காலியின் தளபதி தான் அமரபோகிறார் என்று ஓ.பி.எஸ்-க்கு தெரிந்துவிட்டது. அதனால் தான் அமர மறுக்கிறார்" என்றார்.

தமிழன். பிரசன்னா பேசும் போது, "தளபதி மிசா காலத்தில் சிறை சென்ற போது, ஜெயலலிதா ஒரு திருமண வீட்டில் 50 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தார். தளபதியின் சாதனைகளுக்காக நாங்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். ஜெயலலிதாவிற்கு ஏன் கொண்டாடுகிறார்கள். கோடி கோடியாய் பணம் வைத்திருப்பவரும், கல்லூரி, கட்டுமான நிறுவனம் நடத்துபவர் தி.மு.க தொண்டர் அல்ல. வாழ்நாளில் ஒருமுறையாவது சிறை சென்றவர் தான் உண்மையான தி.மு.க தொண்டன். தளபதியின் இயற்பெயர் அய்யாதுரை. ரஷ்யா கம்யூனிச தலைவர் ஸ்டாலின் மறைந்த செய்தியை கேட்ட உடன், கலைஞர் தளபதிக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார். கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தி.மு.கவுக்கு அல்ல. அது மக்களில் தோல்வி" என்றார்.
No comments:
Post a Comment