உலகக் கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர், வகாப் ரியாசுக்கும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஷேன் வாட்சனும் மைதானத்தில் மோதிக் கொண்டனர். இருவருக்குமிடையே வார்த்தை போர் வெடித்தது. மைதானத்தில் வகாப் ரியாஸ் ஸ்லெட்ஜிங் செய்வது போல நடந்து கொண்டார்
இதையடுத்து, நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக வகாப் ரியாசுக்கு 50 சதவீத போட்டி கட்டணமும் ஷேன் வாட்சனுக்கு 15 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இரு வீரர்களுமே ஏற்றுக் கொண்டதால் இந்த விவகாரம் மேல்முறையீடு இல்லாமல் முடிந்து விட்டது.
இந்நிலையில், வகாப் ரியாசுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கண்டனம் தெரிவித்துள்ளார். வாகப் களத்தில் நேர்மையாக செயல்பட்டார். அவருக்கு ஐ.சி.சி. அநீதி இழைத்துள்ளது. வாகாப் ரியாசுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை நான் கட்ட விரும்புகிறேன் என லாரா தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், உன் கையில் பேட் இல்லை... என்னிடம்தான் பேட் இருக்கிறது என்று தன்னைப் பார்த்து சொன்னதாக வகாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே கோபத்தில் அப்படி நடந்து கொண்டதாகவும் வாகாப் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment